Wednesday, 27 August 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க


வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. 

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இப்போது மருந்து தயாராகி விட்டது.

மருந்தை உட்கொள்ளும் விதம்:-

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

Tuesday, 26 August 2014

நண்டுக் கால் சூப்

ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சரியாகும். இல்லை என்றால் ஏழு நாளில் சரியாகும் என்று சொல்வார்கள். ஆனால் ஜலதோஷத்திற்கு ராமேஸ்வரம் தீவில் ஒரு ரெடிமேட் மருந்து இருக்கிறது. அதுதான் நண்டுக்கால் சூப்.

என்னென்ன தேவை?

நண்டு கால்கள் குறைந்தது 10

ரசப் பொடி - மூன்று டீஸ்பூன்

புளி, எலுமிச்சை - தேவையான அளவு

பூண்டு - 1

ம‌ஞ்ச‌ள் பொடி, கடுகு தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 4

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

எப்படிச் செய்வது?

நண்டின் கால்களை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்யவும். பின்னர் அ‌ம்‌மி‌க்கல் அ‌ல்லது ம‌த்தில் வைத்து ஓடுகள் உடையும் அளவிற்குத் தட்டிக்கொள்ள வேண்டும். புளியைத் தண்ணீர் அல்லது தேங்காய்ப் பாலில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பூண்டை நசு‌க்‌கி வை‌த்து‌க்கொ‌ள்ள வேண்டும்.

அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு, நன்கு காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாயைப் போட்டுத் தாளிக்கவும். பின்னர் தயாராக உள்ள பு‌ளி‌க்கரைச‌லுடன் ரச‌‌ப்பொடி, ம‌ஞ்ச‌ள் பொடி, உப்பு, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டுக் கா‌ல்க‌ள், பூ‌ண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

நண்டுக் கால்கள் நன்றாக வெந்ததும், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி வைக்கவும். சுடச் சுட இந்த சூப்பைக் குடித்தால் ஜலதோஷம் காணாமல் போகிவிடும்.

முட்டை உணவுகள்

முட்டை மிளகு மசாலா !!!

தேவை?

வேகவைத்த முட்டை-12
நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
தக்காளி-3
பூண்டு- 6 முதல் 7(நறுக்கப்பட்டது)
மிளகு-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
இஞ்சி- சிறிதளவு
தக்காளி சாஸ்-1/4 கப்

எப்படிச் செய்வது?

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும். முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி..

முட்டை குருமா :

தேவையான பொருட்கள் :

முட்டை – 3
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
தனி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தேங்காய் பால் – அரை கப்
தேங்காய் விழுது – கால் கப்
பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை – தலா 3
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 5 தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும். கொத்தமல்லித் தழையை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, கரம் மசாலா தூள், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த கொத்தமல்லித் தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறி விட்டு, தேங்காய் பால், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்து குருமா சிறிது கெட்டியானதும் வெட்டி வைத்துள்ள முட்டைகளைச் சேர்த்து சிறுதீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவையான முட்டை குருமா தயார். இது பரோட்டா, சப்பாத்தி, கல் தோசை போன்றவற்றிக்கு நன்றாக இருக்கும்.

முட்டை மஷ்ரூம் குழம்பு

என்னென்ன தேவை?
வேகவைத்த மஷ்ரூம் 300 கிராம்
வேகவைத்த முட்டை-5
எண்ணெய்-தேவையான அளவு
வெங்காயம்-1
மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
மிளகுதூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய்தூய்-1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய்-2தேக்கரண்டி
மிளகாய்-3
பட்டை, இலவங்கம், கிராம்பு-3
இஞ்சி, பூண்டு விழுது-1ஸ்பூன்
தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எப்படி செய்வது?

வெங்காயம், தேங்காய், தனியா, சீரகம், மிளகாய், இவற்றை வறுத்து அரைத்துக்கவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டை போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மஷ்ருமை போட்டு சில நிமிடம் கழித்து மஞ்சள் பொடி, மிளகு பொடி, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை போடவும். அதையும் நன்கு வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதனுடன் வேகவைத்த முட்டையை போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
 

இறாலின் மகத்துவங்கள் என்ன என்று தெரியுமா?


அசைவ உணவுகளை விட, கடல் உணவான மீனில் தான் பல உடல் நல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது.

முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.ஆனால் அது மீனோடு மட்டும் நின்று விடுவதில்லை.

மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினாலும் நமக்கு பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது.

அப்படி ஒரு வகை உணவு தான் இறால்.

நம் விரல் அளவுக்கு கூட இல்லாத, இந்த சிறிய உயிரினத்தில் அப்படி என்ன பயன்கள் உள்ளது என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

எடை குறைப்பு
இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.

ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.

வயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள்
சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

எந்தவித பாதுகாப்பும் இன்றி, சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புறஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.

ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.

இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது.

இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.

அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.

கண் பார்வை சிதைவு
இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும்.

மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்குநல்ல நிவாரணியாக இருக்கும்.

தலை முடி உதிர்தல்
இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும்.

ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று போனாலோ இறால்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.

எலும்பு ஆரோக்கியம்
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.
உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும்.

இது ஆஸ்டியோபோரோசிஸ்என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.

தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல்
இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும்.
இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

உணவு அலர்ஜி
கடல் உணவுகளினால், இறால் உட்பட அலர்ஜி ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். புது வகை மீன் அல்லது இறாலை உண்ணும் போது கவனமாக இருங்கள்.

அதே போல் அதிக அளவில் உட்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல விதமான அலர்ஜிக்கு உள்ளாக நேரிடும்.

ஈசி சமையல்

புடலங்காய் சிப்ஸ்

தேவையானவை:
விதை நீக்கி வட்டமாக நறுக்கிய புடலங்காய் - ஒரு கப், கடலைமாவு - 2 டீஸ்பூன், அரிசிமாவு, கார்ன் ஃப்ளார் - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் - தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் புடலங்காயைப் போட்டு, அதில் அரிசிமாவு, கடலைமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வட்டம் உடையாதவாறு கலக்கவும். லேசாக தண்ணீர் தெளித்தால் போதும். பிறகு ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.

வெண்டைக்காய் மசாலா வறுவல்

தேவையானவை

வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம், அரிசி மாவு - தலா கால் கப்,
கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

வெண்டைக்காயை குறுக்கில் இரண்டாக வெட்டி, ஒரு இன்ச் நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காய், வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு சிறிது தண்ணீரை தெளித்து, கெட்டியாகப் பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் பிசறி வைத்துள்ள வெண்டைக்காயை சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுக்கவும். மொறுமொறுப்புடன் ருசியாக இருக்கும் இந்த வெண்டைக்காய் வறுவல், இரண்டு நாட்களானாலும் கெடாது...

ஸ்வீட் நட் பூரி

தேவையானவை
கோதுமை மாவு - ஒரு கப்,
நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க,
உப்பு - ஒரு சிட்டிகை.
பூரணத்துக்கு துருவிய தேங்காய் - கால் கப்,
பொடித்த முந்திரி, பாதாம் - 3 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - ருசிக்கேற்ப, விருப்பப்பட்டால் ஏலக்காய்த்தூள் - சிறிது.

செய்முறை
மாவில் உப்பு, நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பூரணத்துக்குரிய பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதில் பூரணத்தை போட்டு நிரப்பி, மூடி, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
 

பீட்ரூட் திரட்டுப்பால்

தேவையானவை:

துருவிய பீட்ரூட் ஒரு கப்,
வெல்லம் 2 கப், நெய் 2 டீஸ்பூன்,
முந்திரி 6, ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்,
சுக்குப்பொடி அரை டீஸ்பூன்.

செய்முறை:

பீட்ரூட் துருவலை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் பீட்ரூட் விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெல்லத்தைப் பொடி செய்து, சிறிது தண்ணீர் விட்டு, கொதித்ததும் வடிகட்டி, பீட்ரூட் விழுதுடன் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத பதம் வரும்வரை நன்றாகக் கிளறவும். பிறகு சிறிது சிறிதாக நெய் ஊற்றிக் கிளறி, சுருண்டு வந்ததும் இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.
 

வெஜிடபிள் இட்லி

தேவையானவை:

இட்லி மாவு - 2 கப்,
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - ஒரு சிட்டிகை.

தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள். பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள். இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.
 

 

சில்லி பூரி

தேவையானவை:

பூரி - 10, வெங்காயம் - 3,
குடமிளகாய், கேரட், தக்காளி - தலா 1,
பச்சை மிளகாய் - 2,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி- பூண்டு விழுது,
சோயா சாஸ் - தக்காளி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன்,
பால் - ஒரு கரண்டி,
கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், குடமிளகாய், கேரட், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பூரியை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி... இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், கேரட், தக்காளி, குடமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் பால் விட்டு, கொதித்து சுண்டியதும் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறி... பூரி துண்டுகள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு


வரகு கஞ்சி :

சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வரகின் பயன்களையும், சத்துக்களையும் உணர்ந்து வரகில் வெல்ல‌ப் பணியாரம், அப்பம், கஞ்சி என வெரைட்டியான உணவுகளைச் சமைக்கின்றனர். அரிசி உணவைக் காட்டிலும் வரகு தானியத்தின் மூலம் உடலுக்குக் கூடுதல் வலு கிடைக்கும்.

சத்துக்கள்:

அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.

எப்படிச் செய்வது:

சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும். பாதி வெந்ததும், உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

தொட்டுக்கொள்ள:

கறிவேப்பிலையைக் கழுவி உதிர்த்து, சிறிது உளுந்து, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த‌த் துவையலுடன் சேர்த்துச் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
 
 உட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கிச் சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

இஞ்சியைத் துவையலாக்கிச் சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

ட்ரை ஃப்ரூட்ஸ் குல்ஃபி

தேவையான பொருள்கள்:

பால் - 2 லிட்டர்,
சர்க்கரை - 2 கப்,
முந்திரி - 20, பாதாம் - 20,
மில்க் பிரெட் (ஸ்வீட்) -இரண்டு ஸ்லைஸ்கள்,
ஏலக்காய்த்தூள் -அரை டீஸ்பூன்,
சோள மாவு -ஒரு டேபிள் ஸ்பூன்,
பொடித்த ட்ரை ஃப்ரூட்ஸ் - கால் கப்.

செய்முறை:

பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விடவும். பாலை அடுப்பில் வைத்துப் பாதியாகும் வரை நன்கு காய்ச்சியபின் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து மீண்டும் கொதிக்கும்போது சோளமாவை பாலில் கரைத்து விடவும். பிரெட் துண்டுகளைப் பொடித்து பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொதிக்கும் பாலில் சேருங்கள். ஏலக்காய்த்தூள், பாதாம், முந்திரியை பவுடராக அரைத்துச் சேருங்கள்.

இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொதிக்கும்போது இறக்கி விடவும். பிறகு நன்கு ஆறியதும் குல்ஃபி மோல்டுகள் அல்லது டிரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைத்துக் குளிர்ந்ததும் பொடித்த ட்ரை ஃப்ரூட்ஸை அலங்கரித்துப் பரிமாறுங்கள்.

குறிப்பு: ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள் ஐஸ் கட்டிகள் மத்தியில் வைத்து கெட்டியானதும் பரிமாறவும்.

"மட்டன் பொடிமாஸ் செய்யும் முறை

தேவையான பொருள்கள்:

மட்டன் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பொட்டுக்கடலை - அரை கப்
சோம்பு - ஒரு ஸ்பூன்
கசகசா - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
மல்லி தூள் - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :

எண்ணெய் - ஒரு குழி கரண்டி
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 6
கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை :

மட்டன் பொடிமாஸ் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

கறியை நன்கு கழுவிவிட்டு குக்கரில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

வாணலியை சூடாக்கி அதில் சோம்பு போட்டு சிவந்ததும் அத்துடன் பொட்டுக்கடலை, கசகசா சேர்த்து லேசாக வதக்கி இதை மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி வைக்கவும்

வெந்த கறியை மிக்ஸியில் போட்டு லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

உதிர்த்த கறியில் பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

அந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் தெளித்து ஒன்றாக பிசையவும்

வாணலியை சூடாக்கி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் பொடிமாஸ் கலவையை சேர்த்து நன்கு வதக்கி சிவந்து முறுவலாகும் வரை வைத்து இறக்கவும்.

சுவையான மட்டன் பொடிமாஸ் தயார். இந்த பொடிமாஸில் எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட சுவைக்கூடும்.

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் வெந்தயம்

மேதி என்ற அழைக்கப்படும் வெந்தயம் (யீமீஸீuரீக்ஷீமீமீளீ ) ஒரு மா மருந்து. கீரைவகையில் இருந்து கிடைக்கும் விதையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வெந்தயம் விளைகிறது. வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல்,  வாயு, கபம், இருமல், சீதக்கழிச்சல், வெள்ளைப்படல், இளைப்புநோய் என எந்த நோயும் அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர  வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தப்பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் போலிக் அமிலம், ரிபோபிளேவின் (பி2), வைட்டமின் ஏ, பைரிடாக்சின், வைட்டமின் சி, செலினியம், துத்தநாகம், மாங்கனீஷ், இரும்பு சத்து, தாமிரச்சத்து,  பொட்டாசியம், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து  காலையில், அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலச்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய் கள் குணமாகும். பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது.

இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்யும். பொடுகு பிரச்னை, அரிப்பு குறைவதோடு, முடி உதிர்வது நீங்கி தலைமுடி நன்கு வளரும்.

வெந்தயத்தை கஞ்சியில் சேர்த்து காய்ச்சி கொடுத்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். கீரையுடன் கோழிமுட்டை, தேங்காய்பால் சேர்த்து சமைத்து உண்டால் இடுப்புவலி தீரும். வெந்தய காபி, வெந்தய தேநீர் குடிக்கலாம். வெந்தயத்தில் ஹைட்ரோ ஐசோலியூசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டக் கூடிய தன்மை உடையது. தாவர வகைகளிலேயே வெந்தயத்தில் மட்டுமே இந்த அமினோ அமிலம் உள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

பூண்டின் மருத்துவம்

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டின் பங்கு முதன்மையானது. ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை,  முகப்பரு, ஊளைச்சதை, ரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும்,  குணப்படுத்தவும் உதவுகிறது.

இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதன பொருளாக பயன்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும்,  வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. இதில்  பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டில் “அலிசின்’’ என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கிறது.

தேமல்: வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மறையும்.

ரத்த அழுத்தம்:

ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும்போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு சிறிது ஆற வைத்து  குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். மாரடைப்பு வராது. ரத்தக் குழாயில் கொழுப்பு படியாது.

* பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயாக செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.

* பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தை கரைத்துப்பூச மூட்டு வலி குணமாகும். பூண்டை வதக்கி வற்றல் குழம்பு வைத்துச் சாப்பிட குளிர்  தொல்லை நீங்கும்.

* பூண்டின் சாற்றை காதில் சில துளிகள் விட காது வலி குணமாகும்.

* பூண்டு சாற்றில், சிறிது உப்பு கலந்து உடம்பில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் சுளுக்கு குணமாகும்.

* குப்பைமேனி இலையுடன் பூண்டை வைத்து அரைத்துச் சாறு எடுத்து, இச்சாற்றை குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளியேறும்.

* பூண்டு, வசம்பு, ஓமம், இவைகளை சம அளவு எடுத்து இடித்து மூன்று நாட்கள் சாப்பிட மாந்த ஜன்னி குறையும்.

* பூண்டை நசுக்கி, சாறெடுத்து சாறை உள்நாக்கில் தடவ நாக்கு வறட்சி குறையும்.

* பூண்டோடு சிறிது எலுமிச்சை சாறு விட்டு அரைத்து இரு வேளை சாப்பிட கீல்வாதம் குணமாகும். வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் நோயின்றி  வாழலாம்

கொய்யா இலையின் பயன்பாடுகள்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய  இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும். அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவுநோயால்  அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம்  வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த  உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட  வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுகவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது. இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது. மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்:  வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30,  90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது. 

நீண்ட கால பயன்கள்: இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள  சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடி

சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என  கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை  நாம் சர்க்கரைநோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள்  இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை  நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம்.

இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய,அமெரிக்கவிஞ்ஞானிகள்.  ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் செடியின் இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள்  குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக்  முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு  பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக்  கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ்  தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடையலாம்..

சுண்டைக்காய் மருத்துவம்!


கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.

சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.  பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.

எப்படி சுத்தப்படுத்துவது?

காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி, சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு கைகளால் லேசாக அவற்றை அலசினால், விதைகள் அடியில் தங்கும். விதைகளை முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு, சமையலுக்கு உபயோகிக்கலாம்.

உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து, கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும் மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு விஷயங்களா என மலைக்க வைக்கிறது, ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி சொல்கிற தகவல்கள்...

* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச் சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான மருத்துவக் குணங்கள் கொண்ட சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய்கள் என எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக் கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில் உண்டு.

* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது தெரியாது.

* சுண்டைக்காயை பச்சையாகவோ, வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், காயங்களும் புண்களும் கூட ஆறும்.

* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும் இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின்
வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ தையும் தடுக்கக் கூடியது.

* நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள நல்ல குணங்கள் உதவக்கூடியவை.

* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத் தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம் விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அத்தனையையும் சுண்டைக்காயிலும் செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான் இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற முடியும்.

* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன் பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல மருந்துத் தயாரிப்புகளுக்கு உபயோகிக்கிறார்கள்.

* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது அதில் சேர்க்கப்படுகிற சுண்டைக்காய். “சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது, எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்”

Thursday, 21 August 2014

வயிறு வலிக்கு

வயிறு ஒரு கோணிபை மாதிரி.. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை/விந்துபை/சினைப்பை' ன்னு அவ்வளவு உறுப்புகள் இருக்கு...
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்... சிம்பிளா ட்ரை பண்ணிருக்கேன்...
வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம் அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் 9 பகுதிகள்.

அதாவது மேல், நடு(தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு(தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி... ஓகே வா??
மேல்வயிறு வலது மூலையில வலிச்சா.. ஈரலில் பிரச்சனை.. பித்தப்பை கல்.
மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்.
நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி வித் நீர்கடுப்பு இருந்தால் கிட்னி ஸ்டோன்.
நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் ஃபூட் பாய்சன்.
அடிவயிறு வலது மூலை - அப்பன்டிசைடிஸ்,
அடி வயிறு நடுவில், சிறுனீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,
அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்.
ஓரளவாவது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்... என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிட்டு டாக்டரை பாருங்க.
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

Tuesday, 19 August 2014

பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு:


இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து, பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் விலக:
அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊறவச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக்குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும்.

குழந்தைகளின் சளிக்கு:
ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.

குழந்தைகளின் சளிக்கு:
ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை. தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம்.

மாந்தம் போக்க:
ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் துளசிச்சாறை கொடுத்தால்... மாந்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓடியே போகும். குழந்தையும் அழுகையை நிறுத்தி நிம்மதியாகத் தூங்கும்.
மூச்சு விடத் திணறுபவர்கள், துளசி இலையை காயவைத்து அரைத்து, அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் நீங்கும். 4 துளசி இலையை தண்ணீரில் போட்டுக்குடித்தால், தொடர் இருமல் தொல்லை நீங்கும். சுடுநீரில் துளசி இலையைப் போட்டு ஆவிபிடித்தால், சளி, மண்டைக் குத்தல் குணமாகும். பேறுகாலம் முடிந்த பெண்கள் துளசி விதையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால்... வேண்டாத அழுக்கு நீங்கும். அடிவயிற்றுக் குத்தல், வலி சரியாகும். ஒரு கைப்பிடி துளசிக் கொழுந்தை இஞ்சி சேர்த்து அரைத்து, மாத்திரை போல் உருட்டி, காயவைத்து எடுத்து, தேனில் கலந்து கொடுத்தால், வறட்டு இருமல் காணாமல் போகும். கட்டிகள் இருந்தாலோ, வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது வண்டு கடித்திருந்தாலோ அந்த இடத்தில் துளசியை அரைத்துப் பூசினால், உடனடி குணம் கிடைக்கும். துளசியை ரசமாக செய்து சாப்பிட்டால் வாய்கசப்பு முற்றிலும் நீங்கி, ஜூரமும் வந்த வேகத்தில் ஓடிவிடும்.

Wednesday, 13 August 2014

பள்ளிபாளையம் கோழி வறுவல்

கோழி (நாட்டு கோழி) - 1 கிலோ
வர மிளகாய் - 15 to 20
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 4 பல்லு
கருவேப்பிலை - 12
எண்ணெய் - 5 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
கொத்துமல்லி , உப்பு , மஞ்சள் தேவையான அளவு எடுத்துக்குங்க

கோழி கறியை சிறுசு சிறுசா அறுத்துட்டு ,, தண்ணீல நல்லா கழுவீறுங்க. மஞ்சள் தூள், உப்பு கொஞ்சம் போட்டு கோழி கறியை நல்லா கலக்கி வெச்சுருங்க.

வட சட்டியில் எண்ணெய் கடுகு போட்டு தாளிச்சிட்டு , சின்ன வெங்காயத்தை சிறுசு சிறுசா அருஞ்சு போட்டுருங்க,, ஓரளவு வெங்காயம் பொன்நிறம் வந்ததும் , வர மிளகாயில் விதைகளை எடுத்துட்டு எல்லா மிளகாயையும் கில்லி போட்டுட்டு பூண்டு துண்டுகளையும்,கருவேப்பிலையையும் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி ரெண்டு நிமிஷம் விட்ருங்க ,

இப்போ கோழி கறியை தாளிச்சு வெச்சுருகிற வெங்காயம்
வரமிளகாயுடன் சேர்த்து நல்லா கலக்கி விடுங்க, மஞ்சளும் , உப்பும் , மறுபடியும் வேணும்னா கொஞ்சம் சேர்த்துகுங்க,
தயவு செய்து தண்ணீர் ஊத்திராதீங்க

கொத்துமல்லி சேர்த்து மூணு நிமசதுக்கு ஒருக்கா நல்லா கலக்கி விடுங்க 20 பது நிமிஷம் கழிச்சு பாருங்க .
முக்கால் கிலோ கோழிதான் இருக்கும், ஏன்னா டேஸ்ட்டு பார்க்குறேன்கிற பேருலே கால் கிலோ சிக்கென்னை நீங்களே
சாப்பிட்டு முடுச்சிருப்பீங்க ......

கொள்ளுப் பருப்பு கடைஞ்சது

கொள்ளு - 1 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மல்லி - 1/2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 3 பல்லு
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - 8
உப்பு , மஞ்சள் தேவையான அளவுக்கு

கொள்ளை நல்லா கழுவிக்குங்க ,, குக்கரில் 1 கப் கொள்ளுக்கு 5 கப் தண்ணீரை ஊத்திக்குங்க , கொஞ்சோண்டு மஞ்சள் , உப்பு சேர்த்து ஒரு துளி எண்ணெய் விட்டு குக்கரை 6 விசில் வரைக்கும் விட்டு ஆப் பண்ணிருங்க .. வட சட்டியில் எண்ணெய் ஊத்தி சீரகம், மல்லி , பூண்டு ,பச்சை மிளகாய், கருவேப்பிலை, உருச்ச சின்ன வெங்காயத்தை முழுசா போட்டு ரெண்டு நிமிஷம் தாளிச்சு விடுங்க ,,,

இப்போ குக்கருளிருக்கிற கொள்ளையும், தண்ணியையும் தனி தனியா வடிகட்டி எடுத்து வெச்சுருங்க ,, கொள்ளையும் , தாளிச்சு வெச்சிருக்கிற வெங்காயத்துக்கோட சேர்த்து பருப்பாம் முட்டிய வெச்சு நல்லா கெடயுங்க,,,,

பருப்பாம் முட்டி இல்லைனா தோச திலுப்பி கரண்டி வெச்சு நல்லா கெடயுங்க,,,, அவ்வளுவுதாங்க ,,,

கொள்ளு


கொள்ளு பருப்பு - 1/4 கப்
நாட்டு தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
வர மிளகாய் - 1
பூண்டு - 3 பல்லு
கருவேப்பிலை - 6
சீரகம் - 1 ஸ்பூன்
மல்லி - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெந்தியம் - 4
எண்ணெய் - 2 ஸ்பூன்
கொத்துமல்லி - ரெண்டு இனுக்கு
உப்பு , மஞ்சபொடி தேவையான அளவு

குக்கரில் 1/4 கப் கொள்ளு பருப்புக்கு 4 கப் தண்ணி ஊத்தி கொஞ்சோண்டு உப்பு , இத்துனூண்டு மஞ்ச பொடி, ஒரு துளி எண்ணெய் விட்டு குக்கரை அடுப்புல வெச்சு 8 விசில்வர வரைக்கும் விட்டு ஸ்டவ்வை ஆப் பன்னீருங்க...பருப்பு நல்லா வெந்து தன்னிலெ ஓரளவுக்கு கரஞ்சுருக்கும்,, இதுதான் பருப்பு தண்ணிங்க

இப்போ வடசட்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி ,, கடுகு ,
சீரகம் , மல்லி , நாலூ வெந்தியம் போட்டு தாளுச்சு விடுங்க ,,இதுல பூண்டை உருச்சு பருப்பா முட்டிய வெச்சு நல்லா தட்டி , கருவேப்பிலை. பச்சை மிளகாய்,வர மிளகா எல்லாம் சேர்த்து போட்டுருங்க ,,பருப்பு தண்ணியை இதுலெ ஊத்தி,, தக்காளிய நல்லா சிறுசு சிறுசா அருஞ்சு போட்டுருங்க,, உப்பு பத்துலீனா கொஞ்சம் போட்டுட்டு ... நல்லா ஒரு கொதி விடுங்க ,,,இப்போ கொத்துமல்லி தலைய சேர்த்து இறக்கி வெச்சுருங்க ,

ரசத்தை அப்புடியேவும் குடிக்க்கலாமுங்க ,, சுடு சாப்பாட்டுலெ பெனஞ்சு சாப்பிட்டாலும் அருமையா இருக்குமுங்க
 
 

கொங்கு நாட்டு கோழி சாறு

நாட்டு கோழி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
சீரகம் - 2 ஸ்பூன்
மல்லி - 4 ஸ்பூன்
சோம்பு - கால் ஸ்பூன்
வர மிளகாய் - 4
பூண்டு - 2 பல்லு
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இனுக்கு
குருமிளகு - 4
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி

உப்பு தேவையான அளவு

முதல்ல வட சட்டியில் எண்ணெய் ஊத்தாம ,,
சீரகம், சோம்பு போட்டு நல்லா மணமா வருத்தத் தனியா எடுத்து வெச்சுருங்க
இப்போ மல்லியை போட்டு நல்லா மணமா வருத்தத் தனியா எடுத்து வெச்சுருங்க
இப்போ வட சட்டியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊத்தி வர மிளகாய், 1 இனுக்கு கருவேப்பிலைசின்ன வெங்காயம் போட்டு இத்துனூண்டு மஞ்சள் பொடி போட்டு நல்லா பொன்நிறம் வர வரைக்கும் வதக்கிகுங்க..
.
இந்த வதக்கின வெங்காயம், வரமிளகாய் , வருத்த மல்லி , சீரகம் எல்லாம் சேர்த்து கொஞ்சம் தண்ணி ஊத்தி நாலு குருமிளகு போட்டு அம்மி கல்லுலெஇல்லாட்டி மிக்ஷியில் போட்டு நல்லா நொகு நொகுனூ அரச்சுருங்க.. இப்போ மொளகு ரெடிங்க

இப்போ கோழி கறியை நல்லா கழுவி உப்பு , இத்துனூண்டு மஞ்சள் பொடி போட்டு தடவி வெச்சுருங்க ,,, வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊத்தி , கருவேப்பிலை, கடுகு போட்டு , கோழி கறியை இந்த எண்ணெயில் போட்டு நல்லா தொலாவியுட்டுடே இருங்க
கறி நல்லா ஓரளவுக்கு வெந்து பந்தோட்ட வந்ததும் இதுல அரச்சு வெச்ச மொளகு ஊத்தி ரெண்டு கொதி விடுங்க .. உப்பு வேணும்னா இன்னும் கொஞ்ச சேர்த்துக்குங்க.... அவ்வளுவ்வு தானுங்க கொங்கு நாட்டு கோழி சாறு ரெடிங்க ,,
ஒரு சின்ன அளவான குண்டாவுலெ சாறு மட்டும் எடுத்து குடிங்க ,, எப்பேர்பட்ட நெஞ்சு சளியாக இருந்தாலும்
பழுத்துரும்ங்க ,,

கொழம்பு இன்னும் நல்லா மனமா கெட்டியா இருக்கணும்னா
ஒரு கால் மூடி தேங்காய் அரச்சு சாத்துலெ ஊத்தி இன்னொரு கொதி விடுங்க ... அவ்வள்வ்வு நல்லா இருக்குமுங்க ......

Tuesday, 12 August 2014

தெரிந்து கொள்ள வேண்டிய சில பயனுள்ள தகவல்கள்


1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" ...யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.

4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற* 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே.

8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/.

9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471.

10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241..

Thursday, 7 August 2014

வில்வம்... ஓர் அதிசய மரம்...



அடிமுதல் நுனி வரை அத்தனையும் பயனுள்ள மருத்துவ குணங்களை வைத்துள்ள கற்பக விருட்சம் வில்வம். வில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து பசும்பாலுடன் தினசரி காலையில் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
வில்வ மரத்தின் இலைகளுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது.

நாள் பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம் சேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு விலவ இலைகளை நன்கு மென்று உட்கொண்டால் நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் ஹீமோகுளோபின் என்ற வேதியல் பொருள் சிவப்பணூக்களில் இருக்கிறதல்லவா? அந்த சிவ[ப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் விலவத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளை உட்கொள்ளுவதன் மூலம்
கட்டுப்படும்.

விலவப் பழத்தின் மேல் தோல் ஓடு போல இருக்கும். அதை நெருப்பில் காட்டிப் பின்னர் அதைத் தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசி வந்தால் நல்ல பலன் தெரியும்.வில்வப் பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள். வில்வ பழத்தில் . புரதச்சத்து, தாது உப்புக்கள், மாவுச் சத்து, சுண்ணாம்பு இரும்பு,மற்றும் கொழுப்புச் சத்துக்கள் ஆகியன இருக்கின்றன.. மேலும் பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் இருக்கின்றன. சுவையாகவும் இருப்பதால் இதை ‘அப்படியே’ சாப்பிடலாம். வயிற்றுப் போக்கு மற்றும் சீத பேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து.

பழத்தின் உள்ளிருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்னையில் ஊற வைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப் படும்,. தோல் பளபளப்பாகவும் விளங்கும். வில்வப் பழத்திலிருந்து ஜாம், பழச் சாறு, பழக் கூழ், பானங்கள், இனிப்புகள், போன்றவற்றைத் தயாரித்தும் பயன்படுத்தலாம். வில்வப் பழ விதைகளில் இருந்து ‘வில்வத் தைலம்’ என்ற எண்ணெயும் தயாரிக்கலாம். இதுவும் முடி வளர உதவும். காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் . நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

நபி மருத்துவம் – வில்வம்

நபிநாயகம் அவர்கள் வில்வப் பழத்தைப் பல இடங்களில் சிறந்த மருந்து என்று கூறியிருக்கின்றார்கள்.

வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கும்.

வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.

இறைவன் அனைத்து நபிமார்களையும் வில்வப்பழத்தை சாப்பிட வைத்துள்ளான். ஏனென்றால் வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது. இதைச்சாப்பிடு பவர்களுக்கு 40 மனிதர்களின் சக்தி ஒருவருக்கே கிடைக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் அவர்களின் இருதய நோய் நீங்கும். பிறக்கும் ஆண் குழந்தை அழகாக இருக்கும்.

வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும் என்று ஜாமிஃகபீரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். மூத்திரத்தை வெளியாக்குவதுடன் தாய்ப் பாலையும் அதிகரிக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும். சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கரைக்கவும்,சுருள்களை அவிழ்க்கவும் வில்வப்பழம் பயன்தரும். இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம்தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.

மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள். இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள்.

கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.

அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.

கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஓர் அமுதம் என்றே வில்வப் பழத்தைச் சொல்லலாம். அவர்கள் இரண்டு கிராம் அளவில் கஷாயம் தயாரித்து தினசரி ஒருவேளை குடிக்கலாம்

தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா என்று பார்ப்போம்.

இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான கபம, பித்தம, மற்றும் வஆதம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்.

அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும். இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:

தாமிர பாத்திரத்தில் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்

தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.

தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும்

தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.

கீல்வாத வலியை குணப்படுத்தும்

தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

புண்களை வேகமாக குணப்படுத்தும்

புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.

மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்

மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.

இரத்த சோகையை எதிர்க்கும்

நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.

கர்ப்ப காலத்தின் போது:

கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும்

தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.

வயதாகும் செயல்முறை குறையும்

தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.



ஆரோக்கியம் காக்கும் அமிலங்கள்


அன்றாட வாழ்க்கையில் பலவகையான சத்துக்களும் வைட்டமின்களும் சேர்ந்துதான் உடலை ஆரோக்கியமாக செயல்படவைக்கின்றன. ஒவ்வொரு சத்தும் உடலின் வெவ்வேறு உறுப்புகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்கு சத்துக்களைக் கொடுக்கின்றன. இவை உடலில் இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவை அதிகமாக அல்லது குறைவாகச் சுரக்கும்போது, பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கிய அமிலங்கள் பற்றியும் அவற்றின் பயன்கள் மற்றும் எந்த மாதிரியான உணவுகள் மூலம் இவற்றை நிலைப்படுத்தலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் தேனி, உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் ரேவதி.

நிக்கோடினிக் அமிலம் (நியாசின்)

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவை நிலைப்படுத்துவதற்கு நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு உடலில் குறையும்போது அதிகப்படியான டென்ஷன், சத்துக் குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டின் ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் அமிலத்தின் அளவை அதிகமாக்கலாம். நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 18 மில்லி கிராம் வரை தேவை.

பேத்தொடெனிக் அமிலம்

உடம்புக்குத் தேவையான சத்துகளை உற்பத்தி செய்ய பெத்தொடேனிக் அமிலம் தேவை. மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் இந்த அமிலத்தின் குறைவினால் ஏற்படும். முழுதானியங்கள், பருப்பு வகைகள், முட்டை மஞ்சள் கரு ஆகிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த அமிலக் குறைபாட்டை சரிசெய்துவிடலாம் நாள் ஒன்றுக்கு நபருக்கு 6 மில்லிகிராம் தேவை.

ஆஸ்கார்பிக் அமிலம்

வைட்டமின் சி தான் அஸ்கார்பிக் அமிலம். பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின், தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை உடம்புக்கு உருவாக்கிக் கொடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும் இரும்புச் சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், கேன்சர் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது. இந்த அமிலத்தன்மை குறையும்போது, ஈறுகளில் ரத்தம் வடிதல், ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மிளகை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த இழப்பைச் சரிசெய்யலாம். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலம் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்குத் தேவையான அளவு 40 மில்லி கிராம்.

ஃபோலிக் அமிலம்

ரத்த சிவப்பணுக்களைத் தூண்டுவதற்கும், அவற்றின் முதிர்ச்சித் தன்மைக்கும் ஃபோலிக் அமிலம் பயன்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் அவசியம் தேவைப்படக்கூடிய அமிலம் இது. இந்தக் காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியதும்கூட. காசநோய், கேன்சர் நோய்களுக்கான மருந்து தயாரிப்பிலும், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பால், முட்டை, ஈரல், ஈஸ்ட், கீரை, ஓட்ஸ் மற்றும் பச்சைக் காய்கறிகள், கோதுமை, முந்திரிப் பருப்பு போன்ற உணவுகளின் மூலமும் இந்த அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். சாதாரண மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 200 மைக்ரோகிராம் தேவை. கர்ப்பிணிப் பெண்களுக்கு 500 மைக்ரோகிராம் வரை தேவைப்படும்

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

இந்த அமிலம் மட்டும்தான் நம் வயிற்றிலேயே சுரக்கக்கூடியது. இரைப்பையில் அமில காரத் தன்மையை நிலைநிறுத்தி உணவைச் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது.

அமிலம் இரைப்பையில் குறைந்தால் செரிமான கோளாறுகள், வயிற்று உப்பசம், அதீத தூக்கம், அடிக்கடி பசி, தொற்றுநோய் போன்றவை ஏற்படும். அமிலம் இரைப்பையில் அதிகமானால் வயிற்றுபுண், ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படும். இந்த அமிலம் நிலைத்தன்மையில் இருப்பது அவசியம். மிளகு, வினிகர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிலைப்படுத்தமுடியும். சிலருக்கு இயல்பாகவே இந்த அமிலம் குறைவாக இருக்கும். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, அமிலத் தேவைகளின் அளவுகள் மாறுபடும். மருத்துவரின் தகுந்த ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்”

தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்:


*தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும்
*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.
ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.
*ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
*மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்:
*தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.
*ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.
*பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.
*கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
*எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.
*தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.
குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.
*தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க