Saturday, 14 December 2013

SOME MEDICAL FOODS (TAMIL)


ஏலக்காய் -
இந்த நறுமணமுள்ள உணவுப் பொருளானது உடல் எடை குறைவதில் மிகவும் உதவியாக உள்ளது. மேலும் வாய் துர்நாற்றத்தை தடுத்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தினை -
தானியங்களில் தினையும் ஒரு சிறந்த கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருள். இது ராஜஸ்தானில் மிகவும் பிரபலமான, உடல் எடை குறைவதற்கும், அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள்.

முழு கோதுமை -
முழு கோதுமையானது உடலுக்கு மிகவும் சிறப்பான ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. எனவே முழு கோதுமையால் செய்யப்பட்ட உணவுகள் உடல் எடையைக் குறைப்பதற்கு, ஒரு சிறந்த உணவாக இருக்கும்.

கடுகு எண்ணெய் -
உணவுகளில் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க முடியாது. எனவே எண்ணெயில் கடுகு எண்ணெயை சேர்த்து சமைத்தால், அதில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.

பூண்டு -
பூண்டில், உடலில் சேரும் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருளான அல்லீசின் (Allicin) என்னும் பொருள் உள்ளது. எனவே ஆண்கள் இந்திய உணவுப் பொருளான பூண்டை, தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இதய நோய் வராமலும் தடுக்கலாம்.

முட்டை -
ஆண்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று. ஏனெனில் முட்டை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையையும்

No comments:

Post a Comment