விரால்மீன் குழம்பு
தேவையான பொருட்கள்:
விரால்மீன் - 1/2 கி,
மாங்காய் - 1,
புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு,
வர மிளகாய் - 8,
மல்லி - 4 தே. கரண்டி,
மிளகு - 1/2 தே. கரண்டி,
சீரகம் - 1 தே.கரண்டி,
வெந்தயம்- 1/2 தே. கரண்டி,
சி. வெங்காயம் - 12,
கறிவேப்பிலை- 3 கொத்து,
விளக்கெண்ணெய் - 2 தே.கரண்டி,
நல்லெண்ணெய்- 4 தே.கரண்டி,
தாளிக்கும் வடகம்- பாதி உருண்டை,
உப்பு- தேவையான அளவு.
செய்முறை:மீனை கழுவி சுத்தப்படுத்தவும். ஒரு வாணலியில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். வரமிளகாய், மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், சி.வெங்காயம் 5, கறிவேப்பிலை ஒரு கொத்து இவற்றை சிவக்க வறுக்கவும். வறுத்ததை அரைக்கவும். புளியை கரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 தே.கரண்டி விளக்கெண்ணெய், 4 தே.கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும் தாளிக்கும் வடகம் போடவும். வடகம் பொரிந்ததும் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும் அரைத்த மசாலாவையும் கரைத்த புளியையும் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் .மீனை சேர்க்கவும். மாங்காயையும் போடவும் உப்பு சேர்க்கவும். அடுப்பை ஸிம்மில் வைத்து கொதிக்க விடவும் எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.
சிறு பருப்பு முறுக்கு.
என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு - 4 கப்,
வேகவைத்த சிறு பருப்பு - 1 கப்,
ஓமம் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
எள்ளு - 2 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
மஞ்சள் - ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
சிறு பருப்பை ஒன்றரை கப் தண்ணீரில் போட்டு வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். இத்துடன் மஞ்சள், பெருங்காயம், பச்சை மிளகாய் விழுது, தேவையான உப்பு, அரிசி மாவு, எள்ளு, ஓமம் இத்துடன் 2 மேசை கரண்டி எண்ணெயை காய வைத்து சேர்த்து தேவையான தண்ணீருடன் கலந்து முறுக்கு மாவு பதமாக பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு மிதமான காய்ந்த எண்ணெயில் முறுக்காக பிழிந்து எடுக்கவும். சிறிது ஆறிய பின் டப்பாவில் போட்டு வைக்கவும். மிகவும் கரகரப்பாக இருக்கும்.
சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ்
தற்போது ஃப்ரைடு ரைஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. எங்கு ஹோட்டலுக்கு சென்றாலும், அங்கு ஃப்ரைடு ரைஸ் வாங்காதவர்களை பார்க்கவே முடியாது. அந்த அளவில் அந்த உணவானது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இப்போது அந்த ஃப்ரைடு ரைஸில் ஒரு வகையான சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ் எனப்படும் பச்சை மிளகாய் மற்றும் பூண்டை மையமாக கொண்டு, எப்படி ஃப்ரைடு ரைஸ் செய்துவதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப் (ஊற வைத்து கழுவியது)
ஸ்ப்ரிங் வெங்காயம் - 4 (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1 கப் (நறுக்கியது)
பூண்டு - 10 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 (நறுக்கியது)
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஸ்ப்ரிங் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து, வெங்காயத் தாள் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அஜினமோட்டோ சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பின்பு சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் அதில் கழுவிய அரிசியை போட்டு 3-4 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி, 8-10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சைனீஸ் ஸ்டைல் சில்லி கார்லிக் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!! இதனை அப்படியே அல்லது மஞ்சூரியன் கிரேவியுடன் சாப்பிடலாம்.
வெஜிடேபிள் சமோசா
ஸ்நாக்ஸ்களில்
சமோசா மிகவும் அருமையாக இருக்கும். அத்தகைய சமோசா வகைகளில் பல உள்ளன. அவை
வெஜிடேபிள் சமோசா, பன்னீர் சமோசா என்பன. அதிலும் இந்த மாதிரியான சமோசாக்களை
கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம்.
ஆனால் இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு....
உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது)
பன்னீர் - 50 கிராம் (சிறிதாக வெட்டியது)
குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது)
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மாவிற்கு....
மைதா - 2 கப்
எண்ணெய் - 3 கப்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் பன்னீர், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், மற்றும் பச்சை பட்டாணி போட்டு, நன்கு அனைத்தையும் ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி, அதில் அந்த உருண்டையை வைத்து அரைவட்டமாக தேய்த்து, பின் அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப்போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அந்த சமோசாக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
ஆனால் இப்போது அவற்றில் ஒன்றான வெஜிடேபிள் சமோசாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உள்ளே வைப்பதற்கு....
உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது)
பன்னீர் - 50 கிராம் (சிறிதாக வெட்டியது)
குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கி, வேக வைத்தது)
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மாவிற்கு....
மைதா - 2 கப்
எண்ணெய் - 3 கப்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் பன்னீர், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், மற்றும் பச்சை பட்டாணி போட்டு, நன்கு அனைத்தையும் ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒரு பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி, அதில் அந்த உருண்டையை வைத்து அரைவட்டமாக தேய்த்து, பின் அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப்போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அந்த சமோசாக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
சேமியா பக்கோடா:
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 3
சேமியா - 1 கப்
உருளைக் கிழங்கு - 1 பெரியது
இஞ்சி - 1 துண்டு
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
உப்பு - தேவைக்கேற்ப
கடலைமாவு - 1டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
புதினாத்தழை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - விருப்பப்படி
எண்ணெய் - தேவையான அளவு
சேமியா - 1 கப்
உருளைக் கிழங்கு - 1 பெரியது
இஞ்சி - 1 துண்டு
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
உப்பு - தேவைக்கேற்ப
கடலைமாவு - 1டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
புதினாத்தழை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - விருப்பப்படி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தையும்,
பச்சை மிளகாயையும் மெலிதாக நீளவாக்கில் அரியவும். சேமியாவை சிறிது நெய்
விட்டு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த சேமியாவின் மேல் கொதிக்கும் தண்ணீர்
ஊற்றி உடனே வடித்துவிடவும். மேலும் கொஞ்சம் பச்சை தண்ணீரை ஊற்றி
வடிகட்டியின் உதவியால் வடிகட்டவும். உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக
மசித்துக் கொண்டு அதோடு சேமியாவையும் மற்ற குறிப்பிடப்பட்ட பொருட்களையும்
சேர்த்து கலந்து கொள்ளவும். இதோடு ஒரு டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெய்
விட்டுக் கலக்கவும். மற்ற பக்கோடாக்களைப் போல எண்ணெயில் பொரித்து சூடாகப்
பரிமாறவும்.
ஆனியன் சிக்கன் வறுவல்
சிக்கன் விரும்பிகளில் சிலருக்கு மசாலா வாடை அலர்ஜியா இருக்கும். சிக்கன் சுவையா இருக்கணும்.. ஆனா மசாலா வாடை
ஜாஸ்தியா இல்லாமலும் இருக்கணும்னு விரும்புறவங்க ஈஸியா இந்த ஆனியன் சிக்கன் வறுவல் செய்து சாப்பிடலாம். செய்வது சுலபம், சுவையோ அதிகம்!
ஜாஸ்தியா இல்லாமலும் இருக்கணும்னு விரும்புறவங்க ஈஸியா இந்த ஆனியன் சிக்கன் வறுவல் செய்து சாப்பிடலாம். செய்வது சுலபம், சுவையோ அதிகம்!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
* சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும்.
* மற்ற பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை எட்டாக நறுக்கி அதை தனித் தனியே பிரித்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.
* பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும்.
* பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்*ணீர் ஊற்றி மூடி
போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும்.(இடையில் இருமுறை கிளறி
கொள்ளவும்.)
* சிக்கன் வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் மல்லித்தழை தூவி இறக்கி விடவும்.
* இதை சாம்பார், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். இதனுடன்
குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல
சுவையுடன் இருக்கும்.
பட்டாணி உருளைக்கிழங்கு இட்லி
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
வேக வைத்த பட்டாணி - 1
கப்
உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்தது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ஆப்பசோடா - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தயிரில் ரவை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, 1 மணிநேரம்
மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் வேக வைத்துள்ள பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை
மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,
கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் மசித்து வைத்துள்ளதை
சேர்த்து கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும்
உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் ஆப்பசோடா சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.
இறுதியில் கலந்து வைத்துள்ள மாவை எடுத்து, இட்லி தட்டின் ஒரு குழியில்
சிறிது விட்டு, பின் அதன் மேல் உருளைக்கிழங்கு கலவையை ஒரு ஸ்பூன் வைத்து,
மீண்டும் அதன் மேல் இட்லி மாவை ஊற்ற வேண்டும். இதேப் போல் அனைத்து இட்லி
குழியிலும் இட்லி மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, வேக வைத்து
இறக்கினால், சுவையான பட்டாணி உருளைக்கிழங்கு இட்லி ரெடி!!!
No comments:
Post a Comment