"மரு" (Skin Tag) உதிர...
இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.
இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...
அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.
மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.
இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்
அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது
அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.
இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும்
உண்டு. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக்
குணங்களையும் கொண்டுள்ளது. இந்த மூலிகையின் தண்டை கிள்ளினால் ஒரு வித பால்
வரும் அது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு,
இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும்
பயன்படுகிறது.இத்தாவரத்தின்
முழுப்பகுதியும் மருத்துவத்தில் பயன்படுகிறது. துவர்ப்பு மற்றும் இனிப்பு
சுவையுடையது. குளிர்ச்சித் தன்மையுடையது. குடல் புழுக்களைக் கொல்லும்,
உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும்,மலமிளக்கும், சுவாசத்தைச்
சீராக்கும், இருமலைத் தணிக்கும், பெண்களுக்கு பால் சுரப்பைத் தூண்டும்,
விந்து ஒழுக்கை குணமாக்கும். அம்மான் பச்சரிசிப் பால் ஒரு அரிய
மருந்தாகும். முகத்தில் தடவ முகப்பரு, எண்ணெய் பசை ஆகியவை மாறும். காலில்
பூசிவர கால் ஆணி,பாதத்தில் ஏற்படும் பித்தவெடிப்பு ஆகியவை மறையும். பால்
பருக்கள் மீது பூச அவை உதிரும். இதனை உள்மருந்தாகக் கொடுக்க இரைப்பு
குறையும். ஆஸ்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான்
பச்சரிசி துணைமருந்தாக பயன்படுகிறது.அம்மான் பச்சரிசி பெரும்பாலும்
நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்றும் ஈரமாக உள்ள
இடங்களிலும் காணப்படும் மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை
அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்
No comments:
Post a Comment