Tuesday, 16 December 2014

தீராத இருமலைப் போக்கும் கைமருந்துவம்


இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்களுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால், தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் தெரியும்.
பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும்.
இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது.
வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும்.
வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.
தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும்.
அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும்.
துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.
வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது.
கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் !

சிறுநீரகக் கற்களை கரைத்துவிடு-உணவு மருத்துவம்


நம்முடைய சிறுநீரகங்கள் திரவக் கழிவுகளை வடிகட்டி சிறுநீராக மாற்றி வெளியேற்றுகின்றன.
வடிகட்டும்போது கழிவுகளில் உள்ள இரசாயனப் பொருட்களும், உப்புகளும் சிறுநீரகங்களில் தங்கிவிடுகின்றன. இவையே ஒன்று சேர்ந்து கல்லாக சிறுநீர்க் குழாய்களை வந்தடைகின்றன.
அப்போது சிறுநீர் கழிக்க முடியாமல் எரிச்சல் ஏற்படுகிறது. கற்கள் பெரிதாக இருந்தால் அடி முதுகு, அடிவயிற்றில் சுரீரென்று வலி ஏற்படக்கூடும்.
சிலருக்குக் கற்கள் அமைதியாக இருந்து திடீரென்று சிறுநீர் கழிக்க முடியாமல் வேதனை தரும்.
சிறுநீர் கழிக்க எரிச்சலாக இருந்தாலும் சரி. அடிக்கடி அடி முதுகில் வலி மற்றும் விலாவில் திடீரென்று வலி ஏற்பட்டாலும் சரி, உடனே மருத்துவர் மூலம் சிகிச்சை பெறவேண்டும்.
மருத்துவச் சிகிச்சையுடன் உணவு மருத்துவத்தையும் பின்பற்றினால் சிறுநீரகக் கற்களையும், கோளாறுகளையும் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
சிறுநீரகக் கற்களை உடைத்துக் கரைத்துவிடும் சக்தி படைத்தது, ஆப்பிள் சாறு, காலையில் பழத்தை நன்கு கழுவி தோலைச் சீவாமல் கடித்தோ அல்லது சாறாகவோ அருந்தவும்.
கடுமையான வலியைக் குறைத்து கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது, திராட்சை சாறு.
மாதுளம் பழச்சாறும் கற்களைக் கரைக்கும். மாதுளம் பழ விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு அரைக்கவும். இதை வாயில் போட்டுக்கொண்டு ஒரு டம்ளர் கொள்ளு ரசமும் அருந்தி வர வேண்டும்.
வாழைப்பழத்தில் புரதம் குறைவு, மாவுச்சத்து அதிகம். இதனால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் பாதுகாப்பாக வாழலாம். தினமும் இரண்டு மூன்று வாழைப்பழங்கள் சாப்பிடவும். சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க அன்னாசிப்பழச்சாறு, கற்களும் பிரச்னைகளும் இருந்தால் ஆப்பிள், திராட்சை, மாதுளை என்று பழ உணவிற்கு முன்னுரிமை கொடுத்து சாப்பிட்டு வரவும்.
நாவல்பழம், இலங்தைப்பழம், பீச் போன்றவையும் சிறுநீரகக் கோளாறுகளையும், கற்களைக் கரைத்து வலியையும் குணமாக்கும் தன்மை கொண்டவை.
எலுமிச்சம் பழ சர்பத் சிறுநீரகங்களில் தங்கியுள்ள உப்புக்களை கரைத்து சிறுநீர் நன்கு பிரியச் செய்யும்.
சிறுநீர் கழிக்க எரிச்சலாகவும், கஷ்டமாகவும் இருந்தால் பரங்கிக்காய், மணத்தக்காளிப்பழம், வெள்ளரிக்காய் முதலியவற்றை உடனடியாக உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் சிறுநீர் வலியின்றி உடனுக்குடன் பிரியும்.
சிறுநீரகக் கற்கள் கரையும் வரை தக்காளி, பட்டாணி, அசைவ உணவு, கீரை போன்றவற்றைத் தவிர்க்கவும். காபியைக் குறைக்கவும். கீரை தேவை எனில் முள்ளங்கிக் கீரையை மட்டும் சேர்க்கவும்.
வைட்டமின் ஏ குறைந்தாலும் கற்கள் உருவாகும். எனவே காரட், சோயா மொச்சை மூலம் வைட்டமின் ஏ கிடைக்க இந்த உணவுகளையும் நன்கு சேர்க்கவும்.
இரவு உறங்கப் போகுமுன் இரண்டு மணி நேரம் முன்னதாக சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் படுக்கைக்குச் செல்லவும்.
நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் அருந்தி வரவும், தாகம் இல்லையென்றாலும்! எந்தக் கட்டத்திலும் எட்டு மணிநேரத்திற்குமேல் தண்ணீர் அருந்தாமல் இராதீர்கள். இதுவே, சிறுநீரக கற்கள் உருவாகிவிடாமல் தடுக்கும் முதல் மருந்து! அரிய மருந்தும்கூட!

எளிதாக மூன்று நாட்களில் உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?


சிலர் தங்கள் வாழ்க்கையில் புகை பிடிக்காது இருந்திருந்தாலும் நுரையீரல் பிரச்சனை இருக்கலாம். அதே சமயம், 45 வருடங்களாக புகைபிடிக்கும் ஒருவருக்கு நுரையீரல் பிரச்சனை இல்லாது ஆரோக்கியமாக இருக்கலாம். இது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும .
எவ்வாறு இருப்பினும், மூன்று நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி என்று பாரப்போம்.
• இதை செய்வதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எந்த விதமான பால் பொருட்களையும் சாப்பிடாமல் அறவே ஒதுக்க வேண்டும். ஏனென்றால் பாலினால் உண்டாகும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
• இதற்கு முதல்நாள் சுக்குமல்லி தேநீர் போன்ற எதாவது மூலிகை டீயைக் குடிக்கலாம். இது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நுரையீரலுக்கு உடலில் உள்ள மற்ற உறுப்புகள் கூடுதல் வேலை தராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
• இரண்டு எலுமிச்சை பழங்களை பிழிந்து 300 மில்லி தண்ணீரில் சேர்த்து காலை உணவுக்கு முன் குடிக்கவும்.
• பின்பு சில மணி நேரங்களுக்கு பிறகு 300 மில்லி கிரேப்பூரூட் பழத்தின் சாறு குடிக்கவும். கிரேப்பூரூட் கிடைக்காவிட்டாலோ அல்லது சுவை பிடிக்காவிட்டாலோ 300 மில்லி அன்னாசி பழத்தின் சாற்றை குடிக்கவும். ஏனென்றால் இந்த சாறுகளில் இயற்கையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நமது சுவாச உறுப்புகளை மேம்படுத்துகிறது.
• இதனைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து மதிய உணவுக்கு முன்பு 300 மில்லி சுத்தமான கேரட் சாற்றை குடிக்கவும். இந்த சாறு உங்கள் இரத்தத்தை இந்த மூன்று நாட்களுக்கு ஆல்களைஸ் செய்கின்றது.
• மதிய உணவுக்கு 400 மில்லி பொட்டாசியம் நிறைந்த சாற்றைக் குடிக்கவும். பொட்டாசியம் ஒரு சிறந்த டானிக்காக மாறி இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகின்றது.
• படுக்கபோகும் முன்பு 400 மில்லி கிரேன்பரி சாறு குடிக்கவும். இந்த சாறு நுரையீரலிலுள்ள நோய்களை உண்டாக்கும் பாக்ட்டீரியாக்களை வெளியேற்றுகின்றது.
• உங்கள் உடலை நன்றாக கவனித்துக்கொள்ளவும். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
• தினமும் 20 நிமிடங்கள் சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். இதனால் குளிக்கும்போது சூட்டினால் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேறுகின்றது.
• இரவு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் 5-10 துளிகள் யூகாலிப்ட்டஸ் ஆயிலை சேரத்து தலையை சுத்தமான துணியினால் மூடி ஆவிபிடிக்கவும்.
இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்யவும்.

Sunday, 14 December 2014

உடலை ஸ்லிம்மாக

எலுமிச்சை பழம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.  மேலும் பெரும்பாலான உடல்நல நிபுணர்களும், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்தால், உடல் எடை எளிதில் குறையும் என்றும் கூறுகின்றனர்.
அத்தகைய சிட்ரஸ் பழமான எலுமிச்சை, உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை அழகுறச் செய்யவும் உதவியாக உள்ளது.
எனவே, எலும்மிச்சை பழத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் பயன்படுத்தி வர, ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.
கார உணவுகளை தவிர்க்கவும் :
கார உணவுகள், உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிகமான நீர்மம் :
கொழுப்புக்களை கரைக்கும் சிட்ரஸ் பழங்களால் ஆன பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிறும் நிறைந்திருக்கும்.
தேன் :
தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, கொழுப்பைக் குறைக்கும் பொளும் அதிகம் உள்ளது. எனவே  இதனை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
எலுமிச்சை-தேன் :
தினமும் காலையில், வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.
எலுமிச்சை ஜூஸ் :
ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும்.
எலுமிச்சை சூப் :
எடையை குறைக்க நினைக்கும் போது, அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும். அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே, அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால்,புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.
சாலட் :
சாலட் சாப்பிடும் போது, அதை சாப்பிட போர் அடித்தால், அப்போது சாலட்டின் சுவையை அதிகரிப்பதற்கு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இதுவும் எலுமிச்சையை உடலில் சேர்ப்பதற்கான ஒரு வழியாகும்.

Thursday, 11 December 2014

ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க

ஒரு மாதத்தில் ஈரலை சுத்தப்படுத்தி இளமையாக இருக்க
ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது.
இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் ?
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவேண்டும். சிறிது நேரம் இடைவெளி விட்டு காலை உணவை சாப்பிடலாம்.
பலன்கள்:
ஒரு மாத்திற்க்கு பிறகு உங்கள் உடலில் நிறயை மாற்றங்களை காணலாம்.
* கண்களின் கருவளயம் மறைந்து போகும்
* தோல் இளமையுடன் பளபளப்பாக காணப்படும்
* முன்பை விட மிகுந்த சுறுசுறுப்புடன் நேர்மறையான திறனுடன் செயலாற்றுவீர்கள்
* ஜீரணம் மேம்பட்டு மலச்சிக்கல் மறைந்து போகும்

Wednesday, 10 December 2014

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்


நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

Friday, 5 December 2014

எளிதான இயற்கை முறையில் உடல் எடை குறைக்க:


இந்த சுவையான பானத்தை தயாரித்து வெறும் வயிற்றில் காலையில் அருந்தவும். வயிறு சுருங்கி, தொப்பை மறைந்து பிட்டாக இருக்க பலன் தெரியும் வரை தொடர்ந்து சாப்பிடவும்.
தேவையானவை:
சுத்தமான தேன் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி சாறு சுண்ணாம்பு நீக்கியது - 1 டேபிள்ஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 1 பல்
பொதினா அல்லது பார்ஸ்லி - 1 கைப்பிடி
தண்ணீர் - அரை கிளாஸ்
அவகேடோ - அரைப் பழம்
செய்முறை:
அவகேடோ பழத்தை தோலுரித்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். இஞ்சி சாறு, தேனை தவிர்த்து மற்ற மேலே சொன்னவற்றை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். கடைசியில் இஞ்சி சாறு, தேன் சேர்த்து கலக்கவும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் பலன் காணும் வரை அருந்தவும்.

உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை
5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள் (மூன்றரை கிலோ) வரை குறைக்கும். உடல் எடையைக் குறைக்க பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேவை:
1 கைப்பிடி பார்ஸ்லி அல்லது மல்லி இலை
1 எலுமிச்சைப்பழம்
1 கப் தண்ணீர்
செய்முறை:
மல்லி இலை அல்லது பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் மிக்ஸியில் அடித்து சலித்து குடிக்கவும்.
சாப்பிடும் முறை:
இந்தச் சாற்று காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இடைவிடாமல் 5 நாட்கள் குடித்த பிறகு 10 நாட்கள் இடைவெளி விடவும். இந்தச் சாறு உடலில் உள்ள கொழுப்பை எரித்து உடலுக்கு வைட்டமின்களையும், மினரல்களையும் அள்ளித்தரும்.
மல்லி அல்லது பார்ஸ்லி இலைகள் ஜீரணத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. 5 நாட்களில் 6 பவுண்டுகள் வரை எடை குறையும். உங்களுக்கு இந்தச் சாற்றை குடிக்க சலிப்பு ஏற்படும்போது தண்ணீருக்கு பதிலாக மோரை உபயோகப்படுத்தி சிறிது இந்துப்புவை சேர்துக்கொள்ளலாம். மோரும் ஜீரணத்திற்க்கு ஒரு நல்ல மருந்து.
அதிகமாக சாப்பாடு சாப்பிட்டால் பலன் கிடைக்காது. எனவே குறைந்த அளவில் சத்தான உணவுகளை சாப்பிட்டு பலன் பெறுங்கள். இந்த முறையில் உடல் எடைக்குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

Wednesday, 3 December 2014

வாழ்க்கையின் உண்மை

முயற்சி வெற்றி தரும்
ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது.. அதை குணப்படுத்த மலை உச்சியில் உள்ள சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..
அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்..
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்..

அதில் முதலாமவன் கொண்டு வருகிறேன் என கிளம்புகிறான்.. தேவதை வழிகாட்ட ஓர் நிபந்தனை விதிக்கிறது..
”நான் உன் பின்னால் வருவேன்.. நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம்
திரும்ப வேண்டும் என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும்…நீ நடப்பதை நிறுத்தக்கூடாது.. நடந்து கொண்டே இருக்கவேண்டும்.. எது நடந்தாலும்
பின்னால் திரும்பி பார்க்ககூடாது.” அப்படி பார்த்தால் கற்சிலையாகி விடுவாய் என்கிறது..
முதலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது.. திடீரென பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை ..
என்னாயிற்று.. என தன்னையறியாமல் முதலாமவன் திரும்பி பார்க்கிறான்.. நிபந்தனையை மீறியதால் கற்சிலையாகி விடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..
கிட்டத்தட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.. திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்.. அவனும் கற்சிலையாகி விடுகிறான்..
மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது.. இவனும் பின்வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்..பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான்
வெற்றியும் பெற்று மூலிகையும் கைபற்றுகிறான்..
பின்னால் வரும் தேவதை தான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்சியையும் செய்யும்.
அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது...


மனசு சஞ்சலப்படுகிறதா?
ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

ஒரு இளைஞன் தன்னை சீடனாக சேர்த்துக்கொள்ளும்படி சூஃபி ஞானி ஒருவரிடம் கேட்டான். ‘என்னை முழுமையாக நம்புகிறவர்களை மட்டுமே நான் என் சீடனாக ஏற்றுக் கொள்வேன்’ என்றார் அந்த ஞானி.
அதற்கு அந்தச் சீடன், ‘நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றான்.
‘சில நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன், அதுவரை இங்கேயே தங்கியிரு’ என்று கூறினார் ஞானி.
மறுநாள் காலை, ஒரு பெரிய மரத்தின் அடியில் அந்த சூஃபி ஞானியின் அருகே ஒரு பெண் அமர்ந்து, மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான் அந்த இளைஞன்.
இதைப் பார்த்தவுடன், பெண் சகவாசமும், மதுப் பழக்கமும் உள்ள அந்த ஞானி, ஒரு ஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான் இளைஞன்.
அந்த இளைஞனின் முகத்தில் காணப்பட்ட அவநம்பிக்கையை கவனித்த அந்த ஞானி அருகே அழைத்தார். அந்த பெண்ணின் முகத்திரையை விலக்கினார். அப்பெண் அந்த ஞானியின் தாயார்.
மது பாட்டிலில் இருந்ததை அவனிடம் குடிக்கக் குடித்தார். அதைக் குடித்துப் பார்த்து அது வெறும் தண்ணீர் என்பதை உணர்ந்தான் அந்த இளைஞன்.
ஞானி கூறினார், ‘நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய முடியாதது ஏன்? மது பாட்டிலில் இருந்தது வெறும் தண்ணீர் என்று ஏன் நினைக்கவில்லை’ என்றார்.
தன்னை மன்னிக்கும்படி வேண்டினான் அந்த இளைஞன்.
‘உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ, எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது நம்பிக்கை, ஒரு முயற்சி. உண்மையான நம்பிக்கை ஒரு முயற்சியாக இருக்க முடியாது.
நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது. இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும். அப்போது அதை எதனாலும் அழிக்க முடியாது’ என்று கூறி அனுப்பி வைத்தார்.
''நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது. அந்த நம்பிக்கை எப்போது வேண்டுமானாலும் அவநம்பிக்கையாக மாறிவிடும்.''


ஒரு வீட்டில் ஜன்னல் அருகே தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
‘அது என்ன மகனே?’ என்று கேட்டார் தந்தை.
‘அப்பா, அது காகம்’ என்றான் மகன்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
‘அது காகம்’ என்றான் மகன்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். ‘காகம்!’ என்றான்.
நான்காவது முறையாக மீண்டும் தந்தை மகனிடம் `அது என்ன மகனே?’ என்று கேட்டார்.
மகனின் கோபம் எல்லை கடந்தது. ‘காகம்… காகம்… காகம்… வயசாச்சுன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே’ என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.
தந்தையின் கண்கள் பனித்தன. எதுவும் பேசவில்லை. மெதுவாக எழுந்து உள்ளே போனார். ஒரு பழைய டைரியை எடுத்து வந்தார். அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
‘இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலில் வந்தமர்ந்த ஒரு பறவையைக் காட்டி அது என்ன? என்று கேட்டான்.
காகம் என்று புன்னகையுடன் சொன்னேன்.
அவனுக்குப் புரியவில்லை போல! மீண்டும் மீண்டுமாய் இருபத்து மூன்று முறை என்னிடம் அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நான் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் என்று சொன்னேன்.
இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்’ என்று எழுதி யிருந்தது.
மகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன் என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்தான்.


அறிந்துகொள்வோம்...!
---►நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம் முத்தமிட்டால் அதனால் நீங்கள் இருவரும் 2.6 கலோரியை எரிக்கிறீர்கள்.
---►மும்பையில் நீங்கள் ஒரு நாள் சுவாசிக்க கூடிய காற்று, 2 1/2பாக்கெட் சிகரெட் உபயோகிப்பதற்கு சமமானது.
---►இந்தியாவில் மனிதனுக்கு வேண்டிய டாய்லெட்டை விட செல்போன்கள் அதிகம்.
---►நீங்கள் கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால் அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.
---►பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள் 2000 வார்த்தைகள் தான் பேசுகின்றனர்.
---►இந்தியாவில் மில்லியன் மக்களுக்கு 11 ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.இப்போதுவழக்கில் உள்ள எல்லா கேஸுக்களை முடிக்க 466 ஆண்டுகள் பிடிக்கும்.
---►நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்
---►காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்திஆகியவற்றின் சிறப்பான கலவைகளால் தான்.
---►உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33
சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.
---►ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
---►மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.
 

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி


தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

Monday, 1 December 2014

அறிவுக்கதைகள்

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...
நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனை இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.
விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்
. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,
“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
'அச்சமின்மையே ஆரோக்கியம்!'
'அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!

ஒவ்வொருவரின் பார்வைக்கும் உள்ள வேறுபாடு
ஒரு பாதையின் ஓரம் யோகி ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அப்போது அந்த வழியே ஒரு மது அருந்தியவன் வந்தான்.
தியானத்தில் ஆழ்ந்து இருந்த யோகியை பார்த்து, ''இவனும் நம்மை மாதிரி பெரிய போதைக்காரன் போலிருக்கிறது. இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான். அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.
அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான். அவன் அவரைப் பாரத்தவுடன், ''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது. இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல் தூங்குகிறான், பாவம்,'' என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.
பின்னர் ஞானி ஒருவர் அங்கு வந்தார். அவர், ''இவரும் நம்மைப் போல ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும். தியானத்தில்
இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,'' என்று நினைத்தவாறு தன் பாதையில் சென்றார்.
இவ்வுலகில் நல்லவர்கள் தங்களைப்போல் அடுத்தவரையும் நல்லவராகவே பார்க்கின்றனர். தீயவர்கள் தங்களைப்போல் அடுத்தவரையும் தீயவராகவே பார்க்கின்றனர்.

Thursday, 27 November 2014

தயிர் உங்களுக்கு கிடைத்தால் என்ன வெல்லாம் செய்யலாம்..? அதன் நன்மைகள் என்ன?


1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!!!


வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது,
என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.
இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும் விளக்கேற்றவேண்டிய நேரம் விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.
பொதுவான விதிமுறைகள்
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம் எந்தெந்த எண்ணைகளில்
விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும். வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்? தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.
சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் கீடா: பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்விளக்கினின் முன்னே வேதனை மாறும்விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!!!

கொஞ்சம் சிரிக்க...

இந்தியன் ஹோட்டல் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார். ”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. நம்மாளு ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பொட்டலம் பிரியாணியை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு,
”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்..

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு ஹோட்டலுக்குச் சென்று பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பார்த்தேன்” என்றார் அவர்.
மயங்கி விழுந்தார் அமெரிக்கர்.
யாருகிட்ட...நாங்கெல்லாம் அப்பவே அப்பிடி ...


ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார்.சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.
அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில்,சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார்.எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.
4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது.
எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.
உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, ஓட்டிச் சென்று, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.
இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்.
இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.
எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்


நம்ம ஆள் ஒருத்தன் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றார்.
அப்போது, ஒரு ரயிலில் பயணத்தின் போது பழக்க தோஷத்தில் எதிரே உள்ள சீட்டின் மீது கால் போட்டு சொகுசாக அமர்ந்த படி பயணம் செய்தார்.
இதை கண்ட ஓரு ஜப்பானியர் அவர் சீட்டை விட்டு எழுந்து வந்து உடனே நம்ம ஆளின் காலை சீட்டிலிருந்து எடுத்து தன் மடி மேல் வைத்து கொண்டார்.
நம்ம‌ம் ஆளுக்கு ஒரு மாதரி ஆகிவிட்டது.
உடனே நம்ம ஆள், :ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு ஜப்பானியர் சொன்னார், "நீங்கள் எங்கள் நாட்டின் சொத்தை அவமதிப்பது போல் கோவமாக இருந்தது. இருந்தாலும் நீங்கள் எங்கள் நாட்டின் விருந்தினர். அதனால் உங்கள் செளகரியத்துக்காக என் மடிமேல் வைத்துக்கொண்டேன்" என்று சொன்னார்.
நம்ம ஆள் கூனிக்குறுகி அவரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார்.
அதற்கு அந்த ஜப்பானியர், இங்கு மட்டுமல்ல உங்கள் நாட்டிற்கு சென்றாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது அடுத்தவருக்கு இடையூறு கொடுக்காமலும் நடந்து கொள்ளும்படி சிரித்த முகத்துடன் அறிவுறுத்தினார்.
இப்ப சொல்லுங்க நாம் ஏன் முன்னேற முடியவில்லை...??

காது கேட்கும் திறன் மங்கிய அந்த நான்கு வயது குழந்தை பள்ளி முடித்து வீடு திரும்பி வந்த போது தன் பாக்கெட்டில் ஆசிரியை எழுதித் தந்த சீட்டை தன் அம்மாவிடம் கொடுத்தது.
அந்தச் சீட்டில் “ உங்கள் மகன் மிகவும் முட்டாளாக இருக்கிறான். அவனை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் நல்லது என்று“ .
அவனது அம்மா அந்தச் சீட்டைத் திருப்பி “ எனது மகன் முட்டாள் இல்லை. அவனுக்கு நானே கற்றுக் கொடுக்கிறேன் “ என்று எழுதி அம்மா கொடுத்தார்.
அந்தச் சிறுவன் அந்தச் சீட்டைக் கொடுத்த நாளுக்குப் பின் பள்ளிக்குச் செல்லவில்லை.
பள்ளியில் மொத்தம் மூன்று மாதங்கள் மட்டும் படித்த அந்தக் குழந்தை யார் தெரியுமா ?
உலகின் தலை சிறந்த விஞ்ஞானி என்று சொல்லப்படும்
தாமஸ் ஆல்வா எடிசன் தான் அவர்.
அப்போதிருந்து வீட்டில் தன் மகனுக்கு பாடங்களைக் கற்றுத் தந்த இவர் அம்மா நான்சி எலியட்தான் உண்மையான சாதனையாளர்.
எடிசன் சொல்லும்போது “ என் அம்மாதான் என்னை உருவாக்கியவர்.
என் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். வாழ்வதற்கு தைரியத்தை ஊட்டியவர்.
அவருக்கு நான் ஏமாற்றத்தை தரக் கூடாது என்று எண்ணினேன் “ என்று கூறினார்.


AMERICA : முதல் முறையா நாங்க தான் "MOON"ல கால் வச்சோம்.
GERMAN : நாங்க தான் "VENUS"ல கால் வச்சோம்.
JAPAN : நாங்க தான் "MARSH"ல கால் வச்சது.
AMERICA : ஹேய் இந்தியா,நீங்க எதுல கால் வச்சீங்க?
INDIA : நாங்க தான்டா "SUN"ல கால வச்சது.
AMERICA : டேய் பொய் சொல்லாதிங்க டா.SUN க்கு பக்கத்துல போனாலே நீங்க செத்துருவீங்க டா.
INDIA : அடிங்ங்ங்ங் கொய்யாலே.நாங்க போனது நைட்ல டா.
AMERICA : ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ......

Wednesday, 26 November 2014

நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா

கெளதம புத்தர் ஒரு வழியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான். தன் மேல்துண்டால் துடைத்து விட்டு,
"இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர்.
அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை
பார்த்து சொன்னார்,
"ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால்
அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?"
என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் நித்திரையே வரவில்லை.
அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது
காலில் விழுந்து அழுதான். அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்,
"இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார்.
அவன் எழுந்து கேட்டான்
"நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?"
என்று.
அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்,
"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?"

வீட்டு வைத்தியத்தில் வழி இருக்கிறதா?


குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?
அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளி, ஜலதோஷம், தலைவலி என எந்தப் பிரச்னையும் நெருங்காது.
சிலர் கசப்பான பொருட்களை நாக்கில் படாமல் அப்படியே முழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும். அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவை களையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

Friday, 21 November 2014

மனக்கட்டுப்பாடே வெற்றிக்கு அடிப்படை...

வாழ்வில் ஒருவர் பெறும் வெற்றியானது, அவரின் அறிவுத்திறன் அல்லது கல்லூரியில் அவர் பெறும் மதிப்பெண்களால் மட்டும் நிகழ்வதில்லை. ஒருவரின் சுயக்கட்டுப்பாடே, வெற்றியை தீர்மானிக்கும் அம்சமாக திகழ்கிறது. பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் ஒருவர், பல்வேறான குழப்பங்களுக்கு ஆளாகிறார். தான் படிக்கும் கல்லூரி, சிறந்ததாக இருக்க வேண்டுமென கருதுகிறார். ஆனால் ஒருவர், எத்தகைய பிரபலம் வாய்ந்த கல்லூரியில் படிக்கிறார் என்பதைவிட, அவர் அங்கே எதை கற்றுக்கொள்கிறார் மற்றும் எப்படி கற்றுக்கொள்கிறார் என்பதே முக்கியம்.
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒருவர் வாழ்வில் வெற்றியடைய வேண்டுமெனில், அவருக்கு சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம் என்ற முடிவு கிடைத்துள்ளது. உங்களின் மிதமிஞ்சிய உணர்வுகளை அடக்கும் சுய கட்டுப்பாட்டு பழக்கமானது, கல்லூரி வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முழுவதும், உங்களுக்கு வெற்றியைத் தரும்.
கல்லூரி வாழ்வில் நுழைந்தவுடன், ஒரு புதிய சுதந்திரமான உலகை, இளைஞர்கள் உணர்கிறார்கள். கல்லூரி வாழ்க்கை என்பதே, சந்தோஷமாக ஆடிப்பாடி திரிந்து, இன்பமாக இருப்பதற்குத்தான் என்றும், படிப்பது மற்றும் வகுப்பறை நடவடிக்கைகளில் பங்கு கொள்வது அவ்வளவு முக்கியமற்றது என்றும் அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். இதன்மூலம், அவர்கள் தங்களின் எதிர்கால மற்றும் நீண்டகால நலனை பணயம் வைக்கிறார்கள். அவர்களால், தங்களின் மனஉணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. குறுகியகால சந்தோஷங்களுக்காக, நீண்டகால நன்மையை தொலைக்கின்றனர்.
நீங்கள் உங்களுக்குள் நம்பிக்கை வைக்கவில்லையெனில், உங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பவில்லையெனில், உங்களின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளே ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தன்னுள் வளர்த்துக் கொண்டவர்கள், வெற்றிக்கான வாய்ப்புகள், தங்கள் கதவுகளை தட்டும்போது, அதை கவனிக்க தவறிவிடுவார்கள். எனவே, அவசரப் புத்தியை கைவிடுங்கள். தேவையற்ற கோபம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். பொறுமையையும், நேர்மறை எண்ணத்தையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக, வெற்றி உங்களைத் தேடிவரும்.

தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகிவிட்டாசே. வீட்டிலேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங்களுக்கு சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம் பருகும் தண்ணீரிலிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக மாறிவிட்டது.

சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெதுவெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்னையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.

மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர்’ கண்டிப்பாக இருக்கும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.

அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர்’ போன்று செயல்படும். கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

செல்வந்தரின் அறியாமை

ஓரு பெரும் செல்வந்தர் தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டினார்.
“இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார்.
அதற்கு துறவி, “இல்லையேப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே”என்றார்.
“யார் அவன்? எப்போது சொன்னான்?” என்று செல்வந்தன் சீறினான்.
“ஐம்பது வருடத்திற்கு முன்” என்றார் துறவி.
அதற்கு செல்வந்தன், “அது என் தாத்தா தான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை” என்றான்.
“இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா” என்று கேட்டார் துறவி
“அவர் என் அப்பாவாக இருக்கும்” என்றான் செல்வந்தன்.
“நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று துறவி கேட்டார்.
அதற்கு அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி, “அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்” என்றான் அந்த செல்வந்தன்.
துறவி சிரித்துக்கொண்டே, “நிலம் இவர்களுக்குச் சொந்தமா..? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா..? என் நிலம், என் சொத்து, என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும், ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்” என்று கூறி முடித்தார் துறவி.
செல்வந்தன் தனது அறியாமையை எண்ணி தலை குனிந்தான்

Tuesday, 18 November 2014

தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம்

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான்.
அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காணஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.
அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான். முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரியஅண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு, சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!
எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப்பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.
ஆனால்,
அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?
இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான். "ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்."
' தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை
உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்'...

வீட்டு வைத்தியம்!

ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே!
* குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
* காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துச் சேர்த்து சுட்டுச் சாப்பிட்டால், நெஞ்சுச்சளியை விரட்டும். உளுந்த மாவுடன் கல்யாண முருங்கை இலையை பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வடை செய்து சாப்பிட்டாலும் சளிப் பிரச்னைக்கு நல்லது.
* மதிய உணவுக்குச் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த குழம்பும், தூதுவளை துவையல், இஞ்சி துவையல், கொள்ளு துவையலும் நல்லது. சின்னவெங்காயத்தை பச்சையாக உரித்து மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். மிளகு ரசமும் நல்லது.

* மூக்கடைப்பு இருந்தால், விரலி மஞ்சளை நல்லெண்ணெயில் தோய்த்து எடுத்து தீயில் வாட்டி, அதன் புகையை சுவாசிக்கலாம். நொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசிப்பதாலும் மூக்கடைப்பு விலகும். நொச்சி இலை கிடைக்காதவர்கள், வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கியதும் போர்வையால் போர்த்தி வேது (ஆவி) பிடித்தால்... தலைபாரம், மூக்கடைப்பு, ஜலதோஷம் சரியாகும். ஜாதிக்காயை நீர்விட்டு உரசி எடுத்துக்கொண்டு, கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். குழம்பு போன்று வந்ததும் மூக்கின் மேல் பற்று போட்டாலும் மூக்கடைப்பு விலகும்.

* தலைபாரம், தும்மல், நீர்கோத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால், தலையணை உறையில் நொச்சி இலைகளை வைத்து உறங்க, நிம்மதியான தூக்கம் வரும். நொச்சி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை சுவாசித்து வந்தாலும் இந்தப் பிரச்னைகள் நீங்கும்.
சுக்குவெந்நீர் தயாரியுங்கள் இப்படி!

*மாலையில் சுக்கு காபி குடிக்கலாம். இதை சுக்கு காபி என்று சொல்வதைவிட சுக்கு வெந்நீர் என்பதே சரியாக இருக்கும். சுக்கு வெந்நீர் செய்ய... மிளகு 10 கிராம் என்றால், சுக்கு 20 கிராம், 40 கிராம் தனியா (கொத்தமல்லி விதை), நான்கைந்து ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து வடிகட்டிக் குடிக்கலாம். கிடைக்கும்பட்சத்தில்... துளசி, தூதுவளை, ஓமவல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிற்றுண்டி ஏதாவது சாப்பிட விரும்பினால் ஓமவல்லி இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.

பூண்டுப்பால் தயாரியுங்கள் இப்படி!

* இரவில் உறங்கப்போவதற்கு முன், பூண்டுப்பால் சாப்பிடலாம். பூண்டுப்பால் செய்ய 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர், உரித்த பூண்டுப்பற்கள் 10 போட்டு பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்குவதற்கு முன் 2 சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும். பிறகு, பனங்கற்கண்டு (இல்லாதபட்சத்தில் சர்க்கரை) சேர்த்து கடைந்து சாப்பிடவும்.

மணத்தக்காளி சூப் வைக்கலாம் இப்படி!

* ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, இருமல் இருந்தால்... மணத்தக்காளி சூப் நல்ல பலன் தரும். எப்படிச் செய்வது? மணத்தக்காளி கீரை, மிளகு, சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் இறக்கி வடிகட்டி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியங்கள் அனைத்துமே பெரிதாக செலவு வைக்காமல், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஆரோக்கியத்தை உங்களுக்குப் பரிசளிக்கக் கூடியவை. இவற்றை தேவையைப் பொறுத்து அனைவருமே மேற்கொள்ளலாம்.

Saturday, 15 November 2014

வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி?

3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம் துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.

காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும்.

இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது.

வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும்.

இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது.

உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும்.

இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும்.

இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும்.

வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும்.

வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்.

Tuesday, 11 November 2014

காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு!

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

* துளசி கஷாயம்

சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.

* பனங்கற்கண்டு பால்

ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

* பொட்டுக்கடலை மிக்ஸ்

புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன்கள், சிறிது கல் உப்பு, 5 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும். 
* தேங்காய்ப்பூ லேகியம்

ஒரு மூடி தேங்காய்ப்பூவை வெறும் சட்டியில் வதக்கிக்கொள்ளவும். சிறிது சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, நெய் விட்டு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் வதக்கிய தேங்காய்ப்பூ, 50 கிராம் பனங்கற்கண்டை சேர்த்து வதக்கவும். லேகியம் பதத்தில் வரும் இதை அப்படியே சாப்பிடலாம். ருசியாக இருக்கும் இந்த லேகியத்தை, குழந்தைகளுக்கு உருண்டைகளாகச் செய்து கொடுக்கலாம். 

மேற்கூறிய கை வைத்தியங்களைச் செய்து பாருங்கள்... சளி, இருமல் கட்டுப்படுவதுடன், வெளியேறிவிடும்

Friday, 7 November 2014

துளசியை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

துளசியை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி துளசிப் பொடியை 1தம்ளர் நீரில் இட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படும் ஒரு நாளைக்கு மூன்று வேளை இப்படித் துளசித் தீநீர் சாப்பிட சர்க்கரை அளவு நாளடைவில் குறைந்துவிடும்.

குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி துளசிசாறும் பெரியவர்களுக்கு இரண்டு தேக்கரண்டி அளவும் தினம் இருவேளைப் பருகச் செய்வதால் இருமல், ஆரம்ப நிலை நுரையீரல் தொற்று நோய்கள், மூச்சு விடுவதில் சிரமம், மனஉளைச்சல் காரணமாகத் தோலில் ஏற்படும் நோய்கள், செரிமானமின்மை ஆகிய நோய்கள் போகும்.

1ஸ்பூன் துளசிச் சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, 5மிளகு ஆகிய மூன்றையும் ஒரு சேரக் கலந்து உள்ளுக்குக் குடிப்பதால் நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் ஆஸ்த்துமா குணமாகும். இருமல்,குத்திருமல், வறட்டு இருமல் என வந்தபோதும் துளசிச்சாறோடு தேன் கலந்து குடிப்பதால் இருமல் விரைவில் தணிந்து சுவாசப் பாதை குணம் பெறும்.

துளசி சாறை தோலின் மீது ஏற்படும் வேர்க்குரு போன்ற துன்பங்களுக்கும், பல்வேறு தோல் நோய்களுக்கும் குறிப்பாகத் தேமல் போன்றவற்றுக்கும் மேல்பூச்சு மருந்தாக பூசி வர தோல் நோயகள் தொலைந்து போகும். துளசி சாற்றினை ஓரிரு துளிகள் காதுகளில் விடுவதால் காது நோய் குணமாகும்.

புட்டாலம்மை எனப்படும் பொன்னுக்கு வீங்கி என்னும் நோய் வந்து துன்புறுகையில் காதுகள் இரண்டிலும் துளசிச் சாறு சில துளிகள் விடுவதோடு உள்ளுக்கும் ஓரிரு தேக்கரண்டி பருகச் செய்து வீக்கத்தின் மேல் துளசி சாறும் மஞ்சளும் கலந்து பூசி வருவதால் மேற்சொன்ன நோய் விரைவில் குணமாகும்.

50.மி.லி துளசிச் சாற்றுடன் 5மி.லி தேன் கலந்து அன்றாடம் ஒரு வேளை என 3 மாதங்கள் பருகி வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறிவிடும். சிறுநீர்பாதையும் சீர்படும். துளசி இலைச்சாறும் நீரும் கலந்து மணி நேரத்துக்கு 1முறை பருகுவதால் கடுங்காய்ச்சலும் காணாது போகும்.

துளசி இலை, பூக்கள், வேர் ஆகிய அனைத்துமான மூலச்சாறு தேள் மற்றும் பாம்புக் கடி விஷத்தைப் போக்கக் கடிய அருமருந்தாகும். துளசி இதுபோன்ற பல்வேறு இன்ன பிற நோய்களையும் போக்க வல்லது. என்பதால் இன்றே ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்துத் துன்பம் தவிர்க்க வேண்டும்.

Monday, 20 October 2014

மழையை கொண்டாடும் வானிலை வலைப்பதிவர்கள்

சென்னையிலும் தமிழகத்திலும் மழை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை எவ்வளவு மழை பெய்திருக்கிறது? இன்னும் எத்தனை நாள் மழை தொடரும்? இப்போது எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறது? இது போன்ற கேள்விகள் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா? இப்படி வானிலை தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படி என்றால் சென்னையின் வானிலை வலைப்பதிவர்களின் இணையதளங்களுக்கு விஜயம் செய்யுங்கள். வானிலை விவரங்கள் பற்றியும் மழை பற்றியும் லேட்டஸ் அப்டேட்களை தெரிந்து கொள்வதோடு நீங்கள் மழையின் ரசிகர் என்றால் அந்த ஆர்வத்தையும் ப்கிர்ந்து கொள்ளலாம்.
வானிலை விவரங்கள் என்றவுடன், வானிலை ஆய்வு மையத்தின் இணையதளம் தான் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். வானிலை ஆய்வு மைய இணையதளம் அதிகாரபூர்வ தகவலுக்கான தளமாக இருந்தாலும் வானிலையை அறிவதற்கான ஒரே இணையதளம் இல்லை. வானிலை விவரங்களை அறிந்து கொள்வதற்காக வேறு சில இணையதளங்களும் , வலைப்பதிவுகளும் இருக்கின்றன.  இவை வானிலையில் ஆர்வம் கொண்ட அமெசூர் வானிலை நிபணர்களால் நடத்தப்படுபவை. அமெச்சூர் நிபுணர்களே தவிர விவரங்களை பகிர்வதில் இவர்கள் காட்டும் சுறுசுறுப்பும் வியக்க வைக்கும். சரியாகவும் இருக்கும்.
வானிலை தொடர்பான நுட்பத்தகவல்கள் மற்றும் செயற்கைகோள் விவரங்கள் இந்திய வானிலை மையம் உள்ளிட்ட அமைப்புகளின் இணையதளங்களில் பதிவேற்றப்படுகின்றன. அவற்றை கொண்டு ஆர்வம் உள்ள எவரும் வானிலையை கணிக்கலாம். காற்றின் திசை, ஈரப்பதத்தின் அளவு, செயற்கைகோள் படம் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வானிலையின் போக்கை கணிக்கும் அடிப்படை தெரிந்திருந்தால் போதும்.
இந்த வானிலை வலைப்பதிவர்கள் இதை தான் செய்கின்றனர். இப்படி வானிலை மாற்றத்தை ஆர்வத்துடன் கவனித்து பகிர்ந்து கொள்ளும் அமெச்சூர் வல்லுனர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். புயல் மழை, சூறாவளி போன்ற காலங்களில் இவர்கள் வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்புடன் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள். அவை பயனுள்ளதாகவும் இருக்கும். நம்மூரிலும் இத்தகையை வானிலை வலைப்பதிவர்கள் பலர் இருக்கின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், அதிலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆரம்ப ஓவரிலேயே அசர வைக்கும் துவக்க வீரர்கள் போல பருவமழை துவக்கத்திலேயே பீய்த்து உதறும் நிலையில் இந்த வலைப்பதிவுகளை தெரிந்து கொள்வது பயனுள்ளதாகவே இருக்கும்.
அந்த வகையில் முதலில் கியாவெதர்பிலாக் (http://blog.keaweather.in/ ) தளத்தை தெரிந்து கொள்ள வேண்டும். கியா வானிலை ( http://www.kea.metsite.com/) தளத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த தளத்தை வானிலை வலைப்பதிவர்களின் கூடாரம் என சொல்லலாம். வானிலையை பின் தொடர்வதில் ஆர்வம் உள்ள வலைப்பதிவர்கள் இணையத்தில் ஒன்று கூடி தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இடமாக இந்த தளம் இருக்கிறது.  இந்த வலைப்பதிவில் சிறிது நேரத்தை செலவிட்டால் இரண்டு ஆச்சர்யங்கள் ஏற்படும். ஒன்று வானிலையில் ஆர்வம் கொண்டவர்கள் இத்தனை பேர் இருக்கின்றனரா? என்பது. இன்னொன்று மழையும் மழை சார்ந்த விவரங்களும் இத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா? என்பது. இரண்டுக்கும் முன்பாக வடகிழக்கு பருவமழை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை கலக்குகிறது எனும் தலைப்பிலான பதிவில் கடலோர தமிழக்த்தில் மழை தொடகிறது, சென்னையிலும் அவ்வப்போது மழை/கனமழை பெய்யும். தீபாவளி தினமான 22, 23 க்கு அடை மழை நிச்சயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே செயற்கைகோள் படமும் இருக்கிறது.  இந்த பதிவுக்கு மட்டும் 600 க்கும் அதிகமான பின்னூட்டங்களில் வானிலை ஆர்வலர்கள் கருத்து பரிமாற்றம் செய்திருப்பதை பார்க்கலாம். மழை தொடர்பான சந்தேகங்கள், தெளிவுபடுத்தல்கள், புதிய விவரங்கள் என இவை சுவாரஸ்யமாக இருக்கின்றன.
சென்னையில் எந்த பகுதிகளில் எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது , எவ்வளவு மழை பெய்துள்ளது போன்ற தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றனர்.  மற்றொரு பதிவுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான பின்னூட்டங்கள் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் ஒரெ நாளி அதிகமாக மழை பெய்த நாள் என்பது உட்ப்ட பலவேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.  வேலைக்கு செல்லாமல் மழையை பார்த்து கொண்டிருக்கிறேன் என ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவர் வேலைக்கு போகும் வழியில் அப்டேட் செய்வதாக கூறியுள்ளார். கொட்டும் மழையை பார்த்ததும் மனம் துள்ளுகிறது என்றும் பலர் சந்தோஷம் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை துவக்கத்திலேயே இப்படி அசத்தியதில்லை என்று ஒருவர் கூறியுள்ளார்.  மழை பற்றிய அப்டேட்களை சுவார்ஸ்யமாக தெரிந்து கொள்ள இந்த தளம் ஏற்றது. கியா வானிலை தளம் ஆன்லைன் வானிலை மையமாக செயல்பட்டு உடனுக்குடன் விவரங்களை அளித்து வருகிறது. இதே போல சுவாரஸ்யமாக இருக்கும் இன்னொரு வலைப்பதிவு , இந்தியன்வெதர்மேன் (http://indianweatherman.blogspot.in/ ) . இஸ்ண்டாகிராம் புகைப்படங்களுடன் இதில் மழை தகவல்கள் பகிரப்படுகிறது. வேகரீஸ்.இன் (http://www.vagaries.in/ ) அகில இந்திய அளவிலானது . சென்னைக்கும் தனிப்பகுதி இருக்கிறது. புகைப்படங்களுடன் மழை விவரங்களை பார்க்கலாம். பாகிஸ்தான் வானிலை வலைப்பதிவர்களும் இதில் இணைந்துள்ளனர் என்று உற்சாகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்சர் - அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்!



பூசணி  உலர் திராட்சை ராய்த்தா
தேவையானவை: பூசணித் துருவல் - 2 கப், உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, விருப்பப்பட்டால் தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், புளிக்காத தயிர் - ஒரு கப்.
செய்முறை: பூசணித் துருவலில் உள்ள தண்ணீரை, நன்றாகப் பிழிந்துவிடவும். தயிரில் தண்ணீர் இருந்தால், அதை வடிகட்டிவிட்டு, பூசணித் துருவல் மற்றும் கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் தயிரில் சேர்த்துக் கலக்கவும். குளிரவைத்துச் சாப்பிட்டால், சுவை கூடும்.  

 
மணத்தக்காளிக் கீரை மண்டி
தேவையானவை: மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 6, கெட்டியான முதல் தேங்காய்ப் பால், இரண்டாம் பால், அரிசி கழுவிய தண்ணீர் (மண்டி)- தலா அரை கப், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, வெந்தயம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும். குக்கரில், எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளாமல் போட்டு, தோல் உரித்து இரண்டாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும், இரண்டாம் பால், அரிசி மண்டியைச் சேர்த்து, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் கீரையைப் போட்டு, மூடி இரண்டு விசில் வந்ததும் இறக்கி, முதல் பாலைச் சேர்க்கவும்.
குறிப்பு: இந்த மண்டியை, சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண்ணுக்கும் இது நல்லது.

 
வாழைத்தண்டு மோர்  
தேவையானவை: புளிக்காத மோர் - ஒரு டம்ளர், நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - ருசிக்கேற்ப, பூண்டு - பாதி, சின்ன வெங்காயம் - 1.
செய்முறை: எல்லாப் பொருட்களையும் மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.
குறிப்பு: பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.

ஒரு நாள் உணவுப் பட்டியல்:
காலையில் எழுந்ததும் பால் அல்லது 'லைட்’ காபி/டீ.
காலை: இட்லி / இடியாப்பம் / குறைந்த எண்ணெயில் செய்த தோசை அல்லது ஏதாவது பழங்கள். தொட்டுக்கொள்ள, காரம் அதிகம் இல்லாத தேங்காய் சட்னி, தேங்காய் பால். (வாய் மற்றும் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.)
11 மணி: புளிக்காத மோர்.
மதிய உணவு: நிறையக் காய்களுடன் சேர்த்த அரிசி சாதம். கூடவே சப்பாத்தி, பருப்புக் கூட்டு, சப்ஜி, மோர். அசைவப் பிரியர்கள், பருப்புக்குப் பதில் சிக்கன் அல்லது மீன் கிரேவி.
மாலை 4 மணி: பால், அதிக டிகாக்ஷன் இல்லாத காபி/டீ. அரை மணி நேரம் கழித்து அந்தந்த சீஸனில் ஏதாவது பழங்கள்.
இரவு:  இரண்டு இட்லி, தோசை, சப்பாத்தி இவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 அளவில் பருப்பு, மோருடன் சாப்பிடலாம். கொஞ்சம் சாதம், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாலட், தயிர்ப் பச்சடி, நீர்த்த சூப், தேங்காய்ப் பால் சேர்த்த ஸ்ட்யூ வகைகள் சேர்க்கலாம்.
சேர்க்க வேண்டியவை:
மோர் அதிகம் அருந்துவது மிகவும் நல்லது.
கீரை, பீன்ஸ், கேரட் மற்றும் அனைத்து நீர்க் காய்கள்.
காரத்துக்கு மிளகு, சீரகம் சேர்த்துச் சாப்பிடலாம்.
தயிர்ப் பச்சடியில் காய்கள் அதிகமாகவும் தயிர் குறைவாகவும் சேர்க்கவேண்டும்.
நெஞ்செரிச்சல் பிரச்னை உள்ளவர்கள், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு, 2 மணி நேரம் முன்பாகச் சாப்பிட்டுவிட வேண்டும்.
எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை, காலை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.  இரு வேளை உணவுகளுக்கு இடைப்பட்ட வேளையில் சாப்பிடலாம்.
தவிர்க்க வேண்டியவை:
வறுத்த, பொரித்த உணவுகள், கடின உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பருப்பு உசிலி, சென்னா மசாலா, வறுத்த மீன், கடலைமாவில் செய்த பஜ்ஜி, பக்கோடா, மிக்சர் மற்றும் அதிகச் செரிவான சாக்லேட்டுகள், 'ஸ்ட்ராங்’ காபி, கருப்புக் காபி தவிர்க்கலாம்.
ஃப்ரூட் சாலட் செய்யும்போது, க்ரீம் போன்ற செரிக்கக் கடினமான பொருட்களைச் சேர்க்க வேண்டாம்.

வெஜ் அண்ட் ஃப்ரூட் சாலட்
தேவையானவை: வெள்ளரிக்காய், ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா - தலா 1, விதை இல்லாத திராட்சை - 100 கிராம், மாதுளை முத்துக்கள் - அரை கப், எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கொத்து.
செய்முறை: வெள்ளரிக்காயைக் கழுவி, தோல் சீவி (பிஞ்சு எனில் தோல் சீவத் தேவை இல்லை), மெல்லிய அரை வட்டத் துண்டுகளாக நறுக்கவும். கொய்யாப் பழத்தின்  விதைகள் நீக்கி, அதே வடிவில் நறுக்கவும். ஆப்பிளைத் தோல் சீவி நறுக்கவும். ஆரஞ்சுச் சுளைகளை விதை, நார் நீக்கி எடுத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, நறுக்கிய காய், பழத் துண்டுகளைச் சேர்க்கவும். இதில் கொத்தமல்லி, புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

பீர்க்கங்காய் இளங்கூட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், பீர்க்கங்காய் - 150 கிராம், சின்ன வெங்காயம் - 5, தக்காளி - 1, மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: பீர்க்கங்காயைத் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை முக்கால் பதமாக வேகவிட்டு, வெந்ததும், பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து, அதிலேயே மிளகாய்த் தூள், உப்பு போட்டு வேகவைக்கவும். காய் வெந்ததும் இறக்கவும். கடுகு தாளித்துச் சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கலக்கவும்.  
குறிப்பு: மிளகாய்த் தூளுக்குப் பதிலாக, இரண்டு காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கலாம். சிறிது கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால், நன்றாக இருக்கும். சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ்.

Wednesday, 8 October 2014

எப்படியெல்லாம் நெல்லிகாயை பயன்படுத்தலாம்



நெல்லிகாயை காயல்கனி என்பார்கள். காலங்களில் சிறந்தது வசந்தகாலம். இந்த வசந்த காலத்தில் நெல்லிகாய் எல்லா இடங்களிலும் கிடைக்கும். மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த நெல்லிகாயை நிறைய பயன்படுத்தினால் நலமாய் வாழலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி 100 கிராமிற்கு 600 கிராம் நிறைந்துள்ளது. சி வைட்டமின் நம் உடலில் குறைவதால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அடிக்கடி சிலருக்கு ஜலதோசம் பிடிக்கும். இதுவும் வைட்டமின் சி குறைவினால் தான் ஏற்படுகிறது.

இது தவிர புரதம் கொழுப்பு சுண்ணாம்புசத்து பாஸ்பரஸ், மாவுசத்து நார்ச்சத்து வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் உண்டு. நெல்லி உடலுக்கு குளிர்ச்சி தரும். இதை உண்பதால் சிறுநீர் தாரளமாக பிரியும். கர்ப்பபை கோளாறகள் நீங்கும். இரத்தம் தூய்மை அடையும். இக்காயின் இன்னும் ஒரு சிறப்பு காயை உலர்த்தினாலும், வேகவைத்தாலும் குளிர வைத்தாலும் அதிலுள்ள வைட்டமின் சி குறையாது.

எப்படியெல்லாம் நெல்லிகாயை பயன்படுத்தலாம்.

வாங்கியவுடன் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவுக்கு மேலாக தண்ணீர் விட்டு வேகவிடவும். தேவையான கல் உப்பும் சிறிது மஞ்சள் தூளும் போடவும் 5 அல்லது 10 நிமிடத்திற்குள் ஒரு காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் அழகாக உடையும் உடனே இறக்கி வைத்து ஆறிய பிறகு பாட்டிலில் நீரோடு எடுத்து வைக்கவும். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் என்று எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ளலாம்.

தேவையான வெந்த நெல்லிகாயை எடுத்து உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய் பச்சை மிளகாய் வெந்த நெல்லிகாய் சேர்த்து அரைத்து புளிக்காத தயிரில் சேர்த்து உப்பு பச்சடி செய்யலாம். பச்சை நெல்லிகாயை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து கொண்டு பருப்பு ரசம் மிளகு ரசம் இவைகளில் சேர்க்கலாம். புளியை குறைவாக சேர்த்து கொள்ள வேண்டும்.

நெல்லிகாயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ நெல்லிகாய் என்றால் அரைக்கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல் வரும்போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எஸன்ஸ், ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை அரை தேக்கரண்டி சேர்த்து சூடு ஆறியதும் காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். சப்பாத்தி, பிரட் தோசை, இட்லி போன்ற அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம். கொளுத்தும் வெயிலுக்கு நம் உடம்பிற்கு ரொம்ப நல்லது.

நெல்லிகாயை நிறைய வாங்கி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். முளைச்சூடு குறையும். கூந்தல் கரு கரு வென செழித்து வளரும். முடிகளை வலுவாக்கும் பொடுகும் வராது.

இதயக்கனி ஆரோக்கிய கனி என்று அழைக்கப்படும் நெல்லிகனியை நாம் தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

வேப்பிலை


 கர்ப்பப்பை நீர்கட்டிக்கான மருந்து( மலை வேம்பு)

பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த  பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க, நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.( மலை வேம்பு இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு எடுத்து  ஒருடம்ளராக குறுக்கிக் குடிக்கவும் ---  )

நீர்க்கட்டி இருந்தால் தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை.குழந்தை உண்டாவது தள்ளிப் போகிறவர்களும் குடிக்கலாம்.

மலை வேம்பு வேப்ப மரத்தில் வேறு வகை.வேப்பிலையை விட சின்னதா இருக்கும் அதோட பூ கலர் வெள்ளை பா அதுக்குள்ள இருக்கற மகரந்தம் பர்பிள்ஊதா கலர்ல இருக்கும் வித்தியாசமா கொத்து கொத்தா இருக்கும் கறிவேப்பிலை கலர்ல இருக்கும்.

மலை வேம்பு இலையுடன் தண்ணீர் விட்டு அரைத்துக் சாறு பிழியவும் அல்லது வேப்பிலை எடுத்து நைஸா அரச்சு சுண்டைக்காய் அளவு உருட்டி 3 உருண்டை சாப்பிடனும் மற்றும் நடைபயிற்சி 2KM.ஜூஸ் குடிக்கும் 3 நாட்கள் மட்டும் தான் எண்ணெய்,புளிப்பு இல்லாத சாப்பாடு சாப்பிடனும்.மற்ற நாட்கள் எப்போதும் போல சாப்பிட்டுக் கொள்ளலாம்.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வாட்டி
எடுக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல மருத்துவமுறைகளை கையாண்டு வருகின்றனர். இதில் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பது நிலவேம்பு கசாயம். இதற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நிலவேம்பு மூலிகையின் பங்கு அதிகம் உள்ளது. ஒரு சிறந்த கிருமி நாசினி இதனால் உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உருவாகின்றது.

இந்தியாவில் இந்த மூலிகை அதிகம் காணப்படும் ஒரு செடி வகையாகும். இது சூரத்து நிலவேம்பு, சீமை நிலவேம்பு என்று இருவகை உண்டு. இதனை சிரட்குச்சி, கிராதம், கிரியாத்து, கிராகதி, நாட்டுநிலவேம்பு, காண்டம், கோகணம் என்று பல பெயர்களால் கூறப்படுகின்றது. இதன் இலை, தண்டு, காய், வேர், பூ அனைத்தும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் மருத்துவ குண நலன்களை பற்றி பார்ப்போம்.

குடல் பூச்சி நீங்க:
வயிற்று பூச்சிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தையும்
உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து காஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.

உடல் வலு பெற:

உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.

மயக்கம் தீர:
சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.

பசியை தூண்ட:
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்துவந்தால் பசி நன்றாக ஏற்படும். அதே போன்று பித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.

தலை வலி நீங்க:
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.

குழந்தைகளுக்கு :
வயிற்று பொருமல் மற்றும் கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்கவைத்து ஆறவைத்து தினமும் 5 மிலி கொடுத்து வந்தால் வயிற்று பொருமல் சரியாகும்.

விஷ காய்ச்சல் குணமாக:
நிலவேம்பு 15 கிராம், கிக்சிலத் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.

அஜீரணம் சரியாக:
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை
விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலு பெறும் மேலும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.