நம்முடைய சிறுநீரகங்கள் திரவக் கழிவுகளை வடிகட்டி சிறுநீராக மாற்றி வெளியேற்றுகின்றன.
வடிகட்டும்போது கழிவுகளில் உள்ள இரசாயனப் பொருட்களும், உப்புகளும்
சிறுநீரகங்களில் தங்கிவிடுகின்றன. இவையே ஒன்று சேர்ந்து கல்லாக சிறுநீர்க்
குழாய்களை வந்தடைகின்றன.
அப்போது
சிறுநீர் கழிக்க முடியாமல் எரிச்சல் ஏற்படுகிறது. கற்கள் பெரிதாக இருந்தால்
அடி முதுகு, அடிவயிற்றில் சுரீரென்று வலி ஏற்படக்கூடும்.
சிலருக்குக் கற்கள் அமைதியாக இருந்து திடீரென்று சிறுநீர் கழிக்க முடியாமல் வேதனை தரும்.
சிறுநீர் கழிக்க எரிச்சலாக இருந்தாலும் சரி. அடிக்கடி அடி முதுகில் வலி மற்றும் விலாவில் திடீரென்று வலி ஏற்பட்டாலும் சரி, உடனே மருத்துவர் மூலம் சிகிச்சை பெறவேண்டும்.
மருத்துவச் சிகிச்சையுடன் உணவு மருத்துவத்தையும் பின்பற்றினால் சிறுநீரகக் கற்களையும், கோளாறுகளையும் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
சிறுநீரகக் கற்களை உடைத்துக் கரைத்துவிடும் சக்தி படைத்தது, ஆப்பிள் சாறு, காலையில் பழத்தை நன்கு கழுவி தோலைச் சீவாமல் கடித்தோ அல்லது சாறாகவோ அருந்தவும்.
கடுமையான வலியைக் குறைத்து கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டது, திராட்சை சாறு.
மாதுளம் பழச்சாறும் கற்களைக் கரைக்கும். மாதுளம் பழ விதைகளை ஒரு தேக்கரண்டி அளவு அரைக்கவும். இதை வாயில் போட்டுக்கொண்டு ஒரு டம்ளர் கொள்ளு ரசமும் அருந்தி வர வேண்டும்.
வாழைப்பழத்தில் புரதம் குறைவு, மாவுச்சத்து அதிகம். இதனால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் பாதுகாப்பாக வாழலாம். தினமும் இரண்டு மூன்று வாழைப்பழங்கள் சாப்பிடவும். சிறுநீரகங்கள் சிறப்பாக இயங்க அன்னாசிப்பழச்சாறு, கற்களும் பிரச்னைகளும் இருந்தால் ஆப்பிள், திராட்சை, மாதுளை என்று பழ உணவிற்கு முன்னுரிமை கொடுத்து சாப்பிட்டு வரவும்.
நாவல்பழம், இலங்தைப்பழம், பீச் போன்றவையும் சிறுநீரகக் கோளாறுகளையும், கற்களைக் கரைத்து வலியையும் குணமாக்கும் தன்மை கொண்டவை.
எலுமிச்சம் பழ சர்பத் சிறுநீரகங்களில் தங்கியுள்ள உப்புக்களை கரைத்து சிறுநீர் நன்கு பிரியச் செய்யும்.
சிறுநீர் கழிக்க எரிச்சலாகவும், கஷ்டமாகவும் இருந்தால் பரங்கிக்காய், மணத்தக்காளிப்பழம், வெள்ளரிக்காய் முதலியவற்றை உடனடியாக உணவில் சேர்த்து வாருங்கள். இதனால் சிறுநீர் வலியின்றி உடனுக்குடன் பிரியும்.
சிறுநீரகக் கற்கள் கரையும் வரை தக்காளி, பட்டாணி, அசைவ உணவு, கீரை போன்றவற்றைத் தவிர்க்கவும். காபியைக் குறைக்கவும். கீரை தேவை எனில் முள்ளங்கிக் கீரையை மட்டும் சேர்க்கவும்.
வைட்டமின் ஏ குறைந்தாலும் கற்கள் உருவாகும். எனவே காரட், சோயா மொச்சை மூலம் வைட்டமின் ஏ கிடைக்க இந்த உணவுகளையும் நன்கு சேர்க்கவும்.
இரவு உறங்கப் போகுமுன் இரண்டு மணி நேரம் முன்னதாக சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் படுக்கைக்குச் செல்லவும்.
நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை இரண்டு டம்ளர் வீதம் தண்ணீர் அருந்தி வரவும், தாகம் இல்லையென்றாலும்! எந்தக் கட்டத்திலும் எட்டு மணிநேரத்திற்குமேல் தண்ணீர் அருந்தாமல் இராதீர்கள். இதுவே, சிறுநீரக கற்கள் உருவாகிவிடாமல் தடுக்கும் முதல் மருந்து! அரிய மருந்தும்கூட!

No comments:
Post a Comment