Friday, 25 December 2015

ஒரே மாதத்தில் தொப்பையைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டியவை!



தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமானது என்று நினைத்து முயற்சியைக் கைவிடாதீர்கள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கொழுப்புச் செல்களைக் கரைக்க, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு உதவுவது ஒருசில பானங்கள் தான்.


அந்த பானங்கள் என்னவென்று தெரிந்து, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்ஸின்களும் வெளியேறும்.


மேலும் வெறும் வயிற்றில் அந்த பானங்களைக் குடிப்பதால், எளிதில் அந்த பானங்களில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு, கொழுப்புச் செல்களைக் குறைக்கும் பணி வேகமாக்கப்படும். சரி, இப்போது தொப்பையை ஒரே மாதத்தில் கரைக்க உதவும் அந்த பானங்கள் என்னவென்று பார்ப்போம். அந்த பானங்கள் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது என்பதால் தைரியமாக நீங்கள் பின்பற்றலாம்.


மிளகு தண்ணீர்


ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இது குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனால் மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களைக் கரைக்கும். மேலும் இந்த பானம் நுரையீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றவும் உதவும்.


இஞ்சி தண்ணீர்


இஞ்சி தண்ணீர் உடலினுள் உள்ள எடையை அதிகரிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, பகல் வேளையில் கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் சிறிது இஞ்சியை துருவிப் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


மஞ்சள் தண்ணீர்


காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் டாக்ஸின்கள் வெளியேறி, உடலினுள் அழற்சியினால் ஏற்பட்ட வீக்கம் குறையும். மேலும் மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழித்து, உடலுக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.


எலுமிச்சை தண்ணீர்


ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர, அதில் உள்ள அமிலங்கள் மற்றும் இதர சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புக்கள் கரைய வழிவகுக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் குடித்து 1 மணிநேரம் கழித்து தான் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.


ஆப்பிள் சீடர் வினிகர்


காலை உணவு உண்பதற்கு முன், ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரைத்து உடல் எடை குறைவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் இருக்கலாம். மேலும் இந்த பானம் செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.

Saturday, 5 December 2015

மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்



இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள்.
ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தால், தொப்பையின் அளவு குறைவதை நன்கு காணலாம்.
சரி, இப்போது மூன்றே நாளில் தொப்பையைக் குறைக்க உதவும் அந்த ஜூஸ் என்னவென்றும், அந்த ஜூஸில் சேர்க்கப்படும் பொருட்களில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றியும் பார்ப்போமா!!!
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருளும் கூட.
எலுமிச்சை, எலுமிச்சங்காய்
எலுமிச்சை மற்றும் எலுமிச்சங்காயில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.
புதினா
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
இஞ்சி
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்கள், குடிக்கும் பானங்களில் இஞ்சியை சேர்த்துக் கொண்டு வந்தனர். அப்படி இஞ்சியை சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.
தண்ணீர்
தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கும். மேலும் நீரை அதிக அளவில் தொடர்ந்து குடித்து வந்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும்.
குறிப்பு
மேற்கூறிய பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தினமும் குடித்து வந்தால், 3 நாட்களில் தொப்பை குறைவதை நன்கு காணலாம். அதற்காக மூன்றே நாட்களில் தொப்பை முற்றிலும் குறையாது. தினமும் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காண முடியும்.
ஜூஸ் செய்யும் முறை
1 வெள்ளரிக்காய்
5 எலுமிச்சை
1 எலுமிச்சங்காய்
15 புதினா இலைகள்
2 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி
2.5 லிட்டர் தண்ணீர்
வெள்ளரிக்காய், 1 எலுமிச்சங்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்ட வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் புதினாவை நறுக்கி போட்டு, அதில் 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் இஞ்சி மற்றும் மீதமுள்ள தண்ணீரை ஊற்றி, அத்துடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்கு கிளறி, 24 மணிநேரம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.
இப்படி 3 நாட்கள் தொடர்ந்து செய்து குடித்து வந்தால், தொப்பை குறைவதைக் காணலாம். வேண்டுமெனில் இந்த செயலை ஒரு வாரம் கழித்து மீண்டும் 3 நாட்கள் தொடரலாம்.

Thursday, 19 November 2015

பயனுள்ள இணையதளங்கள்...!


சான்றிதழ்கள் :-


1) பட்டா / சிட்டா அடங்கல்

http://taluk.tn.nic.in/edistrict_certific…/…/chitta_ta.html…


2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட

http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta


3) வில்லங்க சான்றிதழ்

http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0


4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்

http://www.tn.gov.in/appforms/birth.pdf


http://www.tn.gov.in/appforms/death.pdf


5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்

http://www.tn.gov.in/appforms/cert-community.pdf


6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்

http://www.tn.gov.in/appforms/cert-income.pdf


C. E-டிக்கெட் முன் பதிவு


1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு

http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/


http://www.irctc.co.in/


http://www.yatra.com/


http://www.redbus.in/


2) விமான பயண சீட்டு

http://www.cleartrip.com/


http://www.makemytrip.com/


http://www.ezeego1.co.in/


D. E-Payments (Online)


1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி

http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx


2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி

https://www.oximall.com/


http://www.rechargeitnow.com/


http://www.itzcash.com/


3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி

http://www.itzcash.com/


https://www.oximall.com/


http://www.rechargeitnow.com/


4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி


5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி

http://www.ebay.co.in/


http://shopping.indiatimes.com/


http://shopping.rediff.com/shopping/index.html


6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி

http://www.icicidirect.com/


http://www.hdfcsec.com/


http://www.religareonline.com/


http://www.kotaksecurities.com/


http://www.sharekhan.com/


E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)


1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்

https://www.sbi.co.in/user.htm


http://www.indianbank.in/education.php


http://www.iob.in/vidya_jyothi.aspx


http://www.bankofindia.com/eduloans1.aspx


http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp


http://www.axisbank.com/…/loa…/studypower/Education-Loan.asp


http://www.hdfcbank.com/…/education…/el_indian/el_indian.htm


2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

http://www.tn.gov.in/dge/


http://www.tnresults.nic.in/


http://www.dge1.tn.nic.in/


http://www.dge2.tn.nic.in/


http://www.Pallikalvi.in/


http://www.results.southindia.com/


http://www.chennaionline.com/results


3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய

http://www.tn.gov.in/dge


4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி

http://www.classteacher.com/


http://www.lampsglow.com/


http://www.classontheweb.com/


http://www.edurite.com/


http://www.cbse.com/


5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய

http://www.kalvisolai.com/


6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி

http://www.tnpsc.gov.in/


http://www.tnpsctamil.in/


http://www.upsc.gov.in/


http://upscportal.com/civilservices/


http://www.iba.org.in/


http://www.rrcb.gov.in/


http://trb.tn.nic.in/


http://www.tettnpsc.com/


7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி

http://www.employmentnews.gov.in/


http://www.omcmanpower.com/


http://www.naukri.com/


http://www.monster.com/

.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய

http://www.ssbrectt.gov.in/


http://bsf.nic.in/en/career.html


http://indianarmy.nic.in/


9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய

http://nausena-bharti.nic.in/


10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி

http://www.skype.com/


http://www.gmail.com/


http://www.yahoochat.com/


http://www.meebo.com/


F. கணினி பயிற்சிகள் (Online)


1) அடிப்படை கணினி பயிற்சி

http://www.homeandlearn.co.uk/


http://www.intelligentedu.com/


http://www.ehow.com/about_6133736_online-basic-computer-tra


2) சிறார்களுக்கு கணினி பயிற்சி

http://www.ehow.com/video_5846782_basic-computer-training-c


3) இ – விளையாட்டுக்கள்

http://www.zapak.com/


http://www.miniclip.com/


http://www.pogo.com/


http://www.freeonlinegames.com/


http://www.roundgames.com/


4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்

http://www.google.com/


http://www.wikipedia.com/


http://www.hotmail.com/


http://www.yahoo.com/


http://www.ebuddy.com/


http://www.skype.com/


G. பொது சேவைகள் (Online)


1) தகவல் அறியும் உரிமை சட்டம்

http://rti.gov.in/


http://www.rtiindia.org/forum/content/


http://rti.india.gov.in/


http://www.rti.org/


2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி

http://www.incredibleindia.org/


http://www.india-tourism.com/


http://www.theashokgroup.com/


http://www.smartindiaonline.com/


3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி

http://www.tamilmatrimony.com/


http://kalyanamalai.net/


http://www.bharatmatrimony.com/


http://www.shaadi.com/


4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய

http://www.tamilcube.com/


5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள

http://www.koodal.com/


http://freehoroscopesonline.in/horoscope.php


6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி

http://www.way2sms.com/


7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்

http://www.youtube.com/

இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்

http://www.justdial.com/


9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்

http://www.dinamalar.com/


http://www.dinamani.com/


http://www.dailythanthi.com/


http://www.tamilnewspaper.net/


http://www.vikatan.com/


http://www.puthiyathalaimurai.com/


http://www.nakkheeran.in/


10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்

http://puthiyathalaimurai.tv/new/


http://www.bbc.co.uk/


11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்

http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx


12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.

http://www.indiapost.gov.in/tracking.aspx


H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய


1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்

http://www.filehippo.com/


I. வணிகம் (Economy)


1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்

http://www.goldenchennai.com/


http://www.rates.goldenchennai.com/


http://www.bullionrates.in/p/live-bullion-rates.html


2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்

http://www.gocurrency.com/


http://www.xe.com/


H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)


1) பாஸ்போர்ட் விண்ணப்பம்

http://www.passport.gov.in/


2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய

http://www.tn.gov.in/services/employment.html


J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)


1) குடும்ப அட்டை

http://www.tn.gov.in/appforms/ration.pdf


2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்

http://www.tn.gov.in/…/appforms/soci…/wses_bankloan_form.pdf


3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

http://www.tn.gov.in/…/socialwelfa…/socialwelfareschemes.pdf


4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு

http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf


5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு

http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf


http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf


6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்

http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf


7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்

http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc


http://www.tnreginet.net/…/Comp_Marriage_Application_Tamil.…

பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்

http://www.tn.gov.in/tamilt…/appforms/pdf-patta-transfer.pdf


K. விவசாய சந்தை சேவைகள் (Online)


1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்

http://agmarknet.nic.in/


2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி

http://indg.in/agricu…/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/


3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்

http://nhb.gov.in/OnlineC…/categorywiseallvarietyreport.aspx


4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்

http://indg.in/agriculture/major-traders-database/


5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்

http://indg.in/…/database-of-growers-federations-farmers-a…/


6) கொள்முதல் விலை நிலவரம்

http://www.tnsamb.gov.in/price/login.php


7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்

http://www.tnsamb.gov.in/mktcom.php

தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்

http://59.90.246.98/pricelist/


9) வானிலை செய்திகள்

http://services.indg.in/weather-forecast/


L. தொழில் நுட்பங்கள்


1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்

http://www.agritech.tnau.ac.in/…/Agricul…/agri_index_ta.html


http://www.agritech.tnau.ac.in/…/crop_pro…/crop_prot_ta.html


2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்

http://www.tnagrisnet.tn.gov.in/we…/availabilityReports.php…


3) உயிரிய தொழில்நுட்பம்

http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html


4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்

http://www.agritech.tnau.ac.in/…/post_…/post_harvest_ta.html


5) உயிரி எரிபொருள்

http://www.agritech.tnau.ac.in/…/bio_fuels/bio_fuels_ta.html


M. வேளாண் செய்திகள்


1) பாரம்பரிய வேளாண்மை

http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html


http://www.agritech.tnau.ac.in/…/crop_pro…/crop_prot_ta.html


2) வளம்குன்றா வேளாண்மை

http://www.agritech.tnau.ac.in/…/sustainabl…/susagri_ta.html


3) பண்ணை சார் தொழில்கள்

http://www.agritech.tnau.ac.in/…/farm_en…/farm_enter_ta.html


4) ஊட்டச்சத்து

http://www.agritech.tnau.ac.in/…/nutrition/nutrition_ta.html


5) உழவர்களின் கண்டுபிடிப்பு

http://www.agritech.tnau.ac.in/…/farm…/farm_innovations.html


N. திட்டம் மற்றும் சேவைகள்


1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்

http://www.tnrd.gov.in/schemes_states.html


2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்

http://www.agritech.tnau.ac.in/…/…/govt_serv_schemes_ta.html


3) வட்டார வளர்ச்சி

http://www.agritech.tnau.ac.in/…/dev_blo…/indextnmap_ta.html


4) வங்கி சேவை & கடனுதவி

http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm


5) பயிர் காப்பீடு

http://www.agritech.tnau.ac.in/…/crop_insu…/crop_ins_ta.html


6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)

http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html


http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html


7) NGOs & SHGs

http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html

அக்ரி கிளினிக்

http://www.agriclinics.net/


9) கிசான் அழைப்பு மையம்

http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html


10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்

http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html


11) கேள்வி பதில்

http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html


12) பல்கலைக்கழக வெளியீடுகள்

http://www.agritech.tnau.ac.in/…/tnau_…/tnau_publish_ta.html


O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்


1) தோட்டக்கலை

http://www.agritech.tnau.ac.in/…/hortic…/horti_index_ta.html


2) வேளாண் பொறியியல்

http://www.agritech.tnau.ac.in/…/agr…/agriengg_index_ta.html


3) விதை சான்றிதழ்

http://www.agritech.tnau.ac.in/…/seedcertification_index_ta…


4) அங்கக சான்றிதழ்

http://www.agritech.tnau.ac.in/…/org_…/orgfarm_index_ta.html


5) பட்டுபுழு வளர்பு

http://www.agritech.tnau.ac.in/…/sericul…/seri_index_ta.html


6) வனவியல்

http://www.agritech.tnau.ac.in/…/…/forestry_tamil_index.html


7) மீன்வளம் மற்றும் கால்நடை

http://www.agritech.tnau.ac.in/…/fisheri…/fish_index_ta.html

தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்

http://services.indg.in/weather-forecast/


9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்

http://www.tnsamb.gov.in/seedcomp.html


http://www.tnsamb.gov.in/fertilizers.html


10) உரங்களின் விலை விபரம்

http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php


P. போக்குவரத்து துறை


1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு

http://www.tn.gov.in/appforms/form2.pdf


2) புகார்/கோரிக்கைப் பதிவு

http://transport.tn.nic.in/transpo…/registerGrievanceLoad.do


3) வாகன வரி விகிதங்கள்

http://www.tn.gov.in/sta/taxtables.html


4) புகார்/கோரிக்கை நிலவரம்

http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do


5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு

http://tnsta.gov.in/transport/transportTamMain.do


6) தொடக்க வாகன பதிவு எண்

http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do

Tuesday, 17 November 2015

பல் நோய்களுக்கு தீர்வு தரும் பாட்டி வைத்தியம்

பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம், பல்கூச்சம், வாய்நாற்றம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பல் சம்பந்தமான பிரச்னைகள் குறையும்.

தேவையான பொருட்கள்: ஆலமரப்பட்டை, சர்க்கரை

செய்முறை: ஆலமரப்படையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பல் நோய்கள் குறையும். ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் சீழ் உண்டாதல், ஈறுகளில் கட்டி ஏற்படுதல் ஆகியவற்றால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு நெல்லிக்காயை தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய்.

செய்முறை: நெல்லிக்காயை கழுவி தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதி பெறும். பல் கூச்சம், பற்களில் கிருமிகளால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருள்கள்: வேப்பிலை, உப்பு.

செய்முறை: வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் குறையும். பல்லில் சீழ் வடிதலால் ஏற்படும் பல்வலி பிரச்னைக்கு கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.

தேவையான பொருள்கள்: கருவேலம் மரப்பட்டை, கடுகு எண்ணெய், உப்பு.

செய்முறை: கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.பல்சொத்தை மற்றும் கிருமிகளால் ஏற்படும் பல் சம்பந்தமான நோய்கள் பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் குறையும்.

தேவையான பொருட்கள்: பூந்தி கொட்டை, உப்பு.

செய்முறை: பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் குறையும்.

Thursday, 12 November 2015

காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு!



குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.


* துளசி கஷாயம்


சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.


* பனங்கற்கண்டு பால்


ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.


* பொட்டுக்கடலை மிக்ஸ்


புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன்கள், சிறிது கல் உப்பு, 5 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும்.


* தேங்காய்ப்பூ லேகியம்


ஒரு மூடி தேங்காய்ப்பூவை வெறும் சட்டியில் வதக்கிக்கொள்ளவும். சிறிது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, நெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் வதக்கிய தேங்காய்ப்பூ, 50 கிராம் பனங்கற்கண்டை சேர்த்து வதக்கவும். லேகியம் பதத்தில் வரும் இதை அப்படியே சாப்பிடலாம். ருசியாக இருக்கும் இந்த லேகியத்தை, குழந்தைகளுக்கு உருண்டைகளாகச் செய்து கொடுக்கலாம்.


மேற்கூறிய கை வைத்தியங்களைச் செய்து பாருங்கள்... சளி, இருமல் கட்டுப்படுவதுடன், வெளியேறிவிடும்

மழைக்கால சளியை போக்கும் கருந்துளசி!



இந்திய மருத்துவத்தில் துளசிக்கு தனி மகத்துவம் உண்டு. சளி, காய்ச்சல், அலர்ஜி போன்றவைகளை நீக்கும் ஆயுர்வேத நிவாரணி துளசி. இதனால்தான் பண்டைய காலங்களில் இருந்து இன்றைக்கும் வீடுகளில் துளசிமாடம் வைத்து வணங்கி வருகின்றனர்.

மலைக்காலம் வந்தாலே சளித் தொந்தரவுகளும், தண்ணீர் அலர்ஜியும், அதிகம் ஏற்படும். இதற்கு . மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு சளித்தொல்லையானது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும்.


பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், வேதனையை உண்டாக்குகிறது.


நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காகவே சளியானது இயற்கையாக உடலில் சுரக்கிறது. இது அளவிற்கு மீறி பெருகும் போது அதனை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.


அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி. கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும்.


துளசி இலைகளை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.


தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள். மேலும் சளித் தொந்தரவினால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகளை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.



Wednesday, 5 August 2015

CLIXSENSE



பகுதி நேர வேலை ! வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ! ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ! உங்கள் திறமைக்கேற்ற வேலை ! சில மாதங்களில் ஆயிரக்கணக்கிற்கு மேல் சம்பாதிக்கும் வாய்ப்பு ! உங்களுக்கு நான் வழி காட்டுகிறேன்.

ஆன்லைனில் சம்பாதிப்பது சுலபம் தான் .. அதற்கு தேவை, விடாமுயற்சியும் , தன்னம்பிக்கையும் மட்டுமே.

நம்மில் பலருக்கு எந்தவித முதலிடும் இருக்க கூடாது அதே சமயம் சேர்ந்த உடனே வருமானம் பெறவேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலும் உள்ளது. இது அப்படி சாத்தியம் நண்பர்களே ..!

எந்த ஒரு பணி செய்தலும் அதில் வெற்றி பெற நமக்கு சில நாட்கள் ஆகும் இதுவே நிஜம்..!

இதில் சம்பாதிக்க நீங்கள் கிழே உள்ள Link இல் Register செய்யுங்கள் நண்பர்களே !!!

கிழே உள்ள வழிமுறை பின்பற்றவும் ..உங்களுக்காக எளிமையான முறையில் கிழே பதிவிடுகீரேன் :

1) கிழே உள்ளதை கிளிக் செய்யவும்
http://csl.ink/QRT

http://www.clixsense.com/?7817754

https://www.paidverts.com/ref/prasadp14

CLIXSENSE -ஐ பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி.?ஏனென்றால் இது ஆரம்பத்தில் 10,20,30,என்ற அளவில் ஆரம்பித்துதான் 1000 என்பதை தொட முடியும். அதுவரை உங்களுக்கு கண்டிப்பாக பொறுமை அவசியம்.அந்தப் பொறுமை உங்களிடம் இருந்தால் நீங்கள் இதில் வெற்றி பெறுவது உறுதி


கிளிக்சென்ஸ் இணையதளத்தின் சிறப்பம்சங்கள்


கிளிக்சென்ஸ் இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு நேர்மையாக பணம் வழங்கி வருகிறது.


இந்த இணையதளத்தின் மூலமாக 45 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $10,382,149 டாலர்கள். நேர்மையான இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.


1.தினமும் Sign in செய்து View Ads -ஐ கிளிக் செய்யவும்.


2.ஒவ்வொரு கட்டங்களாக கிளிக் செய்யவும். ஒரு கட்டத்தை கிளிக் செய்தவுடன் இன்னொரு டேபில் விளம்பரம் திறக்கும்.அந்த டேபின் மேல் பகுதியில் 5 படங்கள் காணப்படும்.அதில் Click on the Cat என்று கூறப்பட்டிருக்கும். எனவே நீங்கள் அதில் உள்ள பூனை படத்தை மட்டும் கிளிக்செய்யவும். இப்போது டைமர் ஓட ஆரம்பிக்கும். அது முடியும் போது விளம்பரம் பார்க்கப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.அப்போது நீங்கள் அந்த டேபை மூடிவிடலாம்.இப்போது நீங்கள் பார்த்த விளம்பரத்துக்கான தொகை $0.001 உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும்.


3.மீண்டும் இதைப் போலவே மற்ற விளம்பரங்களையும் பார்க்கவும்.


4.அனைத்து விளமப்ரங்களையும் பார்த்துவிட்டு ClixGrid பட்டனில் உங்கள் மவுஸின் கர்சரை வைத்தால் Play the Game என்பதை கிளிக் செய்தால் 600 சிறு கட்டங்கள் அடங்கிய பெட்டியை காணலாம். இதில் நீங்கள் $10.00 டாலர் வரை பணப்பரிசு பெற வாய்ப்புள்ளது எனவே அந்த சிறு கட்டங்களை ஒவ்வொன்றாக கிளிக் செய்யவும். இன்னொரு டேபில் விளம்பரம் திறக்கும்.அந்த டேபின் மேல் பகுதியில் டைமர் முடிந்து விளம்பரம் பார்க்கப்பட்டதற்கான அறிவிப்பு வரும்.அப்போது அதில் நீங்கள் பரிசு வென்றுள்ளீர்களா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். பரிசு இல்லை என்றால் அந்த டேபை மூடிவிட்டு அடுத்த கட்டத்தை கிளிக் செய்து அடுத்த வாய்ப்பை பயன்படுத்தவும்


5.பின்னர் Offers பட்டனை கிளிக் செய்து அதில் உள்ள ClixOffers,TrialPay,RadiumOne,Matomy,SupersonicAds,SuperRewards,TokenAdsஆகியவற்றை தினமும் செக் செய்து பார்க்கவும். அதில் உங்களால் செய்யக்கூடிய பணி ஏதாவது இருந்தால் தவறாமல் செய்யவும்.


6.அடுத்து Tasks › Complete Tasks என்பதை கிளிக் செய்து அதில் உள்ள சிறு வேலைகளை செய்வதன் மூலமும் உங்கள் வருமானத்தை விரைவாக அதிகரிக்கலாம்.


6.நீங்கள் ஒரு ரெபெரல் சேர்த்தால் உங்களுக்கு 0.05$ கமிசன் கிடைக்கும். நீங்கள் Unlimited referrals சேர்க்கலாம். (1referral=0.05$) அடுத்து உங்கள் ரெஃபெரல் லிங்கை உங்கள் நண்பர்களுக்கு கொடுத்து அவர்களையும் உங்களுக்கு கீழ் சேர்த்து அவர்களையும் இதேபோல் செய்யச் சொல்லி அவர்கள் செய்யும் வேலைக்கேற்ப நீங்கள் கமிஷன் மூலமும் வருமானம் பெறலாம்.இதில் தான் உங்கள் வெற்றியின் ரகசியம் உள்ளது. உங்கள் ரெஃபரல் லிங்கை பெற CLIXSENSE -ல் மேலே உள்ள உங்கள் பெயரை கிளிக் செய்யவும்.அதில் உள்ள My Affiliate Details என்பதற்கு கீழ் இருக்கும் My Affiliate Link என்பதில் உங்கள் ரெஃஃபரல் லிங்க் இருக்கும். அதை copy செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும்.
இதில் பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு Paypal மூலம் மாற்றிக் கொள்ளலாம்.

Tuesday, 28 April 2015

நுரையீரலை சுத்தம் செய்வது ?



எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?


புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.


எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.


✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.


✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.


முதல் நாள்:


✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.


✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப்புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.


✔ மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.


✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.


✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும்.

அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.


✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.


✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

Wednesday, 15 April 2015

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்



அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.


காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.


சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.


பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.


கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.


மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.


குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.


அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.


புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.


பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.


பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.


பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.


சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.


வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.


முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.


வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.


முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.


புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.


புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.


நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.


தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.


கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.


முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.


பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.


புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.


மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.


மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.


முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.


சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.


வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.


தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.


தவசிக்கீரை- இருமலை போக்கும்.


சாணக்கீரை- காயம் ஆற்றும்.


வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.


விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.


கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.


துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.


துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.


காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.


மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.


நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்

பசலைக்கீரையும் முட்டையும் போதும்..!



பசலைக்கீரையும் முட்டையும் போதும்..!


கண் பார்வைக்கு பசலைக் கீரை போதுமுங்க..! கண் பார்வை மங்காமல் இருக்க, மாத்திரை வேண்டாம்

மருந்து வேண்டாம், அறுவை சிகிச்சை வேண்டாம் வெறும் பசலைக் கீரையும் முட்டையும் போதும். அவற்றில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த இரண்டையும் எந்த வகையில் உணவாக

சேர்த்தாலும் போதும்.


கண் பார்வை குறையவே குறையாது.

கண்ணாடி போடாமல் பேப்பர் படிக்கலாம், டி.விபார்க்கலாம்


அமெரிக்க தேசிய சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கை இது..






கணையம், ஈரல் ஆற்றலை மேம்படுத்த இயற்கை உணவுகளிலிருந்து ஒரு சாறு. உடல் சருமத்திற்கும், ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கும் உதவும். ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது.


தேவை:


1 டீஸ்பூன் கோதுமைப்புல் பவுடர்
3-4 பசலை கீரை இலைகள் (பாதி வேகவைத்தது)
1 நெல்லிக்காய்
1-3 வேப்பிலை இலைகள்


எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு அரைகப் தண்ணீர் சேரத்து குடிக்க வேண்டும். வேப்பிலை கசப்பை சகிக்க முடியாதவர்கள் பாகற்காயை உபயோகப்படுத்தலாம். தினமும் ஒரு ஷாட் (44 ml / 1.5 அவுன்ஸ்) குடிக்கலாம்.


/இயற்கை உணவு மருத்துவர் இந்திரானி கோஷ் பிஜ்லானி/





அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்!


அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்னையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.


தினசரி உணவில் வாழப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பி பிரச்னையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.


ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.