மூலிகைகள் எண்ணற்றவை , நாம் அறிந்தவை, அறியாதவை நமக்கு பல இன்றியமையாத வகைகளில், நமது உடல் நலன் காக்க பேருதவி செய்து வருகின்றன. அந்த வகையில், சித்தர்கள் அருளிய அருள் குறிப்புகளில் சில வகை மூலிகைகள் ஆன்மீக ரீதியான தீர்வுகளும் சிறப்பாக தந்து வருகின்றன.
மாவிலங்கம் சிவனருட்கடாட்சமிக்கது,உடையார்கோவில் போன்ற சிவாலயங்களில் தல
விருட்சமாக இருப்பது இந்த மாவிலங்கமேயாகும். இன்று நாம் ஆங்கிலேய
அடிமைத்தனத்தினால் பழக்கப்பட்டுவிட்ட பல விசயங்களுள் ஒன்றான உலகின் ஆண்டு
முறையைக் கணக்கிடும் கி.மு , கி.பி போன்ற கணக்கில் சொன்னால், கி.மு.800ஆம்
நூற்றாண்டுகளிலேயே , மாவிலங்கம் மனித வாழ்வில் , அதன் அரு மருத்துவ
தன்மையினால், நம்முடைய மூதாதையர்களால் பரவலாகப்பயன்படுத்தப்பட்டு வந்தது.
இத்தகைய அரு மூலிகையே, மாவிலங்கப்பட்டையே, பஞ்ச பூத எண்ணை எனக்கூறப்படும் வேப்பெண்ணை, இலுப்பெண்ணை,
விளக்கெண்ணை ,நல்லெண்ணை,தேங்காயெண்ணை சரிசீராக கலந்த கலவையில், இட்டு, நன்கு காய்ச்சியபின், இந்த அதி மூலிகைத்தன்மையும், ஆன்மீகத்தீர்வும் கொண்ட பஞ்சபூத எண்ணையில், வெண் தாமரைத்திரியின் மூலம் வீட்டின் வாசலிலும், உட்புறம் சாமி அறையிலும், இரு மண் அகல் விளக்குகளில் தீபமேற்றி, தினமும் மாலையில் மனதார இறை சிந்தனையுடன், நீங்கள் அடைய எண்ணிய காரியங்கள், தடைபட்ட கல்வி,திருமணம்,வேலை,குடும்ப வளம் எண்ணி தொடர்ந்து 48 நாட்கள் பிரார்த்தித்து வர, உங்கள் துன்பம் எல்லாம், சூரியனைக்கண்ட பனி போல விலகும், எண்ணிய காரியங்கள் எல்லாம், ஈஸ்வர கிருபையால், இனிதே தொடங்கி நல்ல முறையில் நடக்கும்! இத்தகைய அரு மூலிகை எண்ணையே நவக்ரஹ தோஷத்தினை நிவர்த்தி செய்து, உங்கள் இல்லத்தையும் உள்ளத்தையும் நற்செயல்களின் நிலமாக்கி, உங்கள் வாழ்வை நல் வளமான பயிராக்கி, செழிக்க வைக்கும் வல்லமை வாய்ந்தது!ஓம் சிவாய நம ...

No comments:
Post a Comment