Monday, 21 July 2014

தேங்காய் ஸ்பெஷல் ரெசிபி

உருளைக்கிழங்கு ரெய்தா


Posted Image

என்னென்ன தேவை?

வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு - 100 கிராம்,

பச்சை மிளகாய் -2,

வெங்காயம் -1,

தேங்காய்த் துருவல் - 50 கிராம்,

தயிர் - 100 மி.லி.,

கடுகு,

உளுந்து,

கறிவேப்பிலை,

பெருங்காயம்

தாளிப்பதற்கு எண்ணெய் - 1 டீஸ்பூன்,

கொழுப்பு நீக்கிய தயிர் - 100 மி.லி.,

உப்பு - தேவைக்கேற்ப,

கொத்தமல்லி - அலங்கரிக்க.


எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அதை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, தயிரும் உப்பும் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

இளநீர் காக்டெயில்


Posted Image

என்னென்ன தேவை?

வழுக்கை இல்லாத இளநீர் - 1,

எலுமிச்சை - அரை மூடி,

புதினா - 10 கிராம்,

இஞ்சி - 5 கிராம்,

உப்பு - 1 சிட்டிகை,

சோடா - 100 மி.லி.


எப்படிச் செய்வது?

புதினா, இஞ்சி, இளநீர், உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து ஒன்றாக அடித்து, வடிகட்டவும். அத்துடன் எலுமிச்சைச் சாறும், குளிர்ந்த சோடாவும் சேர்த்துப் பரிமாறவும்.

நியூட்ரி பால்ஸ்


Posted Image


என்னென்ன தேவை?


உடைத்த முந்திரி, உடைத்த பாதாம்,

பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம்,

அத்திப்பழம்,

ஆப்ரிகாட் (உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட பேரிக்காய். பெரிய கடைகளில் கிடைக்கும்) கலவை - 1 கப்,

தேன் - 1 டேபிள்ஸ்பூன்,

பதப்படுத்தப்பட்ட உலர்ந்த தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முந்திரி முதல் ஆப்ரிகாட் வரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். தேன் சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும். தேங்காய்த் துருவலில் புரட்டி, ஃப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment