Sunday, 5 January 2014

"காலிஃப்ளவர் பக்கோடா செய்யும் முறை



தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் (சிறியது) - ஒன்று
சோள மாவு - அரை கப்
சிக்கன் 65 மசாலா தூள் - 3 தேக்கரண்டி
ரெட் கலர் - சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :

சுடுநீரில் மஞ்சள் தூள் சிறிது உப்பு சேர்த்து காலிஃப்ளவரை போட்டு இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு தண்ணீரை வடித்துவிட்டு காலிஃப்ளவருடன் சிக்கன் 65 மசாலா தூள், சோள மாவு, உப்பு, ரெட் கலர் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்.

No comments:

Post a Comment