Saturday, 2 April 2016

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க இந்த ஜூஸை மூன்று வாரம் குடிங்க!




சராசரியாக ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால். அவன் 100 டன் அளவு உணவும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் உட்கொள்கிறான். இதனால் நமது வாழ்நாளில் நமது குடலில் ஏறத்தாழ குறைந்தது 15 கிலோ வரை நச்சுக்கள் தங்குகின்றன. இவற்றை மொத்தமாக நாம் வெளியேற்றுவதே கிடையாது.

இவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாத நச்சுக்களால் உடலில் முதலில் சேதமடைவது இரத்தம் தான். உடலில் இரத்தத்தில் நச்சுக் கலந்துவிட்டால் அது ஏனைய உடல் பாகங்கள் முழுவதும் சேதத்தை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.


இதனால் தான் நமது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது.

ஒரு நாளுக்கு மூன்று ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் உட்கொண்டு வந்தால் உங்கள் குடலை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட முடியும். மேலும் சிறுகுடலில் தேங்கும் சளி, மல தகடு, ஒட்டுண்ணிகள் போன்றவற்றை அகற்றவும் இது உதவுகிறது.



மேலும் இது உடல் எடையை சீரான முறையில் குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. இதை நீங்கள் பின்பற்றி வருவதால் உடலில் நேர்மறை விளைவுகள் நிறைய உண்டாகும்.



ஆளிவிதைகள் நச்சுக்களை உடலில் இருந்து போக்குவது மட்டுமின்றி, இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க பயனளிக்கிறது. மேலும் இது சுவாசக் குழாய், வாயுக் குழாய், சிறுநீர் குழாய் போன்றவற்றை சுத்தம் செய்து உடல்நலத்தை ஊக்குவிக்கிறது.



முதல் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.



இரண்டாம் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.



மூன்றாம் வாரம் காலை உணவில் நொதித்த 150 மில்லி மோரில் மூன்று டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.



அரைத்த ஆளிவிதைகள் கிடைக்கவில்லை எனில், முழு ஆளிவிதைகளை வாங்கி நீங்களே கூட அரைத்துக் கொள்ளலாம். மூன்று வாரம் தொடர்து காலை வேளையில் இதை உண்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும்.



மறவாமால் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடித்து வாரங்கள். மேலும் இந்த முறையை நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தால் குடல் சார்ந்த எந்த பிரச்சனையும் வராது

Saturday, 26 March 2016

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!




ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?

நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ


இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.



ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?

1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.

2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.

3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.

ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.

ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:

1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.

2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.

3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.

4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.

அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.

ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.

6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.

7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்

நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

Wednesday, 23 March 2016

கடும் முழங்கால் வலியினை முறியடித்த முறை

....................................................................................................................................................கடந்தஐந்து மாதங்களுக்கு முன்பு எனது இரு முழங்கால்களிலும் சிறு வலி ஆரம்பித்தவுடன் சரி இது இறகு பந்து விளையாடும் போது தவறாக கால்களை பயன்படுத்தியபோது ஏற்பட்டதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.
............................................நாட்கள் கடந்தன.
...........................................வலியும் அதிகமானது.
..........................................சரி. இருபத்துஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக புல்லட் இருசக்கர வாகனத்தினை இயக்கியதன் பின் விளைவுதான் என்று தினசரி செல்லும் இறகு பந்து விளையாட்டிற்கு ஒருமாதம் விடுமுறை விட்டு காலையில் நடைப்பயிற்சி மேற் கொண்டேன். ........................................
.வலி இன்னும் அதிகமானது.
தினசரி நடைப்பயிற்சியையும் நிறுத்தி விட்டேன்.
..........................................வலி இன்னும் கூடுதலானது. சரி மீண்டும்இறகு பந்து விளையாடும்போது சரியாகிவிடும் என்று மீண்டும் களம் இறங்கி ஒரு மாதம் ஆகியும் விளைவு மோசமானதுதான் மிச்சம். மேலும் கடும்வலியுடன் இரு மாதங்கள் கடந்தன. சாதாரணமாக நடந்து செல்லும்போதே நடை ஒரு மாதிரி இருக்கிறதே என்று அனைவரும் கேட்குமளவிற்கு நிலைமை மோசமானது. கோவை கங்கா ஆஸ்பத்திரி செல்லலாம் என்று மனதில் ஒரு எண்ணம். ஆனால் என்னஆனாலும் அலோபதி மருத்துவம் நோக்கி செல்லக்கூடாது என்று ஒரு வைராக்கியம். சிறு நீரக பிரச்சனையை விலைக்கு வாங்கி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைதான்.
........................................................................................................................................................அதற்கு முன்னரே எனது தோட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கு வளர்ந்து முதிர்ந்திருந்த சில அமுக்கிரா செடிகளை (Withania somnifera ) வேருடன் பிடுங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதன் வேர்களை மட்டும் பிரித்தெடுத்து தொடர்ந்து பல நாட்கள் காயவைத்திருந்தேன்.
ஒரு கட்டத்தில் மிகுந்த மதிப்புள்ள அவ்வேர்கள் வீணடிக்கப்பட்டுவிடுமே என்ற நிலையில் தேவையறியாமல் அவற்றினை பொடியாக்கி பவுடாக்கி ஒரு பாட்டிலில் சேமித்திருந்தேன்.
............................................................................................................................................................ஒருநாள் தன்னிச்சையாக இணையத்தில் அமுக்கிரா வேர்களுக்கு முழங்கால் வலியை போக்கும் தன்மையுள்ளது என்று அறிந்து அன்றிலிருந்து என்னிடம் இருப்பிலிருந்த அமுக்கிரா வேர் பவுடரை தினசரி அரை ஸ்பூன் மட்டும் வாயில் போட்டு தண்ணீர் குடித்து கொப்பளித்து விழுங்கி விடுவேன்.
இதனை ஆரம்பித்து நான்கு தினங்கள் கழித்து ஒரு நல்ல நிவாரணம் இருப்பதுபோல தெளிவு தென்பட்டது.
அதன் பின்னர் மற்றும் ஒரு நிகழ்வு. மீண்டும் தற்செயலாக ஒரு நாள் டெக்கான் குரோனிக்கல் தினசரியில்அமுக்கிரா வேர் பவுடரினால் முழங்கால் வலி நிவாரணம் அடைந்த ஆராய்ச்சி விபரம் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
உற்சாகம் அடைந்து அமுக்கிரா வேர் பவுடரின் தினசரி அளவு ஒரு ஸ்பூனாக அதிகரிக்கப்பட்டது.
ஒரளவிற்கு வலி கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. ....................................................................................................................................................அலுவலக பணியாக கொல்லிமலை அடர்காட்டின் வழியாக சென்றபோது பாறையில் படர்ந்திருந்த முடவாட்டுக்கால் கிழங்கினை(Drynaria
quercifolia)( முடவாட்டுக்கால் கிழங்கு நடமாட முடியாத முடவனையும் நடக்கவைக்கும் என்றும் சொல்லப்படுவதுண்டு) எடுத்து வந்து சுத்தம் செய்து பவுடராக்கி கூடுதலாக இதனையும் ஒரு ஸ்பூன் பயன்படுத்தினேன்.
............................................................................................................................................ஒரே மாதத்தில் முழங்கால் வலி இருந்த இடம் காணாமல் போய் விட்டது. அதன் பின் மேற்கண்ட இரு பவுடர்களும் தேவையான அளவு இருப்பில் இருந்தாலும் அதனை தற்சமயம் எடுத்துக் கொள்வதில்லை.
.........................................என்னதான் தினசரி சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும் வயது 54 ஆகி விட்டபடியால் அது தன் வேலையைக் எனது உடலில் காட்டஆரம்பித்திருந்தது.
அதாவது உடலில் பிடிப்புகள்/ மூட்டுகளில் லேசான இனம் காணாத வலிகள் என்ற வகையில்.
..................................................................................................................................................ஆனால் மேற்கண்ட இரு இயற்கை மூலிகைகளும் இலவச இணைப்பாக அந்தப் பிரச்சனைகளையும் சேர்த்தே தீர்த்து விட்டன.
அதன் பின்பு அதிக முழங்கால் வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு எனது அனுபவத்தை தெரிவித்தேன். சித்த மருத்துவ கடையில் அமுக்கிரா வேர் கிடைத்தாலும் விலை மற்றும் தரம் பிரச்சனையாக இருப்பதாக தகவல் கிடைத்தது.
மழைக்காலம் முடிந்தவுடன் என்னிடம் இருப்பில் இருந்த விதைகளை நாற்று விட்டுள்ளேன். கொல்லிமலையில் காலம் காலமாக கடும் உழைப்பினைத் தந்து தனதுவாழ்வின் இறுதி காலத்தில் கடும் முழங்கால் வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு அதன் செடிகளைத் தருவதாக உத்தேசம்.
........................................................................................................................................கொல்லிமலையில் அமுக்கிரா செடியே இல்லாததால் அதனை சில கிராமங்களில் பரப்பிவிட்டால் அது எதிர்காலத்தில் அந்த அப்பாவிகளுக்கு உறுதுணையாக இருக்குமே என்ற ஒரு எண்ணம்தான் .

Tuesday, 8 March 2016

பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி!



அருமையான மருத்துவக் குறிப்பு !

பத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி!

தொப்பைஇரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.


மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்

Thursday, 3 March 2016

வலி, வீக்கத்தை போக்கும் புளிச்ச கீரை

கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியதுமான புளிச்ச கீரையை பற்றி பார்ப்போம். புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது. மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது. உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.

புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.புளிச்ச கீரையின் மொட்டுக்களை பயன்படுத்தி வாய் கசப்பு, வாந்திக்கான மருந்து தயாரிக்கலாம்: இதற்கு தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை மொட்டுக்கள், மிளகுப் பொடி, தேன். சுமார் 10 மொட்டுக்களை எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் விட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கட்டிய பின் உப்பு, மிளகு, தேன் சேர்த்து கலந்து குடித்தால் தலைசுற்றல் சரியாகும். பித்த வாந்திக்கான மருந்தாகிறது.

பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. பித்த சமனியாக விளங்குகிறது. புளிச்ச கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதய நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. புளிச்ச கீரையை பயன்படுத்தி சூப் தயாரிக்கலாம்: தேவையான பொருட்கள்: புளிச்ச கீரை, பட்டை, பூண்டு, வெங்காயம், நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு.

பாத்திரத்தில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன் ஒரு துண்டு பட்டை, 2 பல் பூண்டு தட்டி போடவும். வெங்காயம் வதங்கியவுடன் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி மிளகு பொடி சேர்த்து குடித்துவர உடல்நலம் பெறும். புளிச்ச கீரை உன்னதமான உணவு மற்றும் மருந்தாகிறது. ஊடு பயிராக பயிரிடப்படும் இது வாயு கோளாறுகளை போக்கும். சத்து குறைபாட்டினால் ஏற்படும் எலும்புருக்கி நோயை குணமாக்கும். வாந்தியை நிறுத்த கூடியது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. சிறுநீரக கோளாறுகளை போக்கும். சிறுநீர் பெருக்கியாக உள்ளது.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம்





சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு கரண்டி பொடியை இரண்டு கிண்ணம் அளவு (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு கிண்ணமாக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் இரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.



3வென்டைகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு சொம்பு தண்ணிரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து விடியற்காலை யில் கொழ கொழ என்று இருக்கும் அந்த தண்ணீரை 48நாட்கள் குடித்து அரைமணி நேரம் வாக்கிங் சென்று வந்தால் சுகர் காலம் முழுவதும் உங்களை அணடவே அண்டாது இது உறுதி