Saturday, 14 December 2013

ஆண்களின் எடை குறைய உதவும் இந்திய உணவுகள்


ஆண்களின் எடை குறைய உதவும் இந்திய உணவுகள்!!!
===========================================


பாசிப்பருப்பு -
இந்த சிறிய மஞ்சள் நிறப் பருப்பில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பருப்பில் வைட்டமின் , பி, சி, , புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

மோர் -
ஆண்களுக்கு ஒரு சிறந்த உடல் எடையை குறைக்கும் ஆரோக்கிய பானம் என்று சொன்னால், அது மோர் தான். அதிலும், ஜிம் அல்லது உடற்பயிற்சி செய்ததும், ஒரு டம்ளர் மோர் குடித்தால், உடல் எடை குறைவதோடு, உடலில் வறட்சியில்லாமல், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். அதிலும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள தயிரைக் கடைந்து, மோராக குடிப்பது மிகவும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள் -
ஆண்கள் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவானது குறையும். எனவே ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற உணவுப் பொருட்களை சேர்த்தால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருக்கும்.

கறிவேப்பிலை -
கறிவேப்பிலை சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு சரியாவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்களும் கரைந்து, உடல் எடை குறையும். எனவே ஆண்கள் இதனை உணவில் சேர்ப்பது நல்லது.


No comments:

Post a Comment