சீரான உணவுத் திட்டத்தை பின்பற்றும் போது உடலில் பல அற்புதங்களும் ஆரோக்கியமும் ஏற்படுகின்றது. பழங்களை உணவு திட்டத்தில் சேர்க்கும் போது, அது நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களாகிய முக்கிய வைட்டமின்களாகவும், கார்போஹைட்ரேட்டுகளாகவும் மற்றும் கனிமங்களாகவும் உடலுக்கு உறுதியைத் தருகின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் பழங்களில் சிறிது கவனத்துடன் இருத்தல் நலம். ஏனெனில் பழங்கள் உடலுக்கு நலமாயினும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அது சில சமயம் எதிர்மறையாகி விடுகின்றது.
பழங்கள் நல்ல ஊட்டச்சத்து மற்றும் சக்தி தருவனவாகும். இவற்றில் நல்லவை தீயவை என்று பிரிக்க முடியாது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்து அளவில் தான் ஒவ்வொரு பழமும் வேறுடுகின்றது. இது ஒவ்வொருவரின் உடல் தேவைகேற்ப பலனை தருகின்றது. சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு பழமும் அவர்களின் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை மாற்றும் திறன் கொண்டவை. பாதுகாப்பின் அடிப்படையில் ஒரு சில பழங்களை உண்ணாமல் இருப்பது நல்லது ஏனெனில் இரத்தத்தின் சர்க்கரை அளவை அது மோசமான அளவிற்கு உயர்த்தக்கூடும்.
பெரும்பான்மையான பழங்கள் அவைகளின் சர்க்கரை அளவின் படி தான் பிரிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழத்தை உண்ணும் முன் அதன் GI குறியீட்டு எண்ணை (Glycemic Index) கண்டறிந்த பின் உண்ண வேண்டும். GI குறியீடு என்பது கிளைசீமிக் குறியீட்டைக் குறிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைவான அளவுள்ள குறியீட்டை கொண்ட பழங்களை உண்பது நல்லது. ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் ஆகியவைகளில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக உட்கொள்ளலாம்.
மாம்பழம்
பழங்களின் ராஜா என்று கூறப்படும் மாம்பழம் உலகிலேயே அதிக சுவை மிகுந்த ஒரு பழமாக விளங்குகிறது. ஆனால் அப்பழத்தில் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும்.
சப்போட்டா
இந்த பழத்தில் GI குறியீட்டு எண் 55 க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது.
திராட்சை
நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. 3 அவுன்ஸ் கொண்ட திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
அன்னாசி
இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
சீத்தாப்பழம்
வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இதையும் தவிர்க்க வேண்டும். 100 கிராம் சீத்தாப்பழத்தில் 23 கிராம் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
ஆப்ரிக்காட்
இப்பழத்தின் கிளைசீமிக் குறியீட்டு அளவு 57 ஆக உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தையும் தவிர்க்க வேண்டும். அரை கப் ஆப்ரிக்காட் பழத்தில் 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
வாழைப்பழம்
அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதன் GI 46 முதல் 70 வரை உள்ளது. முழுவதும் பழுத்த வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
தர்பூசணி
குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் சர்க்கரை மட்டும் 72 GI அளவிற்கு உள்ளது. இப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் அதிகமாக உள்ளன. அரை கப் தர்பூசணியில் 5 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
பப்பாளி
59 GI உடைய இப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவு ஏறாத வன்னம் உண்ணுதல் உகந்தது.
கொடிமுந்திரி
சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். 103 GI மதிப்பு கொண்ட இப்பழத்தில் கால் பங்கு அளவிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
No comments:
Post a Comment