Saturday, 14 December 2013

நகரப்பேருந்து வசதிகளைப் பற்றி செய்தி தரும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்க​ள்

பெரு நகரங்களுக்கு செல்லும் போது நம்மால் நகரப் பேருந்துகளின் வழித்தடங்களை எளிதாக கண்டறிய இயலாது. உங்களிடம் ஒரு ஆன்ட்ராய்ட் மொபைல் இருந்தால் அந்த கவலையே இல்லை. மொழி தெரியாத நகரத்திலும் நீங்கள் எளிதாக பேருந்து வழித் தடங்களை கண்டு பிடிக்கலாம். 


Bangalore BMTC Info

பெங்களூருவில் வாழும் தமிழர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை எந்தப் பேருந்து எந்தத் தடத்தில் செல்லும் என்று கண்டறிவதற்குள் விடிந்து விடும். ஆனால் இந்த App இதை எளிதாக்குகிறது. இதை தரவிறக்கம் செய்து "From To" என்பதில்  புறப்படும் இடம், இறங்கும் இடம் கொடுத்தால் வரிசையாக வந்து நிற்கின்றன பேருந்து எண்கள். பேருந்து நேரடியாக இல்லாவிட்டாலும் மாற்று வழித் தடங்களை இது காண்பிக்கிறது. 



Or Scan This QR Code

Chennai MTC Info

என்னதான் தமிழ்நாடாய் இருந்தாலும் சென்னைக்கு புதியவர் என்றால் பேருந்து எண்களை உடனடியாக கண்டுபிடிக்க இயலாது. எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதை மேலே சொன்னது போல இதுவும் எளிதாக கண்டறிந்து தருகிறது.




Or Scan This QR Code


இதே போல நீங்கள் மற்ற பெரு நகரங்களில் இருந்தால் கீழே உள்ள பெயர்களின் மீது கிளிக் செய்து குறிப்பிட்ட Application-ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும். 






இப்போது நீங்கள் அடுத்தவர்களுக்கே வழி சொல்லி உதவலாம் நண்பர்களே. :-)

No comments:

Post a Comment