Saturday, 14 December 2013

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்

News Service இன்றைய காலத்தில் உடலில் ஏற்படும் நோய்களில் முதலில் இருப்பது நீரிழிவு தான். இந்த நீரிழிவு வந்தால், உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதே ஆகும். இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான். இந்த நீரிழவு பிரச்சனை வந்தால், பின் எந்த ஒரு உணவையும் நிம்மதியாக சாப்பிட முடியாது. ஏனெனில் உண்ணும் உணவுகள் சிலவற்றில், சர்க்கரையானது அதிகம் நிறைந்திருக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தையுமே சாப்பிடக் கூடாது என்பதில்லை. சொல்லப்போனால் பழங்கள் கூடத் தான் இனிப்பாக இருக்கும். நிறைய மருத்துவர்கள் தினமும் குறைந்தது 4-5 பழங்களையாவது சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அதற்காக நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடாமல் இருக்க முடியுமா என்ன? நிச்சயம் சாப்பிடலாம்.
  
ஏனெனில் பழங்கள் கூட இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும், தினமும் பழங்களை சாப்பிடுவது நல்லது. அதிலும் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். முக்கியமாக அளவுக்கு அதிகமாக எதையும் சாப்பிடக் கூடாது. பின் அதுவே நஞ்சாக மாறிவிடும். மேலும் சில பழங்களை சாப்பிட்டால், இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். எனவே இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!
கிவி
கிவி பழங்களை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும் என்று ஆய்வுகள் பலவற்றில் கண்டறியப்பட்டுள்ளன.
நாவல் பழம்
நாவல் பழத்தின் நிறத்தை பார்க்கும் போதே நாஊறும். அத்தகைய நாவல் பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இந்த பழம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். அதிலும் இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், நீரிழிவை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.
நட்சத்திரப் பழம்
இந்த நட்சத்திரப் பழம் நெல்லிக்காய் போன்ற சுவையுடையது. இந்த பழத்தை நறுக்கினால், நட்சத்திரம் போன்று காணப்படும். இத்தகைய பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
கொய்யா பழம்
நீரிழிவு மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு கொய்யா பழம் நல்ல தீர்வைத் தரும். அதிலும் கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. செர்ரி
செர்ரிப் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 20 ஆக இருப்பதால், இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.
பீச்
இந்த பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதோடு, மிகுந்த ஆரோக்கியத்தை தருவதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சூப்பரான பழம்.
பெர்ரி
பெர்ரிப் பழத்தில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் இந்த வகைப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஆகவே இந்த பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்ற பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது நல்லது.
ஆப்பிள்
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை சாப்பிடும் போது கொலஸ்ட்ரால் குறைவதோடு, செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிலும் இந்த பழத்தில அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.
அன்னாசி பழம்
அன்னாசியில் ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருப்பதால், சாதாரணமாகவே உடலுக்கு சிறந்த பழம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
பேரிக்காய்
இந்த சுவையான பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லாம். அந்த பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
பப்பாளி
பப்பாளியில் வைட்டமின்கள் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பழம்.
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை இன்சுலின் செயல்பாட்டிற்கு பெரிதும் துணைப் புரிகின்றன.
ஆரஞ்சு
இந்த சிட்ரஸ் பழத்தை தினமும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவானது குறையும். அதிலும் இவற்றில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது.
திராட்சை
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை ஒரு சிறப்பான பழம். எப்படியெனில் இந்த பழத்தை சாப்பிட்டால், இவை உடலில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.
மாதுளை
மாதுளையில் உள்ள சின்ன சின்ன சுவைமிக்க கனிகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிசமமாக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்த, ஆரோக்கியத்தை தரும் பழங்களுள் ஒன்று.

No comments:

Post a Comment