Monday, 9 June 2014

உங்களுக்கு பிடித்த பானி பூரியை வீட்டிலேயே செய்வது எப்படி.?


பூரிக்கு...
ரவை - 1/2 கப் மைதா - 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு
பானிக்கு...
கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது பச்சை மிளகாய் - 2-3 புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்) எலுமிச்சை - 1 (சாறு எடுத்துக் கொள்ளவும்) மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - 1 1/2 லிட்டர்
மசாலா...
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது) மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மாங்காய் தூள் - 1 டீஸ்பூன் ப்ளாக் சால்ட் - 1 டீஸ்பூன் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் மிளகு மற்றும் சீரகத்தை நன்கு பொடி செய்து கொண்டு, பின் கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 1 1/2 லிட்டர் நீரில் ஊற வைத்துள்ள புளியை நன்கு கரைத்து, நீரை வடித்து, அந்த நீரில் அரைத்து வைத்துள்ள மல்லி பேஸ்ட், மிளகு மற்றும் சீரகப் பொடி சேர்த்து கலந்து, அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மைதா, ரவை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பூரி பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, மாங்காய் தூள், ப்ளாக் சால்ட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒவ்வொரு பூரியாக எடுத்து, அதனுள் உருளைக்கிழங்கு மசாலா வைத்து, பானி ஊற்றி பரிமாறினால் பானி பூரி ரெடி..

Tuesday, 3 June 2014

கொசு, ஈ பூச்சிகளை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்


* கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள், வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடம்புக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
* சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டிஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்துவிட்டால் ஈ மொய்க்காது.
* வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் பாச்சை உருண்டை ஓன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி எட்டியே பார்க்காது.
* எறும்பு பவுடர் போடும்போது அதை அப்படியே தூவி வைத்தால் மின்விசிறி சுற்றும்போது காற்றில் பறந்து சாப்பாட்டில் கூட கலந்து விடலாம். அதனால் எறும்பு பவுடரை மண்ணெண்ணையில் குழைத்து பூசி விட்டால் எறும்பும் வராது, அதிக பவுடரும் ஆகாது.
* கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் வௌ¢ளைப் பூண்டை நசுக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி சிதறி இருக்கும்படி போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஒழிந்துவிடும்.
* தேங்காய் எண்ணையில் கற்பூரத்தை கலந்து அதை பிரஷ் ஒன்றினால் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் மீது தடவி வந்தால் மூட்டை பூச்சிகள் ஒழிந்து விடும்.
* விஷ வண்டுகள் கொட்டினால் அந்த இடத்தில் துளசி இதழ்களை கசக்கித் தேய்த்தால் விஷம் முறிந்து, வலி குறையும்.
* பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே 3 கிராம்பை வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட வேண்டும். அரிப்பு நிற்கும். தேனி ,குளவி கடித்து பெரியதாக வீங்கினாலும் சரியாகி விடும். கடிப்பட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
* தேன் கொட்டினால் கொட்டிய இடத்தில் சுண்ணாம்பு தடவ வேண்டும். 3 கிராமகளை மென்று சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும். கொட்டிய இடம் வீங்கினாலும் வற்றிவிடும். மஞ்சளையும், சுண்ணாம்பையும் கலந்து கடிவாயில் தடவினால் வலியும், வீக்கமும் மறைந்துவிடும்.
* வேப்பிளையை சுத்தம் செய்து, கழுவி நிழலில் உலர வைத்து, அரைத்து உடம்பிற்கு தேய்த்து குளித்தால் சரும நோய்கள் வராது.
* பாசிப்பயறுடன் பொடுதலை இலையையும் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளித்தால் உடம்பு பளபளப்புடன் இருப்பதுடன் தேகத்தில் சொரி, சிரங்கு, படை போன்ற சரும நோய்கள் வராது