Thursday, 3 July 2014

தெரிந்துக்கொள்வோம் - குலதெய்வங்களை கும்பிடும் முறை


குலதெய்வத்தை கும்பிடுதல் என்றால் குலம் என்று சொல்லப்படுகின்ற அளவிற்கு எத்தனைக் குடும்பங்கள் இருக்கின்றனவோ அத்தனைக் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து அந்த குடும்பங்களிலேயே மூத்தவர் யாரோ அவரை வைத்து ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு என்று பணம் வசூலித்து குலதெய்வம் எந்த கிராமத்தில், எந்த மலையடிவாரத்தில், எந்த ஆற்றங்கரையில், எந்த குளக்கரையில், எந்த காட்டில், எந்த கடற்கரை ஓரத்தில் இருக்கின்றதோ அந்த இடத்திற்கு சென்று ஒருநாள் அல்லது இரண்டு நாள் தங்கி (கட்டாயம் ஒரு பகல் ஒரு இரவு அங்கு தங்கியிருக்க வேண்டும்).
பரம்பரை பரம்பரையாக என்னென்ன படையல்கள் போடுவார்களோ அதை தயாரித்து பச்சரிசி கொண்டு போய் ஊறவைத்து அதை இடித்து வெல்லம் சேர்த்து மாவிளக்கு போட வேண்டும்.
இதேபோல் அதிரசம், சீடை, முறுக்கு செய்தாக வேண்டும். இதேபோல், கோழி பிடிக்குமென்றால் முதல்நாள் கோழியையும், ஆடு பிடிக்குமென்றால் மறுநாள் ஆடும் சமைத்துப் படைக்க வேண்டும்.
குறிப்பு:- சில குலதெய்வங்கள் பால்பூசை, பழவகைகள், சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வடை முதலியவைதான் விரும்பும் என்றால் அவற்றின் விருப்பம் போல் பாரம்பரியப்படி செய்துவிட வேண்டும்.
ஒவ்வொரு வீட்டாரும் ஒரு மண் கலயத்தில் மஞ்சள் நீர் ஊற்றி, அதில் மாவிலை, வேப்பிலை வைத்து அதன் மேல் தேங்காய் ஒன்று வைத்து குலதெய்வத்திடம் பூசையில் வைத்து அருளேற்றி அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று முன்பு கூறியது போல் (கிராமத்து தேவர் தேவதை கும்பிடும் முறையில் கூறியது போல்) பூசை செய்து வரவேண்டும். ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் ஆனபிறகே கலயத்தில் இருக்கும் தண்ணீரை மாவிலையினால் வீடு கடை தோட்டம் காடு (மேலும் ஆடு, மாடு, நாய், பூனை) அனைத்து இடங்களிலும் தெளித்து விடவேண்டும். கையினால் தெளிக்கக் கூடாது. மாவிலையினால் தெளிக்கலாம்.

No comments:

Post a Comment