Tuesday, 26 August 2014

முட்டை உணவுகள்

முட்டை மிளகு மசாலா !!!

தேவை?

வேகவைத்த முட்டை-12
நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
தக்காளி-3
பூண்டு- 6 முதல் 7(நறுக்கப்பட்டது)
மிளகு-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
இஞ்சி- சிறிதளவு
தக்காளி சாஸ்-1/4 கப்

எப்படிச் செய்வது?

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும். முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி..

முட்டை குருமா :

தேவையான பொருட்கள் :

முட்டை – 3
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
தனி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தேங்காய் பால் – அரை கப்
தேங்காய் விழுது – கால் கப்
பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை – தலா 3
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 5 தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும். கொத்தமல்லித் தழையை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, கரம் மசாலா தூள், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த கொத்தமல்லித் தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறி விட்டு, தேங்காய் பால், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்து குருமா சிறிது கெட்டியானதும் வெட்டி வைத்துள்ள முட்டைகளைச் சேர்த்து சிறுதீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவையான முட்டை குருமா தயார். இது பரோட்டா, சப்பாத்தி, கல் தோசை போன்றவற்றிக்கு நன்றாக இருக்கும்.

முட்டை மஷ்ரூம் குழம்பு

என்னென்ன தேவை?
வேகவைத்த மஷ்ரூம் 300 கிராம்
வேகவைத்த முட்டை-5
எண்ணெய்-தேவையான அளவு
வெங்காயம்-1
மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
மிளகுதூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய்தூய்-1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய்-2தேக்கரண்டி
மிளகாய்-3
பட்டை, இலவங்கம், கிராம்பு-3
இஞ்சி, பூண்டு விழுது-1ஸ்பூன்
தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எப்படி செய்வது?

வெங்காயம், தேங்காய், தனியா, சீரகம், மிளகாய், இவற்றை வறுத்து அரைத்துக்கவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பூண்டை போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மஷ்ருமை போட்டு சில நிமிடம் கழித்து மஞ்சள் பொடி, மிளகு பொடி, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை போடவும். அதையும் நன்கு வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதனுடன் வேகவைத்த முட்டையை போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
 

No comments:

Post a Comment