Monday, 30 December 2013

பட்டர் சிக்கன் ரெசிபி



சிக்கன் ரெசிபிக்களில் பட்டர் சிக்கன் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அதிலும் இந்த ரெசிபி சிக்கனை முதன்முதலில் சமைப்போருக்கு ஏற்றதாக இருக்கும். ஆகவே இந்த வாரம் பட்டர் சிக்கன் ரெசிபியை வீட்டில் செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். இப்போது அந்த பட்டர் சிக்கன் ரெசிபியைப் பார்ப்போமா!!!

சிக்கன் - அரை கிலோ
பட்டர் - 50 -75 கிராம்
சில்லி பவுடர் - 2 தேக்காண்டி
புளிப்பில்லாத கட்டி தயிர் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை -1
கிராம்பு-2
ஏலம் - 2
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - அலங்கரிக்க
அரைக்க :
வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
முந்திரிப்பருப்பு - 8-10

தேவையான பொருள்களை தயாராக வைத்து கொள்ளவும்.

பின்பு சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, ஒரு தேக்கரண்டி சில்லிபவுடர் போட்டு பிரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆற வைக்கவும். தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும். மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்.

பின்பு கடாயில் பட்டர் போட்டு அதிகம் உருகும் முன்பு பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனை போட்டு சிவக்க பிரட்டி வேக விடவும்.

பின்பு அரைத்த தக்காளி, முந்திரி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

பின் ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், உப்பு சிறிது சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

நன்கு கொதி வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.

இது சப்பாத்தி, நாண், பூரி, ப்ரைடு ரைஸ் வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.. கடையில் நாம் வாங்கும் பட்டர் சிக்கன் டேஸ்ட் கண்டிப்பாக வரும்.

டேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்!



டேட்டா கேபிள் இல்லாமலேயே நீங்கள் வைத்திருக்கும் ஆன்ட்ராய்ட் மொபைல் போனிலிருந்து தகவல்களை(Data) கணினி, டேப்ளட் பிசி, மற்றும் மற்றவகை மொபைல்போன்களுக்கு தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.

Soft Data Cable
USB Cable எனப்படும் தகவல்பரிமாற்ற கம்பி இல்லாமேலே உங்கள் ஆன்ட்ராய்ட் மொலைலிருந்து கணினி,மொபைல், டேப்ளட் பிசி (Computer, tablet, android smartphone) போன்ற மற்ற சாதனங்களுக்கு WiFi மூலம் தகவல்களை பரிமாறிகொள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் (Android apps) ஒன்று உதவுகிறது.

இந்த அப்ளிகேசனை(software data cable) நீங்கள் இந்த முகவரியிலிருந்து பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.

Download Link – தரவிறக்கச்சுட்டி
Install Soft Data Cable ( http://goo.gl/0jbJaz )
மேற்கண்ட இணைப்பின் வழிச்சென்று உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்போனில் இந்த பயன்பாட்டு மென்பொருளை நிறுவிடுங்கள்.

அடுத்து அந்த பயன்பாட்டு மென்பொருளை இயக்கி WiFi மூலம் உங்கள் கணினி, டேப்ளட் பிசி, மொபைல் போன்ற சாதனங்களுடன் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலையும் எளிதாக இணைத்துவிடலாம்.

இதன் மூலம் எந்த ஒரு கம்பி இணைப்பு இல்லாமலேயே, கணினிக்கும், மொபைலுக்கும் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் வேண்டிய தகவல்பரிமாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

இந்த அப்ளிகேஷனின் பயன்கள்: (ஆங்கிலத்தில்)

BENEFITS WITH SOFTWARE DATA CABLE
The fewer cables to carry the better
The computer doesn’t need to have drivers it does need installed
Send photos, music, videos, apps etc. to other phones, tablets or TV anytime, anywhere
Auto-sync photos and other important files to computer or cloud storage (on a daily, weekly basis to backup data)
Extend mobile storage space without any cost

உருண்டை குழம்பு....

தேவையான பொருட்கள் :

கடலைபருப்பு - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சின்னவெங்காயம் - 7(அ) பெரியவெங்காயம் - 1
பட்டைமிளகாய் - 4
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்

குழம்புக்கு தேவையானவை :

புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சின்னவெங்காயம் - 8
உப்பு தேவையான அளவு
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 மேசைகரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :


கடலை பருப்பு, துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை சுத்தமாக வடிகட்டி உப்பு, பட்டை மிளகாய், சோம்பு சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி அரைத்த பருப்புடன் சேர்க்கவும் இதனுடன் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் 1/4 டீஸ்பூன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து வைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெயிட்டு கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து தாளித்து குழம்பு கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பின் ஒரு பருப்பு உருண்டையை எடுத்து கொதிக்கும் குழம்பில் போட்டு சிறிது கொதி வந்தவுடன் உருண்டையை ஒரு கரண்டியால் எடுத்து பார்க்கவும்.
உருண்டை கரையாமல் வந்தால் மேலும் கொதிக்க கொதிக்க உருண்டைகளை போட்டு வேகவைத்து இறக்கவும்.
(உருண்டைகள் கரைந்தால் இட்லி தட்டில் வைத்து லேசாக வேகவைத்து பின் குழம்பை நன்றாக சுண்டிய பின் உருண்டைகளை அதில் போட்டு இறக்கலாம்)
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை...!



சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்...

சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்ப ு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்...

சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு...

சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt) ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு...

சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்...

சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர், ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந் நடைப் பழக்கம் பயன்படும்.

எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது...

மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்...!

Thursday, 26 December 2013

தயிர் சாதத்தின் அற்புதங்கள்.

'புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'' இவ்வாறு, ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்திமதி மற்றும் பவானி. 
ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
''இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒருவகை நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.
நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.
 நன்மைகள்
வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.
 உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.
 தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
 உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.
 கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
 சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
 கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது.

இயற்கை தரும் ஆரோக்கியம்

தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.
மூட்டு வலிகுறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.
காதுவலி குறைய: கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.
கண் உஷ்ணம் குறைய: வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.
வாய்ப்புண் குறைய: பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

வால்நட் (அக்ரூட்)


வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும்.
உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு பயம் பலருக்கு இருக்கிறது.இதனால்தான் கடுங்குளிரிலும் காலை நேர, நடைப்பயிற்சிக்குப் பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். இந்தப் பயத்தை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிடலாம். தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வரவும். இதனால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து புள்ளி வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகிறது.

//சரி, வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே! இதனால் உடல் எடை அதிகரிக்காது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட்டைச் சாப்பிட்டு வரலாம்//

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். இது. முதுமை மறதி, நினைவ7ற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும். அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உரைவுக் கட்டிகளை இந்த வால்நட் சத்து கரைக்கிறது என்று என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்தபோது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்!!!
நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா!!!

சுருக்கங்கள்

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

தொற்றுநோய்கள்

சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

தோல் அழற்சி

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

உடல் நோய்கள்

வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

வால்நட் நியூட்ரி பால்ஸ்
தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
பாதாம் பருப்பு 10
வால்நட் 10
முந்திரிபருப்பு 10
பிஸ்தா பருப்பு 10
கறுப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை 10
தேன் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் 1 கப் (பொடித்தது)

செய்முறை

செய்முறை:

ஓட்ஸை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வால்நட்,முந்திரிபருப்பு,பிஸ்தா
நான்கையும் சேர்த்து ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
உலர்ந்த திரட்சையை நெய்யில் பொறித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீருடன் வெல்லத்தை
சேர்த்து கொதிக்கவிடவும்.கம்பி பாகுவந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
பொடி பண்ணிய ஓட்ஸ்
ரவை போல் உடைத்த நட்ஸ் கலவை
வறுத்த எள்
பொறித்த திராட்சை
தேன்,நெய்
சேர்த்து
அதனுடன் கம்பிபாகு வெல்லத்தை ஊற்றி
நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

இது சத்து நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டி ஆகும்

வால்நட் முந்திரி பர்ஃபி
தேவையானவை:

வால்நட் பருப்பு - ஒரு கப்,
முந்திரி - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய் - அரை கப்.

செய்முறை:

வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.
கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய சுவையான ஸ்வீட் இது

வால்நட் - முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்

வால்நட், பாதாம் பாயாசம்

வால்நட் : 25 gm
பாதாம் : 10 pcs
சர்க்கரை : 100 gm
நெய், ஏலம் : சிறிது

வால்நட் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அந்தக்கலவையை சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வந்தவுடன் அதில் சர்க்கரையைப் போட்டு கரைந்து வந்தவுடன் நெய், ஏலப்பொடி போட்டு கலக்கி இறக்கவும்.

உடல் எடையை குறைக்க எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும்?

30 வருடங்களுக்கு முன்பு, 'அம்மா நான் கோகோ, ரன்னிங்ல ஃபர்ஸ்ட் பிரைஸ்’ என்று பெருமையோடு சொன்னால், 'போதும்டீ... நீ படிக்க ஸ்கூல் போறியா? இல்லை, விளையாடப் போறியா? படிப்பை முதல்ல கவனி’ என்று விளையாட்டுக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். 'ஒல்லி உடம்பு கொஞ்சமாவது தேறுமா?’ என்று பிள்ளைகளைப் பற்றிய ஏக்கமும், கனவும் அன்றைய பெற்றோருக்கு இருக்கும். உடலில் துளியும் எடைகூடாத அளவுக்கு விளையாட்டு, வீட்டு வேலை, சத்தான உணவு என அருமையான வாழ்க்கை முறையாக இருந்தது.
 ஆனால் இன்றோ, டீன் ஏஜ் பிள்ளைகளின் உடல் எடையைக் குறைக்க வழிதேடும் பெற்றோர். நாற்பது வயதில், வயிறு பெருத்து நடக்கக்கூட முடியாமல் திணறும் பெண்கள் மற்றும் ஆண்கள். விளைவு, தெருவுக்குத் தெரு, ஜிம். வீட்டுக்கு வீடு நடைபயிற்சி, ஓடுற மெஷின்கள்.
எடையைக் குறைக்க என்னவெல்லாம் வழி? என்பது குறித்து, எழும்பூர் குழந்தை நல மருத்துவர் எஸ். ஸ்ரீனிவாசன், ஊட்டச் சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விரிவாகப் பேசுகின்றனர்.

எடை கூட காரணங்கள்:
எடை ஒரேநாளில் அதிகரித்துவிடுவது இல்லை. நம்முடைய தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மருத்துவரீதியான பிரச்னை காரணமாக உடல் எடை கொஞ்சம்கொஞ்சமாக அதிகரிக்கிறது.
சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவை உட்கொள்வது, இரவு நேரங்களில், பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது கூடவே கூல்டிரிங்ஸ் குடிப்பது போன்றவை உடல் எடை அதிகரிக்க காரணம்.
உடல் எடையைக் குறைக்க
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், ஒரு நாளைக்கு 1,600 கலோரி உள்ள உணவையும் பெண், 1,200 கலோரி எடை உணவையும் உட்கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைப்பதன் ரகசியம், நாம் உட்கொள்ளும் உணவில்தான் இருக்கிறது, சரியான அளவில் உட்கொள்ளாமல் இருப்பது நம் உடலின் வளர்சிதை மாற்றங்களைப் பாதித்து உடல் நலத்துக்கு வேறு பல பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கான பொது விதிகள்
 எதை, எப்படி, எவ்வளவு, எப்போது சாப்பிட வேண்டும் என்ற உணவுக்கட்டுப்பாடு மிகமிக முக்கியம். இது உடலுக்கு சரிவிகித ஊட்டச்சத்துக்களை அளித்து ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும்.

 அதிக அளவு கலோரி உள்ள, அதேநேரம் ஊட்டச்சத்து சிறிதும் இல்லாத கூல் டிரிங்ஸ், நொறுக்குத் தீனி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 அதிக அளவில் கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, உடலுக்கு அதிக வைட்டமின், தாது உப்பு மற்றும் நார்ச் சத்துக்கள் கிடைக்கின்றன.  
 வயிறு நிறைந்துவிட்ட உணர்வை மூளை அடைய, குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும். எனவே, அவசர அவசரமாக உணவை எடுத்துக்கொள்ளவேண்டாம்.  உணவு சாப்பிடும் நேரம் மிக நீண்டதாக இருக்கட்டும்.
 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டியது இல்லை. அப்படித் தவிர்ப்பதன்மூலம் அது நம் உடலில் ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையை ஏற்பட்டு, உடல் எடை அதிகரிக்கக் காரணமாகிவிடும்.
 சூப், ஜூஸ், பால்... என போன்ற நீராகாரங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு, பசி உணர்வு தோன்றாமல் பார்த்துக்கொள்ளும்.
 ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க, உடல் பருமன் குறைப்பு வல்லுனரின் ஆலோசனையைப் பெறத் தயங்காதீர்கள். ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட டயட் உணவை, மற்றவர் பின்பற்றுவது மிகவும் தவறு.
உணவாலும் உடல் இளைக்கும்!
நல்ல புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 2,000 கலோரி தேவையெனில், அதில் 500 கலோரியைக் குறைத்தாலே போதும்.  மாதம் இரண்டு கிலோ எடை குறைந்துவிடும்' என்றவர் ஒருநாள் உணவை பட்டியலிடுகிறார்.
ஒரு நாள் உணவு!
காலையில் எழுந்ததும், 10 நிமிடங்கள் வார்ம் அப். பிறகு இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீர்.
அரை மணி நேர நடைப்பயிற்சி.
வீடு திரும்பியதும் கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப். (சர்க்கரை சேர்க்காமல்)
புரதச் சத்து நிறைந்த முளைகட்டிய பயறு சாலட் போன்ற மிதமான பிரேக் ஃபாஸ்ட்.   (100 கிராம்)
10 மணிக்கு மோர்
11 மணிக்கு எலுமிச்சை ஜூஸ்
12 மணிக்கு இளநீர்
மதியம் ஒரு மணிக்கு 150 கிராம் அரிசி சாதம்.
வளரும் குழந்தைகளுக்கு 200 கிராம் சாதம். (இந்த சாதத்தை மூன்றாகப் பிரித்து, கீரை, காயுடன் ஒரு பங்கு, அடுத்து மிளகு, பூண்டு ரசம், கடைசிப் பங்கு தயிர் / மோர் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.)
200 கிராம் பருப்பு மற்றும் காய்கறிகள். துளியும் எண்ணெய் சேர்க்கக்கூடாது. அதிகம் வேக வைக்கவேண்டியதும் இல்லை.
நான்வெஜ் பிரியர்கள் இரண்டு துண்டு மட்டன் / சிக்கன், முட்டையின் வெள்ளைப்பகுதி மட்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் மதிய தூக்கத்தைத் தவிர்க்கவும்.
நான்கு மணிக்கு ஒரு கப் பப்பாளி.
ஐந்து மணிக்கு புரதம், நார்ச் சத்து நிறைந்த வேகவைத்த ஏதேனும்  சுண்டல் ஒரு கப்.
காபி பிரியர்கள், ஒரு சின்ன கப்பில் காபி எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக காபியைக் குறைத்து க்ரீன் டீ குடிக்கலாம்.  
இரவு எட்டு மணிக்குள் இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு இட்லி, எண்ணெய் இல்லாத இரண்டு தோசை, தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி.  
தூங்கப் போவதற்கு முன்பு கொழுப்பு நீக்கிய பால் ஒரு கப்.  
டயட் பற்றிய டவுட்!
பட்டினி கிடந்தால் எடையைக் குறைக்கலாம் என்பது தவறான கருத்து.  
 எடை குறைக்க விரும்புபவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைக்கவேண்டும். பழங்கள், காய்கறிகளைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.  
 நீராகாரமாக மட்டும் சாப்பிட்டால் வயிற்றின் உட்புறச் சுவர்கள் பாதிக்கப்படும்.  இதனால் அல்சர் வரும் வாய்ப்புகள் அதிகம்.  திட மற்றும் திரவ உணவுகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலமே மலச்சிக்கல் வராமல் இருக்கும்.  
ரெசிபிகள்
கோஸ் சூப்
செய்முறை: 200 கிராம் கோஸை பொடியாக நறுக்கி, நீர் விட்டுக் கொதிக்கவைக்கவும். காரட், பீன்ஸ், வெங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, இவற்றை அரைத்து விழுதாக்கி,  மஞ்சள்தூள், சீரகத்தூள், இந்துப்பு கலந்து இறக்கி, சுடச்சுட பருகவும்.
மதியம் சாப்பிட வெஜிடபிள் அவல் மிக்ஸ் சாதம்!
செய்முறை: அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயத்தை, தக்காளி, கோஸ், குடமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கி வதக்கவும். இதில் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஊறிய அவலைப் போட்டு, உப்பு சேர்த்து எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கிளறி இறக்கவும்.
வாழைத்தண்டு பச்சடி
செய்முறை: வாழைத்தண்டைக் கழுவி, பொடியாக நறுக்கி, தண்ணீர்விட்டு  லேசாக வேக வைக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்க்கவும். ஒரு டம்ளர் மோர், இந்துப்பு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்

யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!



யூரிக் அமிலம் என்பது ப்யூரைன் உடைவதால் உண்டாக்கப்பட்டு இரத்தத்தின் மூலம் சிறுநீரகத்தை அடைகிறது. சிறுநீர் கழிக்கும் போது உங்கள் உடலில் இருந்து சிறுநீரக அமிலம் வெளியேறுகிறது. சில சமயங்களில் சிறுநீரக அமிலம் சிறுநீரகத்தின் வழியாக வெளியேறாமல் இரத்தத்தில் தங்கிவிடுகிறது. இது அதிகரித்தால் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. சில சமயங்களில் இது கீல் வாதத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீரக அமிலத்தை கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. ஆனால் இதற்கு முன்னால் இது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது நல்லது. நமக்கு சரியான காரணங்கள் தெரியாவிட்டால் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது? யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணங்களை சிலவற்றை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். நாம் ஏற்கனவே சொன்னதை போல் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது கீல்வாதம் போன்ற பல பிரச்சனைகளால் அவதிப்பட வேண்டியிருக்கும். அதிக அளவு குடிப்பழக்கம் யூரிக் அமிலத்தை அதிகரித்து விடுகிறது. சில நேரங்களில் மரபு ரீதியாக யூரிக் அமிலம் அதிகரிக்கக் கூடும். அதனை ஒன்றுமே செய்ய முடியாது.

உடல் பருமன், ப்யூரைன் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் கழிவுகளை நீக்கும் திறனை கிட்னி இழத்தல் போன்ற காரணங்களாலும் கூட உடலில் உள்ள யூரிக் அமிலம் அதிகரிக்கக் கூடும். சிறுநீரக பெருக்குக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் கூட இதை அதிகரித்து விடுகிறது. சரி இதற்கான காரணங்களை பார்த்தோம் அல்லவா? இனி இதைக் கட்டுபடுத்தும் வழிகளை பார்போம். நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அடங்கியுள்ள ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக யூரிக் அமிலம் கொண்ட உணவு என்றால் சுத்தமாக ப்யூரைன் இல்லாத உணவாகும். அதிகமாக உள்ள யூரிக் அமிலங்களை கட்டுப்படுத்தும் சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாமா?

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுதல்

ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நார்ச்சத்துக்கள் யூரிக் அமிலத்தை கட்டுபடுத்துகிறது. எனவே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பாட்டில் எடுத்துக் கொள்வது நல்லது. கீரை, ஓட்ஸ், ப்ராக்கோலி போன்றவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அதனை உண்ண ஆரம்பித்து அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துங்கள்.

ஆலிவ் எண்ணெயில் சமையல் செய்தல்

ஆலிவ் எண்ணெய் என்றதும் நாம் பயன்படுத்தும் சாதாரண ஆலிவ் எண்ணெய் என்று எண்ணிவிடாதீர்கள். வெண்ணெய் அல்லது சாதாரண சமையல் எண்ணெய்க்கு பதில் விதையிலிருந்து பிழிந்து எடுக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். சாதாரண எண்ணெய் நமது உடலில் புளித்த அமிலத்தை சுரக்க வைக்கிறது. இதனால் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள வைட்டமின் ஈ கொள்ளப்படுகிறது. இது ஆலிவ் எண்ணெயால் தடுக்கப்படுகிறது.

பேக்கரி உணவுகளை தவிர்த்தல்

இனிப்பு கலந்த பேக்கரி உணவுகள் தானே உங்களுக்கு பிடித்த உணவு? ஆனால் அவைகளை தவிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏன் என்று தெரியுமா? இந்த வகையான உணவுப் பொருட்களில் யூரிக் அமிலம் அதிகமாக சுரக்கிறது. எனவே கேக் போன்ற பேக்கரி பொருட்களை தவிர்ப்பது நல்லது.

தண்ணீர் குடித்தல்

தண்ணீர் என்பது உங்கள் உடலில் பல செயல்பாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கும். சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவதால் யூரிக் அமிலம் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. சரி ஏன் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது? அதிகமாக தண்ணீரை குடிக்கும் போது அது உங்கள் கிட்னியில் தேங்கிருக்கும் யூரிக் அமிலத்தை சிறுநீரகம் வழியாக வெளியேற்றிவிடும். ஆனால் குறைந்த அளவு தண்ணீரை சீரான இடைவேளையில் குடிக்க வேண்டும்.

செர்ரி பழங்கள் சாப்பிடுதல்

செர்ரி பழங்களில் அழற்சி நீக்கும் குணங்கள் அடங்கியுள்ளதால் அதனை கீல்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அதனால் அதனை அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 10-40 செர்ரி பழங்களை சரியான இடைவெளியில் உட்கொள்ள வேண்டும். ஆனால் அதிக அளவு செர்ரி பழங்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டால் அது வேறு சில ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சேர்த்தல்

நீங்கள் உண்ணும் உணவுகளில் 500 மில்லிக்ராம் அளவிற்கான வைட்டமின் சி சேர்க்கப்பட்டிருந்தால் அது அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும். நம் உடம்பில் சுரக்கும் யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக செல்வதற்கு வைட்டமின் சி பெரிதும் துணை நிற்கும். யூரிக் அமிலம் நம் உடலை விட்டு வெளியேறுதல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருப்பதால் வைட்டமின் சி-யை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியமாகும். மேற்கூறிய அனைத்து டிப்ஸ்களையும் பின்பற்றி உடலில் அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை உடனே வெளியேற்றுங்கள்.

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?


ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!



1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.

2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.

3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.

4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.

5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).

6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.

7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.

8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.

9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.

10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.

11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.

12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.

13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.

14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.

15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.

16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.

ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

ஆண்களுக்கான மச்ச பலன் :



இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.

நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும். இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள். இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள். மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும். மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும். மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள். மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள். மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும். மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும். இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும். கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும். கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார். வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார். மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான். தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார். வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள். இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள் .

முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள். முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார். முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?



நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

“இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்” என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உ ணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.

Tuesday, 24 December 2013

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!


நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை(துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். தொடர்ந்து மறுநாள் காலையில் கொதிக்க வைக்க வேண்டும். 200 மில்லி குறையாமல்காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும் அளவு மிதமான சூட்டில் சாப்பிட்டு வர படிப்படியாக உடம்பில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதன் சுவை உவர்ப்பு, கசப்பு எதுவும் இருக்காது. அருந்துவதற்கு சுவையாக தேநீர் போன்று இருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்பிடுபவர்களும் இந்த சீத்தா இலை மருந்தை சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) சாப்பிட்டு வர, மாத்திரை தேவைப்படாது. சர்க்கரை நோயாளிக் அனைத்து பலகார வகைகளை சாப்பிடலாம். இந்த இலைசாறின் மகிமை உடலில் மாற்றம் ஏற்படுத்துவதுடன், சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. பார்வை கோளாறுகளை சரி செய்யும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்கும். கால் வலியும் -குணமாகும் என்கிறார் சந்திரசேகரன். மேலும் விபரங்களுக்கு சந்திரசேகரன் அவர்களை எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர் சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடதக்கது. காவல் ரோந்து பணியுடன் மக்கள நல பணிகளையும் சேர்ந்து செய்கிறார்.

திருவொற்றியயூரை சேர்ந்த மருத்துவர் வரதராஜனிடம் பேசிய போது,

என்னுடைய அம்மா ரூக்மணி சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தார். நான் பொது மருத்துவர் என்ற முறையில் பல மருந்துகளை கொடுத்தும் சர்க்கரையின் அளவு குறையவில்லை. என்னுடைய பணி நிமிந்தம் காரணமாக சந்திரசேகரன் சந்தித்தேன். அப்போது அவர் இந்த மருந்தை சொன்னார். ஆனால் எனக்கு துளியும் நம்பிக்கையில்லை. ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று அம்மாவுக்கு கொடுத்தேன். 15 தினங்கள் சாப்பிடவருக்கு சர்க்கரையின் அளவு 360லிருந்து 160 ஆகிவிட்டது. இதனால் இன்சுலின் மருந்தின் அளவையும் குறைத்துவிட்டேன். இப்போது உடலில் சேர்வு நீங்கி நலமாக இருக்கிறார் என்றார் மருத்துவர் வரதராஜன்.

Thursday, 19 December 2013

தலைவலி குறைய



கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.





அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கற்பூரவல்லி இலைச்சாறு.
  2. நல்லெண்ணெய்.
  3. சர்க்கரை.
செய்முறை:
கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.