அதை சரிசெய்ய இதோ வழிகள்
கோடைக்காலம் வந்தாலே பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் வியர்குரு. இவ்வாறு வியர்குரு வந்தால் அது எரிச்சலுடன், வலியையும் ஏற்படுத்தும். இந்த வியர்குரு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான வியர்வை தான். இப்படி வியர்வையானது முகம், கழுத்து, மார்பகம், முதுகு போன்ற இடங்களில் தான் அதிகம் வரும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு தான் வியர்குரு அதிகம் வரும். ஏனெனில் அவர்களின் மிகவும் மிருதுவாக இருப்பதனாலேயே தான். ஆகவே பலர் இந்த வியர்குருவை போக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த வியர்குருவை பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல், இயற்கை வழிகளின் மூலம் எளிதில் சரிசெய்யலாம்.

இங்கு
குத்தும் வியர்குருவை சரிசெய்வதற்கான சில எளிய இயற்கை வழிகள்
கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை பின்பற்றி சருமத்தை பாதுகாத்துக்
கொள்ளுங்கள்.
ஓட்ஸ்
வியர்குருவைப் போக்குவதில் ஓட்ஸ் மிகவும் சிறந்த பொருள். எனவே குளிக்கும் போது ஓட்ஸ் பவுடரை நீரில் சிறிது போட்டு குளித்து வாருங்கள். இதனால் வீக்கங்களுடன், அரிப்புக்களும் குணமாகும்.
டால்கம் பவுடர்
பெரும்பாலானோர் வியர்குருவைத் தடுக்க பயன்படுத்துவது டால்கம் பவுடர் தான். அதிலும் குளித்து முடித்த பின்னர், நறுமணம் இல்லாத டால்கம் பவுடரை பயன்படுத்துங்கள்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை வியர்குரு வருவது போன்று இருக்கும் போதே சருமத்திற்கு பயன்படுத்தினால், வியர்குரு வருவதைத் தடுக்கலாம்.
ஐஸ் கட்டி
குளிர்ச்சியான ஐஸ் கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால், வியர்குரு தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
கார்ன் ஸ்டார்ச்
கார்ன் ஸ்டார்ச் அல்லது சோள மாவை நீர் கலந்து பேஸ்ட் செய்து, அதனை வியர்குரு உள்ள இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரால் கழுவினால், வியர்குரு உதிர்ந்துவிடும்.
மார்கோசா இலைகள் (Margosa leaves)
மார்கோசா இலைகளை தண்ணீர் சேர்த்து அரைத்து, அதனை குத்தும் வியர்குரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், எரிச்சலூட்டும் வியர்குருவை விரட்டலாம்.
உடுத்தும் உடைகள்
எவ்வளவு தான் ஃபேஷன் இருந்தாலும், கோடையில் லூசான காட்டன் உடைகளை உடுத்தினால், வியர்வையானது சருமத்தில் தங்குவதை தடுத்து, வியர்குரு வருவதை தடுப்பதுடன், வியர்குரு இருந்தாலும் விரைவில் நீங்கிவிடும்.
தண்ணீர்
கோடையில் வியர்குரு பிரச்சனை இருக்கும் போது, தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வியர்குரு வருவதைத் தடுக்கலாம். பொதுவாக வியர்குருவானது, உடலில் வியர்வை வெளியேறும் அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டால் தான் வரும். ஆகவே தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வியர்குரு வருவதைத் தடுக்கலாம்

No comments:
Post a Comment