Monday, 30 December 2013

பட்டர் சிக்கன் ரெசிபி



சிக்கன் ரெசிபிக்களில் பட்டர் சிக்கன் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. அதிலும் இந்த ரெசிபி சிக்கனை முதன்முதலில் சமைப்போருக்கு ஏற்றதாக இருக்கும். ஆகவே இந்த வாரம் பட்டர் சிக்கன் ரெசிபியை வீட்டில் செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். இப்போது அந்த பட்டர் சிக்கன் ரெசிபியைப் பார்ப்போமா!!!

சிக்கன் - அரை கிலோ
பட்டர் - 50 -75 கிராம்
சில்லி பவுடர் - 2 தேக்காண்டி
புளிப்பில்லாத கட்டி தயிர் - ஒரு மேசைக்கரண்டி
பட்டை -1
கிராம்பு-2
ஏலம் - 2
உப்பு - தேவைக்கு
மல்லி இலை - அலங்கரிக்க
அரைக்க :
வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
முந்திரிப்பருப்பு - 8-10

தேவையான பொருள்களை தயாராக வைத்து கொள்ளவும்.

பின்பு சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, ஒரு தேக்கரண்டி சில்லிபவுடர் போட்டு பிரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

வெங்காயம், முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆற வைக்கவும். தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும். மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்.

பின்பு கடாயில் பட்டர் போட்டு அதிகம் உருகும் முன்பு பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனை போட்டு சிவக்க பிரட்டி வேக விடவும்.

பின்பு அரைத்த தக்காளி, முந்திரி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

பின் ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், உப்பு சிறிது சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

நன்கு கொதி வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.

இது சப்பாத்தி, நாண், பூரி, ப்ரைடு ரைஸ் வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.. கடையில் நாம் வாங்கும் பட்டர் சிக்கன் டேஸ்ட் கண்டிப்பாக வரும்.

No comments:

Post a Comment