Tuesday, 28 April 2015

நுரையீரலை சுத்தம் செய்வது ?



எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?


புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.


எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.


✔ இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும்.


✔ சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம்.


முதல் நாள்:


✔ இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குடிக்கவும்.


✔ ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு 300 மில்லி சுத்தமான கிரேப்புரூட் சாற்றை குடிக்கவும். இதன் சுவை பிடிக்காவிட்டால் கிரேப்புரூட் சாற்றுக்கு பதிலாக பைனாப்பிள் சாற்றை குடிக்கலாம். எல்லாம் சுத்தமான தண்ணீர், சர்க்கரை கலக்காத சாறாக இருக்கட்டும். இந்த சாறுகளில் இயற்கையான சுவாசத்தை சீராக்கும் ஆன்டிஆக்ஸிடன்டஸ் நிறைந்துள்ளதால் நமது நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.


✔ மதிய உணவிறக்கு முன்பாக 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை பருகவும். இதில் தண்ணீரோ சர்க்கரையோ சேர்க்கக்கூடாது. கேரட் சாறு சுத்தம் செய்யும் மூன்று நாட்களும் இரத்தத்தை அமில நிலையிலிருந்து காரத்தன்மைக்கு மாற்றுகிறது.


✔ இரவு படுக்கபோகும் முன்பு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த கிரேன்பெரி போன்ற சாற்றை குடிக்க வேண்டும். பொட்டாசியம் சுத்தம் செய்ய ஒரு டானிக்காக உதவுகிறது. இது உடலின் உள்ளுறுப்புகளில் முக்கியமாக சிறுநீர்பாதை, நுரையீரல் தொற்றுகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்குகின்றது. கிரேன்பெரி கிடைக்காதவர்கள் சுத்தமான சிகப்பு திராட்சை அல்லது பைனாப்பிள், ஆரஞ்சு சாற்றை கலப்பிடமில்லாமல் குடிக்கலாம்.


✔ இதை மூன்று நாட்கள் கடைபிடிக்கும் போது எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை சாப்பிடவேண்டும். குறைந்தது 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வேர்வையை வெளியேற்றவும்.

அல்லது 20 நிமிடங்களில் சுடுதண்ணீரில் குளிக்கலாம். வியர்வை வெளியேறும்போது நச்சுகளும் வெளியேறும்.


✔ இரவில் கொதிநீர் ஆவி பிடிக்கவேண்டும். 5 முதல் 10 சொட்டுவரை யூகாலிப்ட்டஸ் ஆயில் கொதிநீரில் சேர்த்து தலையினை சுத்தமான போர்வையைக்கொண்டு மூடி ஆவியை நன்றாக உள்ளுக்குள் இழுத்து சுவாசிக்கவும். இவ்வாறு கொதிநீர் ஆறும்வரை ஆவி பிடிக்கவும்.


✔ மூன்று நாட்கள் இவ்வாறு கடைபிடிக்கவும். ஆஸ்த்துமா, நுரையீரல் அழற்ச்சி, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கும் நல்ல பலனை அளிக்கும்.

Wednesday, 15 April 2015

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்



அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.


காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.


சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.


பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.


கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.


மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.


குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.


அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.


புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.


பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.


பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.


பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.


சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.


வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.


முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.


வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.


முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.


புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.


புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.


நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.


தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.


கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.


முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.


பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.


புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.


மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.


மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.


முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.


சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.


வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.


தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.


தவசிக்கீரை- இருமலை போக்கும்.


சாணக்கீரை- காயம் ஆற்றும்.


வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.


விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.


கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.


துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.


துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.


காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.


மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.


நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்

பசலைக்கீரையும் முட்டையும் போதும்..!



பசலைக்கீரையும் முட்டையும் போதும்..!


கண் பார்வைக்கு பசலைக் கீரை போதுமுங்க..! கண் பார்வை மங்காமல் இருக்க, மாத்திரை வேண்டாம்

மருந்து வேண்டாம், அறுவை சிகிச்சை வேண்டாம் வெறும் பசலைக் கீரையும் முட்டையும் போதும். அவற்றில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த இரண்டையும் எந்த வகையில் உணவாக

சேர்த்தாலும் போதும்.


கண் பார்வை குறையவே குறையாது.

கண்ணாடி போடாமல் பேப்பர் படிக்கலாம், டி.விபார்க்கலாம்


அமெரிக்க தேசிய சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கை இது..






கணையம், ஈரல் ஆற்றலை மேம்படுத்த இயற்கை உணவுகளிலிருந்து ஒரு சாறு. உடல் சருமத்திற்கும், ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கும் உதவும். ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது.


தேவை:


1 டீஸ்பூன் கோதுமைப்புல் பவுடர்
3-4 பசலை கீரை இலைகள் (பாதி வேகவைத்தது)
1 நெல்லிக்காய்
1-3 வேப்பிலை இலைகள்


எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு அரைகப் தண்ணீர் சேரத்து குடிக்க வேண்டும். வேப்பிலை கசப்பை சகிக்க முடியாதவர்கள் பாகற்காயை உபயோகப்படுத்தலாம். தினமும் ஒரு ஷாட் (44 ml / 1.5 அவுன்ஸ்) குடிக்கலாம்.


/இயற்கை உணவு மருத்துவர் இந்திரானி கோஷ் பிஜ்லானி/





அசிடிட்டியை குணப்படுத்தும் எளிய வழிகள்!


அசிடிட்டி எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பி பிரச்னையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.


தினசரி உணவில் வாழப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது. அது அமிலசுரப்பி பிரச்னையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான். இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.


ஒவ்வொரு உணவு இடைவேளைக்கும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.





Monday, 13 April 2015

மூன்று உணவு பொருட்கள் முந்நூறு பலன்கள்


சில நோய்களை சாதாரணமாக தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில உணவு பொருட்களைக் கொண்டே குணப்படுத்தலாம். பூண்டு, எலுமிச்சைப்பழம், இஞ்சி இவற்றைக்கொண்டு இரத்தத்திலுள்ள கொழுப்பு, இதயதமனி அடைப்பு, தொற்றுநோய் மற்றும் சளி தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.


ஜெர்மனியில் பிரபலமான இந்த பானம் மூன்று உணவு பொருட்களை கொண்டு தயார் செய்கிறார்கள். இயற்கையான இந்த உணவுபொருட்கள் உடலில் ஏராளமான பலன்களை ஏற்படுத்துகின்றன.


இதய தமனிகளில் அடைப்புகள் ஏற்படாதவாறு தடுக்கின்றது.


இரத்தத்தில் கொழுப்பு விகிதத்தை சரியான அளவில் இருக்குமாறு கட்டுப்படுத்துகிறது.


தொற்றுநோய்களை அகற்றி சளித்தொல்லை ஏற்படாதவாறு செய்கின்றது.


இதை அருந்தும்போது ஈரலிலிருந்து நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாகின்றது.


ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் கூடுதலாக உள்ளதால் நோய்களை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்றி இரத்த ஓட்டத்தை சரிபடுத்தி முதுமை ஏறபடாதவாறும், கேன்சர் நோய்கள் வராதவாறும் காக்கின்றது.


இப்பொழுது தேவையானவை என்னவென்று பார்பபோம்:


1⃣ முழு பூண்டு - 4


2⃣ தோலுடன் கூடுய எலுமிச்சைப்பழம் - 4


3⃣ இஞ்சி - ஒரு சிறிய துண்டு


4⃣ தண்ணீர் - 2 லிட்டர்


செய்முறை:


எலுமிச்சை பழத்தை கழுவி சிறிதாக நறுக்கவும். பூண்டை உரிக்கவும். இஞ்சியின் தோலை அகற்றி சிறிதாக நறுக்கவும். இவை எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்தவற்றை வேறு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.


இதை அடுப்பில் வைத்து சூடாக்கி கொதிக்கும் நிலை வரும் போது அடுப்பை அணைக்கவும். சூடாக்கியதை குளிரவைத்து சல்லடையால் சளித்து கண்ணாடி பாட்டில்களில் நிறைத்துக்கொள்ளவும்.


எவ்வாறு சாப்பிடுவது ?


காலையில் வெறும் வயிற்றில் உணவு சாப்பிடுவதற்க்கு இரண்டு மணிநேரம் முன்பு ஒரு கிளாஸ் குடிக்கவும். ஒவ்வொருமுறையும் குடிப்பதற்க்கு முன் பாட்டிலை நன்றாக குலுக்கி ஒரு கிளாஸில் ஊற்றவும்.