Monday, 21 July 2014

ஆரோக்கிய உணவுகள்

Posted Image

1. மீன்

ஆரோக்கியமே: விஞ்ஞானிகளும், சூழலியல் ஆய்வாளர்களும் மீன்கள் தவிர்க்கக்கூடாத ஒரு உணவு என்று சொல்கிறார்கள். அனிமல் புரோட்டின் என்கிற மாமிச புரதச் சத்து மீன்களில் அதிகம் கிடைக்கிறது. தவிர, மிகக் குறைந்த கொழுப்பே மீன்களில் இருக்கிறது. நிறைய வகை மீன்களில் இருதயத்தைப் பாதுகாக்கும் ஒமேகா 3 இருக்கிறது. ஹார்வர்ட் நர்ஸஸ் ஹெல்த் ஸ்டடி தொடர்ந்து மூன்று தலைமுறைகளாக 80,000 பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் ஒரு வாரத்திற்கு மூன்று, நான்கு ஆண்டுகள் மீன்களைச் சாப்பிட்டு வரும் பெண்களுக்கு இருதய நோய்கள் 30 சதவிகிதம் குறைவதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இல்லை: இந்தியாவில் கிடைக்கிற பெரும்பாலான மீன்கள் மோசமான தண்ணீரில் வாழ்கின்றன. இதனால் அவற்றில் பாதரசம் என்கிற நச்சுப்பொருள் கலந்து இருக்கிறது. இது மூளைக்கு பாதிப்பை உருவாக்கும். கூடவே மீன்களில் இருக்கிற றிசிஙி என்கிற ‘பாலிகுளோரினேட் பைபினைல்ஸ்’, கான்ஸர் உருவாக்கும் சக்தி கொண்டது. ‘குழந்தைகள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள் போன்றவர்கள் இப்படி பாதரசம் கலந்த மீன்களைச் சாப்பிட்டால் மூளை பாதிக்கப்படும். கவனமாக இருக்க வேண்டும், என்கிறார், இந்தியாவின் நியுட்ரிஷன் சொஸைட்டியின் தலைவராக இருக்கும் டாக்டர் கமலா கிருஷ்ணஸ்வாமி. கர்ப்பத்தில் இருக்கும்போது இம்மாதிரி மீன்களைச் சாப்பிடும் குழந்தைகள், வளர்ந்ததும் மொழி கற்றுக் கொள்வதில், ஞாபகசக்தியில், சுறுசுறுப்பில் தடுமாறுகிறார்களாம்.

தீர்ப்பு: மீன்களில் கெடுதல் செய்யும் நச்சுக்கள் அவை வளர்க்கப்படுகிற அல்லது பெறப்படுகிற இடங்களின் மாசுக்களால் மட்டுமே உருவாகிறது. மீன் எந்த விதத்திலும் கெடுதல் இல்லை. நல்ல இடத்தில் இருந்து பெறப்படுகிற மீன்களை வாங்குங்கள். ஒரே வகை மீன்களை திரும்பத் திரும்ப சாப்பிடாதீர்கள். இதனால் நச்சுப் பொருட்கள் கலந்த மீன் வகைகள் சாப்பிடுவது குறைக்கப்படும். கடல் வகை மீன்களில் பொதுவாக நச்சுப் பொருட்கள் குறைவாக இருக்கும் சால்மன், ஷிர்ப்ம், டுனா போன்ற வகைகள் நல்லது.

2. முட்டை:

ஆரோக்கியமே: மிகச் சிறந்த புரோட்டின் முட்டையில் இருக்கிறது. கூடவே நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் இருக்கின்றன. கோலின் என்கிற ஒரு விஷயம் ஞாபகசக்திக் குறைவைத் தடுக்கிறது. லுப்பின், ஸியாசாந்தின், கரோடினாய்டுகள் கண்களுக்கு முழு பாதுகாப்பை வழங்குகின்றன. அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் 60 வயதுக்கு மேற்பட்ட 45 வயது ஆண்கள் கலந்து கொண்டு ஒரு நாளைக்கு மூன்று முட்டைகள் சாப்பிட்டார்கள். அவர்கள் இருதயத்திற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களில் 70 சதவிகிதம் பேர்களுக்கு கொலஸ்டிராலில் எந்த மாற்றமும் இல்லை. முட்டை கையில் இருப்பது ஆரோக்கியம்.

இல்லை: ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 300 மிகி கொலஸ்டிரால் இருக்கிறது. ஆம்லெட் பிரியர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. தேசிய உணவு ஆய்வுக்கழகம் இருதய பாதிப்பு வராமல் தடுக்க 200 மிகி கொலஸ்டிராலைத்தான் ஒரு நாளைக்கு அனுமதிக்கிறது. ஒரு முட்டை சாப்பிட்டால் அந்த நாளின் கொலஸ்டிரால் அளவு தாண்டிவிடும். எப்படி சமாளிப்பது?

தீர்ப்பு:

முட்டை எடுத்துக் கொள்கிற அளவை உங்கள் குடும்ப நலம், இரத்த அழுத்த அளவு, சோம்பேறியான வாழ்க்கை நிலை, இரத்தத்தின் கொலஸ்டிரால் அளவு என்பதைப் பொறுத்துதான் முடிவு செய்ய வேண்டும்.

3. காபி

ஆரோக்கியமே: காபி, கல்லீரல் பிரச்னை உடையவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. காபியின் கெடுதலை பெரிதாக யாராலும் நிரூபிக்க முடியவில்லை. இந்திய உணவில் தேநீருக்கு அடுத்தபடியாக காபியில்தான் இயற்கையான ‘ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள்’ கிடைக்கின்றன. காபி சுலபத்தில் விழிப்புணர்வைத் தூண்டுகிறது, ஞாபக சக்தியில் பங்கு கொள்கிறது.

இல்லை: கர்ப்பிணிகள் காபி குடித்தால் அபார்ஷன் நடக்க வாய்ப்பு இருக்கிறது. தூக்கம் பாதிப்பு அடையும். நெஞ்செரிச்சல் உருவாகும் உணவுக் குழாய் முடியும் இடத்தில் இருக்கும் ஒரு வால்வை காபி ஒழுங்காக செயல்படவிடாது. இதனால் வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு மேல்நோக்கி வந்துவிடும் பாதிப்பு இருக்கிறது. காபிக்கும் இருதய பாதிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் இருக்கின்றன. காபி இரத்தக் குழாய்களைச் சுருக்கும் தன்மை கொண்டது. இதனால் இரத்த அழுத்தம் உயரும்.

தீர்ப்பு: காபி குடித்தே ஆகவேண்டும் என்கிறவர்கள் இரண்டு கப்பிற்கு மேல் பில்டர் வேண்டாம். இருதய பிரச்னை இருந்தால் பில்டர் காபி மட்டும் குடிங்கள். எக்ஸ்பிரஸோ வேண்டாம்.

4. பால்:

ஆரோக்கியமே:

வைட்டமின் ‘பி’ மற்றும் கால்சியத்தின் அபாரமான பிறப்பிடம் பால்தான். பசும்பாலில் நல்ல தரமான புரோட்டின் உடன், எட்டு வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கின்றன. நிறைய பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பிரச்னை வருவதில்லை என்று டச்சு விஞ்ஞானிகள் குழு அறிவித்திருக்கிறது.

இல்லை:

‘‘நீங்கள் குடிக்கும் பால் எங்கிருந்து வரவழைக்கப்படுகிறது தெரியுமா? ஹார்மோன் ஊசிகள் வழியாக’’ என்று பயமுறுத்துகிறார்கள் சில டாக்டர்கள். கொஞ்சம்கூட சுகாதாரமற்ற இடங்களில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கு க்ஷீதீரீலீ என்ற ஹார்மோன் ஊசி போடப்பட்டு பால் வரவழைக்கப்படுகிறது. கூடவே ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் ஊசியும் பயன்படுத்தப்படுகிறது. இது மனித உடலுக்குள் வரும்போது ‘ஹார்மோன் இம்பேலன்ஸ்’ உருவாக்கும். தவிர, பாலில் முழுக்க சாச்சுரேடட் கொழுப்பு இருக்கிறது. இத்தனை அதிகம் சாப்பிட உடலில் கொலஸ்டிரால் கூடிவிடும்.

தீர்ப்பு:

ஆர்கானிக் பால் பொருட்களுக்குச் செல்லுங்கள். விலை அதிகமாக இருக்கும். ஆனால், இதுவே நல்ல வழி. இவற்றில் ஹார்மோன்கள் கிடையாது. இந்தப் பாலில் 70 சதவிகித ஒமேகா 3 இருக்கிறது. இது இருதயத்திற்கு மிக மிக நல்லது. மற்றொரு வழி ஸ்கிம்டு பால் பயன்படுத்துவது. ஒரு நாளைக்கு அனுமதிக்கப்படுகிற பாலின் அளவு 200 மி.லி.

No comments:

Post a Comment